Daily Archive: September 9, 2018

மோடி,அரசியல்,கருத்தியல்

மோடி அரசு, என் நிலைபாடு பணமதிப்பு நீக்கம், வரி, மோதி   அன்புள்ள ஜெ   நீங்கள் சொல்லிவிட்டதனால் உங்கள் அரசியல் நிலைபாடு குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை. அதைப்பற்றிய விவாதத்துக்கே வரவில்லை. நான் சொல்ல விரும்புவது முழுக்க வேறொன்று. என்னுடைய உண்மையான சந்தேகம். உங்கள் அரசியல் எண்ணம் பற்றி நீங்கள் எழுதியிருந்தவற்றைப்பற்றி என் நண்பர்களும் முகநூலில் உள்ள ‘பிரபலங்களும்’ எப்படி எதிர்வினையாற்றியிருந்தார்கள் என்பதைக் கண்டேன். இங்கே எவருக்கும் அரசியல் சார்ந்த நிலைப்பாடு ஏதுமில்லை. கண்மூடித்தனமான தனிநபர்க் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112994

கம்போடியா- நிறைவுப்பகுதி, சுபஸ்ரீ

  க்பால் ஸ்பீன் 26/07/18 – நாகரீகங்களின் வளர்ச்சியில் நீர்வளத்தின் பங்கு எப்போதுமே முக்கியமானதெனினும் கம்போடியாவின் கோவில்களில் நீர் மிகவும்முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. அனைத்து ஆலய வளாகங்களும், தடாகக் கரையிலோ, ஏரியின் மத்தியிலோ, நாற்புற அகழி சூழவோ,அல்லது கோவில்களுக்குள்ளேயே பல குளங்களுடனோதான் அமைக்கப்பட்டிருக்கின்றன.  கோவில்கள் மட்டுமன்றி க்மெரின் காலத்தில் மிகசெறிவான கால்வாய் இணைப்புகளும் பாசன முறைகளும் நிகழ்ந்திருக்கின்றன. டோன்லே சாப் எனும் மாபெரும் நன்னீர் ஏரி தவிர, இதர பலஏரிகளும் குளங்களும் இருந்திருக்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாக முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112886

ஈர்ப்பு

சுரேஷ் பிரதீப்பின் அருமையான கதை இது . தளத்தில் வெளியிட்டு ஒரு விவாதத்தை துவக்கிப் பாருங்கள் .பெரும்பாலும் இதில் இருக்கும் பெண் வெறுப்பை முதல் அலகாகவும்,  கதை சொல்லி ஆண்மை அற்றவன் என்பதை ”கண்டுபிடித்து ”அதை அடுத்த அலகாக கொண்டு மட்டுமே விவாதம் நிகழும் .     மாறாக கதை சொல்லி , இந்து  இருவருமே நிற்கும் உயரமும் ,அந்த உயரத்தை கொண்டு ,ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்வதுமே இந்த கதையின் ஆழம் .  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112908