Daily Archive: September 14, 2018

அது நானில்லை

  அன்புள்ள ஜெமோ ஒரு சங்கடமான கேள்வி. ஆனால் நாங்கள் நண்பர்கள் இதை உங்களிடமே கேட்கலாம் என்று நினைத்து இதை எழுதுகிறோம். — என்ற நண்பரை உங்களுக்குத் தெரியுமா? [புகைப்படம் இணைத்துள்ளோம்] ஏனென்றால் இந்த நண்பர் உங்களுக்கு மிக நெருக்கமானவர் என்று சொல்கிறார். நிறைய முறை உங்களைச் சந்தித்திருப்பதாகவும் பலவேறு அரசியல் விஷயங்களையும் இலக்கியக் கருத்துக்களையும் உங்களிடம் பேசியிருப்பதாகவும் சொல்கிறார். இவர்மேல் எங்களுக்கு ஏன் அவநம்பிக்கை வந்தது என்றால் இவருடைய பேச்சில் எப்போதும் இவர் உங்களை எப்படியெல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113024

ஈர்ப்பு- கடிதங்கள்

  ஈர்ப்பு அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். சுரேஷ் ப்ரதீப்பின் ஈர்ப்பு சிறுகதை படித்தேன். என்ன சொல்வது… என் வாசிப்புத்தான் சரியில்லையா என்று சந்தேகம் வர நண்பர் ஒருவரை படிக்கச் சொல்லிக் கேட்டேன். அவரும் என் கருத்தையே சொன்னார். வண்ணக் காகிதங்களால் காலி டப்பாவை அலங்கரித்து பரிசு கொடுப்பதுபோல் சீனு அவர்கள் இக்கதையைப் பற்றி அறிமுகம் கொடுத்து விவாதத்தை எழுப்பச் சொல்லிவிட்டார். எனக்கு இது கதையா கட்டுரையா அல்லது வேறு ஏதேனும் வகை வடிவத்தில் எழுதப்பட்ட கதையா என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113190

அம்பாரியானை

  இலக்கிய எழுத்தில் பெரிதும் புகழப்பட்ட எழுத்துகளில் பெரும்பான்மையும் உறவுச் சிக்கல்களை, விலக்கமும் நெருக்கமும் அச்சுகளாகி ஆடும் மானிட உறவுகளின் ஆட்டங்களை, அதன் ரகசியங்களைப் பேசியவையாகவே இருந்தன. வெகு குறைவாக அல்லது வெகு சில எழுத்தாளர்களே இந்த பேசுபொருளைத் தாண்டி வந்தனர். அப்படி வந்தவர்களில் இன்னும் சலித்தால் கிடைக்ககூடிய விரல் விட்டு எண்ணத்தக்க வகைப்பாட்டில் கிடைக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பவா செல்லத்துரை. அவரது இலக்கிய இடம் என்ன என்பதை இப்படிப் புரிந்து கொண்டிருக்கிறேன்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113215

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-5

பீமனுக்குப் பின்னால் சாத்யகி நடந்து வந்தான். காலடியோசை கேட்டு நின்ற பீமனை அணுகிய சாத்யகி “மூத்தவரே, நாம் உளம்சோரும் அளவுக்கு நிலைமை இன்னும் நம்மை மீறிவிடவில்லை. உண்மை, பீஷ்ம பிதாமகர் பேராற்றலுடன் நின்றிருக்கிறார். துரோணரும் சல்யரும் நிகராற்றலுடன் களம் நின்றிருக்கிறார்கள். ஆயினும் நமக்கு நம்பிக்கையூட்டும் ஒன்றுண்டு, நம் இளையோரின் ஆற்றல் நாம் எண்ணியதைவிட பல மடங்கு. ஒருநாள் போரை வைத்து நோக்கினால் நம் வீரர்களில் முதல்வன் அபிமன்யூவே என்கின்றனர் படைவீரர்கள். மறுதரப்பில் துரியோதனரின் மைந்தர் லக்ஷ்மணர் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112780