Daily Archive: September 3, 2018

குருதிச்சாரல் செம்பதிப்பு

  வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே. அன்னையரின் பார்வைக்கோணத்தில் கிருஷ்ணன் பாண்டவர்களுக்காக மேற்கொள்ளும் மூன்று தூதுகள் இந்நாவலில் காட்டப்படுகின்றன. போருக்கான அணிசேரல்கள், அரசவைக்கூடல்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112793/

ஐரோப்பா 10- ஒரு திருப்புமுனைப்புள்ளி

  சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரைக்கும்கூட நாகர்கோயில் கிறிஸ்தவக் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஒரு நுண்செய்தியை அறிந்திருப்பார்கள், லண்டன்மிஷன் ஃபாதர்களிடம் நாம் ஹிந்து என்றுகூட சொல்லலாம், கத்தோலிக்கர் என்று சொல்லிவிடக்கூடாது. அவர்களுக்கு ஹிந்துக்கள் மீட்புக்கு வாய்ப்புள்ள அஞ்ஞானிகள். கத்தோலிக்கர்கள் அவ்வாய்ப்பே இல்லாத திரிபுவாதிகள். சாத்தானுக்கு தங்களை அளித்துக்கொண்டவர்கள். அன்றெல்லாம் எங்களுக்கு கிறித்தவ சபைகளுக்குள் உள்ள போராட்டங்களெல்லாம் தெரியாது, லண்டன்மிஷன் சாமியார்களை கத்தோலிக்க சாமியார்கள் ஏதோ செய்துவிட்டார்கள் என்று புரிந்துகொண்டோம்.   உலக வரைபடத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வுகளில் ஒன்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112756/

நடையின் எளிமை- கடிதம்

  நடையின் எளிமை சார்   வணக்கம்.   ‘நடையின் எளிமை’ கட்டுரை வாசித்தேன். அது குறித்து சில கருத்துகளை சொல்லத் தோன்றுகிறது.   எளிய வார்த்தைகளால் இலக்கியம் சொல்லப்படும் வேண்டும் என்பதே சற்று நெருடலாக தோன்றுகிறது.  பொதுவாக,  ஒன்றை சொல்லி பிறவற்றின் மீதான மனத்திறப்பை உண்டாக்கும் இலக்கியத்திற்கு, வார்த்தை நுட்பம்தேவையாகதானிருக்கிறது.  வார்த்தை நுட்பங்கள் படைப்பின் தரத்தோடு சம்பந்தப்பட்டவை.  அவை  படைப்பின் உத்திக்கான அழகியலை  எடுத்தியம்புகிறது.   முன்பெல்லாம் தங்கள் படைப்புகளை வாசிக்கும்போது,  நீங்கள் உருவாக்கும் கலைச்சொற்கள் ஆரம்பக்கட்ட வாசகர்களை விலக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112343/

அலெக்ஸ் நினைவுப் பிரார்த்தனை

இன்று அலெக்ஸ் நினைவாக அவருடைய குடும்பத்தினர் நடத்தும் நினைவுப்பிரார்த்தனை மாலை 630 மணிக்கு. நிகழ்கிறது. பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] நான் காலையில் மதுரை வந்துள்ளேன்.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/112709/

கரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு

    துரைசாமி நாயக்கர் என்ற கதை நாயகரின் வழியே பயணிக்கிறது இந்த நெடுங்கதை. கிரா  கதை  சொல்லும்   இலக்கிய வடிவின் முன்னோடி. .அவரின்  குரலின் மூலம்  இந்தக்கதை சொல்லப்படுகிறது  கடும்  உழைப்பாளியான   நாயக்கரின்தெளிவான திட்டமிடலும் முன்னோக்கு சிந்தனைகளும்  வியாபார  நுணுக்கங்களும்   அவரை   பணக்காரராக ஆக்குகின்றன.   வெறும் ஐந்து ஏக்கர் கம்மம்புல் மட்டுமே  விளையும்  மானாவரி நிலம். பொக்கை மண்  என்று குறிப்பிடுகிறார்.  நாத்துக்கூளம் மட்டும் விளைவிக்க முடியும். அதாவது கம்புப்பயிர் கதிர் பிடிக்காமல் வெறும்புல்லாகவே வளர்ச்சி குன்றிவிடும். நாயக்கரின் அண்டை நிலங்களிலும் சாலைகளிலும் இருக்கும் சாணிகளை  பொறுக்கிச்  சேர்த்து நிலத்தில் போடுகிறார்.கோடை உழவு முறையாக செய்யப்படுகிறது. மண்  அரிப்பைத் தடுக்கிறார்.  மண்வளம் மேம்பட்டு கம்புப் பயிரில்  கதிர்கள் உருவாகி  மணிகள் விளைகின்றன. விரைவிலேயே ஒரு ஏக்கருக்கு  இரண்டு  கோட்டை என்ற  அளவில் மகசூல் எடுக்கிறார். சற்றேறக்குறைய  இரண்டு  டன்களுக்கு அதிகம் என புரிந்துக்கொள்கிறேன்.   இன்றுவரை  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112577/