Daily Archive: September 12, 2018

உணர்ச்சிகளும் கலையும்

    ஓர் உரையாடலில் இன்றைய இலக்கியத்தில் உணர்வெழுச்சிகளுக்கான [emotions] இடம் என்ன என்று கேட்கப்பட்டது.  நாம் இலக்கியத்தில் இன்று மெல்லுணர்ச்சிகளை இழந்துகொண்டிருக்கிறோமா என்று ஐயம் தெரிவிக்கப்பட்டது. இனிமேல் வரவிருக்கும் இலக்கியம் என்பது உணர்வெழுச்சிகளுக்கு எதிரானதாக, அறிவார்ந்த கூர்நோக்கு மட்டும் கொண்டதாக இருக்கும் என்றும் ஆகவே பகடி, அங்கதம் ஆகியவையே இனி இலக்கியத்தின் மையப்போக்காக இருக்கும் என்றும் ஒருவர் சொன்னார் ஆனால் இந்த வரிகளை ஏறத்தாழ இதேபோல ஆரம்பகாலப் பின்நவீனத்துவர் சொல்லி இருபத்தைந்தாண்டுகளாகின்றன. தமிழிலும் அது எதிரொலித்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19538

செயல்படுவோர் அளிக்கும் மீட்பு

    தன்மீட்சி இயற்கைக் கடலைமிட்டாய்   அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு, அலெக்ஸ் அவர்களின் நினைவேந்தல் கூட்டத்திற்கு நீங்கள் மதுரை வருவதாய் அறிவித்த நாள் எங்களுக்குள் ஒரு இனம் புரியாத உற்சாகம் தொற்றிக்கொண்டது.ஏனெனில் சென்ற வருடம் அலெக்ஸ் அவர்களின் மரணத்தை ஒட்டியே நீங்கள் மதுரை வந்து இருந்தீர்கள்.உங்களை மதுரை நோக்கி வர வைக்க அலெக்ஸ் தவிர்த்து வேறு ஒரு வழி இல்லை என மனதிற்கு படுகிறது. இந்த ஒரு வருட இடைவெளியில் கடந்து வந்த பாதை மிகுந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112972

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3

இரு கைகளையும் தூக்கி ஆர்ப்பரித்தபடி செருகளத்தின் முகப்பு நோக்கி ஓடிய அம்பையைத் தொடர்ந்து இருபக்கமும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்றனர். அவர்களின் குரல் கேட்டு அங்கே துயின்றுகிடந்த போர்வீரர்கள் அனைவரும் எழுந்தனர். ஒற்றைச்சரடால் கோக்கப்பட்ட பாவைகள் என ஒருவரால் ஒருவர் தூக்கப்பட்டு எழுந்து படைக்கலங்களைத் தூக்கி ஆட்டி போர்க்கூச்சலெழுப்பியபடி அவளுடன் பெருகிச்சென்றனர். துறுத்த கனல்விழிகளும் இளித்த வெண்பற்களும் பெருகிச்சுழலும் கைகளுமாக ஆழுலகத் தெய்வங்கள் அவர்களுடன் ஊடுகலந்து கொந்தளித்தன. கன்னங்கரு நிறத்தில் ஒரு நதி அலையடித்துச் சரிவிறங்குவதுபோல அப்படை முன்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112750