Daily Archive: September 2, 2018

ஐரோப்பா 9- முடிவடையாத கலைக்களஞ்சியம்

உலகத்தில் தொலைந்துபோனவை எல்லாம் கடலடியில் இருக்கும் என்பார்கள், இல்லாதவை அனேகமாக பிரிட்டிஷ் மியூசியத்தில் இருக்கும். பிரிட்டிஷார் இருநூறாண்டுக்காலம் உலகை ஆண்டனர். உலகைக் கூர்ந்து நோக்கும் கண்கள் கொண்டிருந்தனர். அரியவை அனைத்தும் தங்களுக்கே என்னும் தன்முனைப்புடனும் இருந்தனர். ஆகவே லண்டனின் அருங்காட்சியகங்களில் உலகக் கலைச்செல்வங்களில் பெரும்பகுதி வந்து சேர்ந்தது.   லண்டன் புளூம்ஸ்பரி பகுதியிலுள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் 80 லட்சம் அரும்பொருட்கள் உள்ளன. உலகில் உருவான முதல் தேசியப் பொது அருங்காட்சியகம் இது . 1753ல் அயர்லாந்து மருத்துவரனான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112667

சர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,   வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய உங்கள் கருத்தை வாசித்தேன். சர்ச்சிலையும் ஹிட்லரையும் ஒப்பிடுவது அபத்தம் என்பது என் எண்ணம். சர்ச்சில் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அவர் இடத்தில் ஹிட்லர் இருந்திருந்தால் காந்தியின் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியிருப்பார். காந்தியை மரியாதையாக ஆகாகான் மாளிகையில் சிறைவைத்தவர் சர்ச்சில். காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தவர். சர்ச்சில் போரில் ஹிட்லரை வெல்லாமல் இருந்திருந்தால் உலகை ஹிட்லர் பேரழிவுக்கு உள்ளாக்கியிருப்பார்.   சர்ச்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112719

புனைவின் வழித்தடம்

  அன்புள்ள ஜெயமோகன்     நீண்ட நாட்களுக்குப் பின் கடிதம் எழுதுகிறேன்.     எனது எழுத்துக்கள் அனைத்தையும் மின்நூல்களாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.     புதிதாக வாசிக்க இயலாமலிருப்பது கவலையைத் தருகிறது.     தங்கள் சிறுகதைகளைக் குறித்து தனி மின்நூல் ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளேன்.   நூலைப்பற்றி கேசவமணி முன்னுரை அமேசானில் நூல் வாங்க https://www.amazon.in/Kesavamani/e/B0771662XG/ref=sr_ntt_srch_lnk_1?qid=1534993575&sr=1-1   அன்புடன், கேசவமணி

Permanent link to this article: https://www.jeyamohan.in/112318