Daily Archive: September 13, 2018

கதைச் சித்திரங்கள்

  அன்புள்ள ஜெ.,     முன்பெல்லாம் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருவரைப் பார்த்தால் அவர் யார் வரைந்த ஓவியம் போல் இருக்கிறார் என்று நினைத்துக்கொள்வேன். ஓவியர்கள் என்றால் வாரப்பத்திரிகைகளில் வரையும் ஜெ., ம.செ., மாருதி, கோபுலு, அரஸ், ஸ்யாம்  இப்படி. உதாரணமாக நீங்களெல்லாம் ஜெ. அல்லது ராமு(கல்கண்டில் மட்டுமே இவர் வரைந்து பார்த்திருக்கிறேன்)வின் ஓவியம். உங்கள் வீட்டில் மற்றவர்களெல்லாம் மாருதியின் ஓவியங்கள். பி.வி.கிருஷ்ணன், தி.ஜானகிராமன் போன்றோர் மாயாவின் ஓவியம் – கஷ்க் முஷ்க் என்றுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112596/

தெய்வங்களைப் புரிந்துகொள்ளுதல்

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் அமேசானில் வாங்க கூப்பிடுதூரத்துத் தெய்வங்கள். பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, தங்களின் தெய்வங்கள்,பேய்கள் தேவர்கள் நூலை படித்த பின்பு நான் என் எண்ணங்களை கிழ்வருமாறு தொகுத்து கொண்டேன்.தங்களின் ரப்பர்,வெண்முரசு நாவல் வரிசைகள்,விஷ்ணுபுரம்,காடு,ஏழாம் உலகம் இவற்றை படித்து நான் சிறு பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஆனால் அதை அனுப்பும் அளவிற்கு என்னக்கு தைரியம் வரவில்லை. இது நான் அனுப்பும் முதல் பதிவு, தங்கள் வேலை பளுவிற்கு நடுவில் இதை பார்த்தால் நான் தொகுத்து கொள்ளும் முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112978/

ரிஷான் ஷெரீஃபுக்கு விருது

      இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம், 11 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘அரச இலக்கிய விருது வழங்கல் – 2018’ பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இலங்கை ஊடகவியலாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் நூலுக்கு ‘சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியத்துக்கான அரச சாகித்திய இலக்கிய விருது’ வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113152/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4

 பகுதி இரண்டு: தாள்வோன் இருள் விலகத் தொடங்கிய முன்புலரியில் படைகளை எழுப்பியபடி கொம்புகளும் முழவுகளும் ஒலித்துக்கொண்டிருந்தன. முதல் ஆணைக்கு அவர்களனைவரும் துயிலெழுந்தனர். அடுத்த ஆணைக்குள் காலைக்கடன்களை முடித்தனர். தொடர்ந்த ஆணைகளுக்கு உணவருந்தி கவசங்கள் அணிந்தனர். அரையிருளுக்குள் நிழல்கள் என அசைவுகள் கொப்பளித்த படையின் நடுவே பீமன் புரவியில் சென்றான். அவனைக் கண்டு தலைவணங்கிய சுருதகீர்த்தி “அவை கூடிவிட்டது, தந்தையே” என்றான். தலையசைத்தபின் அவன் யுதிஷ்டிரரின் மாளிகை முன் இறங்கி புரவியை ஏவலனிடம் அளித்துவிட்டு உள்ளே சென்றான். யுதிஷ்டிரரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112752/