Daily Archive: September 11, 2018

இனக்காழ்ப்பும் இலக்கியவாதிகளும்

அன்புள்ள ஜெ வணக்கம். ஐரோப்பா பயணம் நன்றாகப் போகிறது என்று நம்புகிறேன். குடும்பத்துடன் செல்வதால் வழக்கமான உடனடி பதிவுகள் கிடைப்பதில்லை என்பது எங்களைப் பொறுத்த வரை ஒரு குறையே எனினும் அது எவ்விதமேனும் (பயணக் கட்டுரையாகவோ, கதையாகவோ) எங்களை வந்து சேரும் என்பதில் ஐயமில்லை என்பதால் பெரிய வருத்தமில்லை. இதே சூட்டில் ஒரு அமெரிக்கப் பயணமும் இந்த ஆண்டில் உண்டாகும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். இனி என் கேள்விக்கு வருகிறேன். எஸ்ரா மற்றும் உங்கள் எழுத்துகள், மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112954/

கைநெசவும் தனிவழியும்

      நம்பிக்கையின் ஒளி துகள் துகள் -கடிதம்     மதிப்பிற்குரிய ஜெயமோகன் அய்யாவுக்கு, பெரும் நன்றியோடு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சரியாக ஒரு வருடம் கடந்துவிட்டது உங்களை சந்தித்து. உண்மையிலேயே போன வருடம் இதே காலம் நானும் எம்மைபோன்ற நண்பர்களும் எடுத்துக்கொண்ட பணியில் கிடைத்த எதிர்மறையான சூழலின் காரணமாக தேங்கிக்கிடந்தோம். அன்றைய நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றத்தின் அந்த சமணதலத்தில் உங்களிடம் இருந்து உங்களுக்கு கிடைத்த ஜெகநாதன் அய்யாவின் வார்த்தைகளை அறிந்தேன். அதுதான் ஒவ்வொரு சோர்விலும், தேக்கத்திலும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112969/

சென்னையில் பேசுகிறேன்

  நண்பர்களுக்கு   வரும் செப்டெம்பர் 16 அன்று சென்னையில் பேசுகிறேன். மலேசியாவின் நவீன் மற்றும் நண்பர்கள் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து நடத்தும் விழா.   நவீன் எழுதிய மூன்றுநூல்கள் வெளியாகின்றன நீண்டு நிலைத்த நிழல்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட நவீனின் உரையாடல்களை நான் வெளியிட்டுப் பேசுகிறேன்  சு.வேணுகோபால், கவிதைக்காரன் இளங்கோ,நவீன், சரவண தீர்த்தா ஜீவகரிகாலன் ஆகியோர் பேசுகிறார்கள்.   நாள் 16/9/2018 இடம் இக்ஸா மையம் எழும்பூர் சென்னை பொழுது மாலை 6 மணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/113048/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-2

பாண்டவப் படைகளின் நடுவினூடாக காசிநாட்டு இளவரசி அம்பை கூந்தல் எழுந்து நீண்டு பறக்க பெருங்குரலெழுப்பியபடி ஓடினாள். ஒவ்வொரு ஆயிரத்தவர் குழுவுக்கும் இருவர் என காவலர் சிறிய மரமேடைமேல் வேலுடன் விழித்து அமர்ந்திருந்தனர். ஒவ்வொரு அக்ஷௌகிணியின் தொடக்கத்திலும் சிறு காவலரணில் எழுவர் தாழாப் படைக்கலங்களுடன் இருந்தனர். எவரும் அவளை காணவில்லை. பெருவெள்ளம் அகன்ற பின் சேற்றில் பரவிக் கிடக்கும் சருகுகளும் சுள்ளிகளும் தடிகளும்போல பாண்டவப் படை நிலம்படிந்து துயின்றுகொண்டிருந்தது. இரவிலெழுந்த நீர்வெம்மை மிக்க காற்று அவர்களின்மேல் அசையாது நின்றிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112713/