Daily Archive: September 8, 2018

ஒருபாலுறவு, தீர்ப்பு

ஓரினச்சேர்க்கையும் இந்தியப்பண்பாடும் ஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன் ஆஸ்திரேலியா – ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017   அன்புள்ள ஜெ நீங்கள் சென்ற பத்தாண்டுகளாக ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக ஆக்கப்படவேண்டும் என்று எழுதியிருக்கிறீர்கள். அதற்கான மனு ஒன்றில் கையெழுத்திட்டதையும் முன்பு சொல்லியிருக்கிறீர்கள். இன்று வந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? விஜயகுமார்     அன்புள்ள விஜயகுமார் இத்தகைய விஷயங்கள் படிப்படியாகவே சமூக ஏற்பு பெறும் என்பதே என் எண்ணம். ஓருபாலுறவு என்பது ஒரு குணக்கேடு அல்ல, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112934

ஓரினச்சேர்க்கை

  ஜெ   நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன். எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12281

எகேலுவின் கதை

அன்பு ஜெயமோகன், ஆனந்த விகடன் இதழில்(29.08.2018) வெளியான அ.முத்துலிங்கம் அவர்களின் எகேலுவின் கதை எனும் சிறுகதையைப் படித்தேன். சமீபமாய் என்னை ஈர்த்த கதைகளில் அது முக்கியமானதாகப் பட்டது. மிக எளிய கதைதான்; எனினும், தவறவிடக்கூடாத கதை என்பதாகவும் தோன்றியது. மழையைப் பற்றி எகேலு சொல்வதாக அக்கதையில் ஒரு வாக்கியம் இடம்பெற்றிருக்கும் – “அதற்கு, உருவம் கிடையாது; நிறம் கிடையாது; எல்லை கிடையாது; திசை கிடையாது. தொடலாம். ஆனால், பிடிக்க முடியாது. மிருதுவானதும் அழகானதும். ஆகாயத்தின் மணம் அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112901