Daily Archive: September 7, 2018

மனுஷ்யபுத்திரன்,புதுத்திறனாய்வு

அன்புள்ள ஜெ,   நலமா?   தங்களுடைய புதிய காலம் என்ற விமர்சன நூலை இன்றுதான் முழுமையாக வாசிக்க முடிந்தது. எந்தக் கோட்பாட்டின் துணுயுமின்றி சுந்தரராமசாமி தரும் அனுபவ அழகியல் பதிவுகள் போல, அதில் படைப்பாளிகளின் படைப்பு நுணுக்கங்களைக் கண்டறிந்து விளக்கமாக எழுதியிருந்தீர்கள். இவ்வாறான விமர்சன நூல்கள் சமகாலத்தில் தங்களிடமிருந்து வருவதில்லை என்பது சற்று அயர்ச்சியைத் தருகிறது. ஒரு படைப்பாளியின் படைப்புலகினை எடுத்துக் கொண்டால் அவர்களது படைப்பின் நுணுக்கங்களையும் அதிலுள்ள  அநாதியான பாகங்களையும் ஆராய்ந்து கட்டுரையினை மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112627

அண்ணாவின் ஓய்வு

    அண்ணா [பி.பாலசங்கர்] சென்ற 31 -8-2018 அன்று பணி ஓய்வு பெற்றார். நேசமணி போக்குவரத்துக் கழகத்தில் கணிப்பொறி உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்து துறைக்கண்காணிப்பாளராக ஆனார். நாகர்கோயில் ராணித்தோட்டம் பணிமனை, பின்னர் திருவட்டார், படந்தாலுமூடு, தென்காசி என பல ஊர்கள். மிகப்பெரிய நட்புசுற்றம் கொண்டவர். ஆனால் அதிகாரத்தை அஞ்சாதவர். சண்டைக்காரர். ஆகவே பணிநாள் முழுக்க பந்தாடப்பட்டவர். களியக்காவிளை முபாரக் ஓட்டலில் ஒரு பிரிவு உபச்சார விருந்து. நான் தனியாகச் சென்றிருந்தேன். அண்ணாவின் மகன் சரத் அவருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112871

டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ்

பத்தாண்டுகள் முன்பு என நினைக்கிறேன். அது ப்ளாக்குகள் பரவலான காலகட்டம். எப்போதும் நிகழ்வதைப்போலசீண்டும் தன்மை கொண்ட, வம்பளக்கும், பண்பாட்டு அரசியல் வம்பு பேசும் ப்ளாக்குகள்தான் நண்பர்களிடையில் அதிகமாக வாசிக்கபட்டன. கல்லூரிகளில் விகடன், நக்கீரன் படித்த தலைமுறை மெல்ல வேலைக்கு வந்ததும் இதன் பக்கம் திரும்பினார்கள். செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் தவிர்த்து தாங்கள் இணையத்தில் படிப்பதாலேயே வெகுஜன அரசியலை தாண்டி தங்களுக்கு மேலதிக அரசியல் தெளிவு இருப்பதாகவும் எண்ணினார்கள் உலக அரசியலில் நடக்கும் சர்வதேச அரசுகளின் (உ.தா : அமெரிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112875