Daily Archive: September 10, 2018

சரியான வாழ்க்கையா?

  அன்புள்ள ஜெயமோகன், வெகு நாட்களாகக் கேட்க வேண்டும் என்று யோசித்த கேள்வி. உங்களிடம் இருந்து பதில் வருமென நினைக்கிறேன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறேன்; இந்தச் சூழலில் மாற்றம் என்பது நடந்துகொண்டே இருப்பது போல உணருகிறேன். மூன்று ஆண்டுங்கள் ஒரே அலுவகத்தில் வேலை செய்வது என்பது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. என் தந்தை ஒரு அலுவகத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணி புரிந்து அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35464

நம்பிக்கையின் ஒளி

தன்மீட்சி இயற்கைக் கடலைமிட்டாய்   செப்டெம்பர் 3 அன்று மதுரை சென்றபோது தலித் இயக்கத்தவரும் அலெக்ஸின் அணுக்கமான நண்பர்களுமான பாரிசெழியன், கொண்டவெள்ளை, ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரைச் சந்தித்தேன். நண்பர் வேணு வெட்ராயன் சென்னையிலிருந்தும், மயிலாடுதுறை பிரபு மாயவரத்திலிருந்தும் வந்திருந்தனர். மாலையில் பசுமலை சி.எஸ்.ஐ தேவாலயத்திற்கு சென்றோம். அலெக்ஸ் நினைவு நிகழ்ச்சியில் பேசினேன். ஓராண்டுக்குப்பின் அலெக்ஸின் மனைவியையும் மகனையும் மகளையும் சந்தித்தது துயரையும் மகிழ்ச்சியையும் அளித்தது. அவர்களுடன் தொடர்ச்சியாக பல வகையிலும் தொடர்பில்தான் இருக்கிறேன். அலெக்ஸின் அழகிய புகைப்படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112945

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-1

bow

பகுதி ஒன்று : விண்புரள்தல் குருக்ஷேத்ரத்தில் பாண்டவரின் படைமுகப்பில் அமைந்த கொடிமேடையில் காவலிருந்த பாண்டவ வீரனாகிய ஜலன் கீழ்வானில் ஒரு சிறிய செந்தீற்றலை கண்டான். அது ஓர் எரிவிண்மீன் என எண்ணி அதை சொல்ல தன்னருகே அமர்ந்திருந்த துணைக்காவலனாகிய சோமிதனை நோக்கினான். அவன் அரைத்துயிலில் கொடித்தூணுடன் உடலைச் சேர்த்து தலைகுனிந்து முகவாய் மார்பில் படிந்திருக்க அமர்ந்திருந்தான். அவனைத் தொட்டு “எரிவிண்மீன்!” என்றான் ஜலன். “ஆம்” என துயிலிலேயே சோமிதன் மறுமொழி சொன்னான். “எரிவிண்மீன்” என்றான் ஜலன். “ஆம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112683