Monthly Archive: September 2018

ரகசியச் சலங்கை

வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்,இசை …வாங்க ஒரு கவிதைத் தொகுதிக்குரிய தலைப்பு அல்ல இசையின் புதிய தொகுப்புக்கு. ‘வாழ்க்கைக்கு வெளியே பேசுதல்’ சமூகசீர்திருத்தக் கருத்துக்களின் குவியல் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. அட்டையும் விந்தையானது. வழக்கமாக கவிதைத் தொகுதிகளின் அட்டையிலுள்ள குறியீட்டுநவீன ஓவியம் இதில் இல்லை. ஓவியமும் முகநூல்பக்கமும் ஊடுபாவாக அமைந்த க்லவைச்சித்திரம். கிறிஸ்துவுக்கு பின்பக்கம் காட்டிப் படுத்திருக்கும் சிறுமியின் கோட்டோவியம் அளிக்கும் உணர்வு தனித்துவமானது   இசையின் கவிதைகள் மெல்லிய தற்கேலியையும், கள்ளமின்மையையும் தன் புனைவுப்பாவனையாகக் கொண்டவை. பகடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113591

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா   அன்பின் ஜெ,   முதலில் எழுதிய கட்டுரை, பாதியிலேயே நிற்கிறது; ஒரு கட்சி சார்பாக இருப்பது போல் உள்ளது என்னும் பின்னூட்டம் வந்த்து. அந்தக் கட்டுரையை எழுதும் போது, 1980 துவங்கிய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணம் என்ன என எனக்குள் தொகுத்துக் கொள்ளும் முயற்சிதான் அது.   ஆனால், சீர்திருத்தங்களும், திட்டங்களும் 1991 க்குப் பின்னும் நிகழ்ந்தன என்பதையும் தொகுப்பதுதான் சரியாக இருக்கும்.   1996 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113596

நூறுநிலங்கள் -கடிதங்கள்

    நூறுநிலங்களின் மலை வாங்க அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு   மனது சற்றே சலிப்புறும்போது  தங்களின் பிரயாணக் கட்டுரைகளை மீள்வாசிப்பு செய்வது ஒரு பழக்கமாகியிருக்கிறது.   //வெள்ளிமுடி சூடிய மலைச்சிகரங்கள் காலமின்மையில் அமைந்திருந்தன. மிகமெல்ல ஒரு தியானநிலை கைகூடி வந்தது. நானும் காலமற்றவனானேன். என் சிந்தனை கரைந்தழிய கண் மட்டும் உயிருடன் எஞ்சியது. ஏதோ ஒன்று நிகழ்ந்து மெல்ல மெல்ல மறைந்தது. // நூறு நிலங்களின் மலை…   அந்த கட்டுரைத் தொகுப்பிலேயே நானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113600

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21

லட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி, மூத்தவரே?” என்றான். லட்சுமணன் தலையசைத்தான். துருமசேனன் “இன்று படைவீரர்கள் சோர்ந்திருக்கிறார்கள். நேற்றும் அவர்களை கனவுகள் அலைக்கழித்தன என்கிறார்கள்…” என்றான். லட்சுமணன் “உம்” என்றான். “அதே கனவுகள்தான். பேயுருக்கொண்ட ஆழத்துதெய்வங்களும் விண்வாழ்தெய்வங்களும் மண்ணிலிறங்கி பூசலிட்டன” என்றான் துருமசேனன். “அவர்கள் சொல்வதை கேட்டால் இதுவரை மண்ணில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113359

பாலுணர்வை அறிதலும் எழுதுதலும்

  சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார்.  ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து  “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள்.   தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113632

தல்ஸ்தோய், அறம், கலை

தல்ஸ்தோய் உரை அன்புள்ள ஜெ,   நலமா? தல்ஸ்தாய் பற்றிய தங்கள் உரையை கேட்டேன். புனைவெழுத்தாளர்/அறச்சிந்தனையாளர் என்று தல்ஸ்தாயின் இரு அம்சங்களையும் தெளிவாக வகுத்துக் கூறியிருந்தீர்கள். புனைவெழுத்தாளராக தன்முனைப்பு கொண்ட நவீன எழுத்தாளரைப்போலவும் அறச்சிந்தனையாளராக புனித அகஸ்தின் காலகட்டத்தவரைப்போலவும் தால்ஸ்தாய் இருந்தார் என்ற கருத்து மேலும் சிந்திக்க வைத்தது. ஆம், தால்ஸ்தாயின் பெருந்தந்தைத்தனம் என்று நமக்கு வந்ததெல்லாம் ஒரு புனிதரின் மரபை அவர் அகம் தாங்கி வந்தமைந்ததால் தானோ என்று தோன்ற வைத்தது. இந்த இரு கூறுகளையும் ஒட்டி சில எண்ணங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113346

தரிசனங்களின் தலைவாயிலே இலக்கியம்

    அன்பு ஜெயமோகன், தல்ஸ்தோய் விழாவில் நீங்கள் பேசியதைக் காணொலியாய்க் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஸ்ருதி வலைக்காட்சி கபிலனுக்குக் கட்டாயம் நன்றி சொல்லியாக வேண்டும். நன்றி, கபிலன். தல்ஸ்தோய் குறித்த உங்கள் கருத்துக்களில் ’நேர்மையான இலக்கிய வாசிப்பின்’ அக்கறையே மிகுந்திருந்தது. சமீபமாய், படைப்புகளைக் காட்டிலும் வாசிப்பைப் பற்றியே அதிகம் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது அவசியமானதாகவும் படுகிறது. படைப்பாளனுக்கும், வாசகனுக்குமான உறவைப் படைப்பே நிறுவுகிறது என்றே துவக்கத்தில் கருதி இருந்தேன். வாசிப்புதான் படைப்பையே வாசகனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113323

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20

துரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து களைப்புடன் உடலை நீட்டிக்கொண்டு அருகே வந்து தலைவணங்கிய விகர்ணனிடம் தாழ்ந்த குரலில் சில ஆணைகளை பிறப்பித்துவிட்டு அவையை சிவந்த கண்களால் நோக்கினான். ஒருகணம் அவன் விழி வந்து தன்னை தொட்டுச்செல்வதைக் கண்டு லட்சுமணன் உளம் இறுகி மீண்டான். அவ்வப்போது அவனை அவையிலும் பொதுவிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113238

வாசிப்பில் ஓர் அகழி

இனிய ஜெயம் , அமிஷ் நாவல்கள் குறித்த வினாவுக்கு உங்களது பதில் வாசித்தேன் . அதில் ஒரு விளங்காத இடம் கிடந்தது உறுத்திக்கொண்டே இருக்கிறது . எந்த ஒரு பெஸ்ட் செல்லரும் தன்னளவில் ஒரு வாசிப்பு இயக்கத்தை உருவாக்குகிறது .அதன் படி பார்த்தால் உங்களது தேவை டான் ப்ரௌன்கள் கட்டுரையில் நீங்கள் சொன்னபடி, சேத்தன் பகத்தையும், டான் ப்ரௌனையும் ஒரு நூறு பேர் வாசிக்கும் நிலை இருந்தால்தான் அதிலிருந்து நுண்ணர்வு கொண்ட பத்து பேர் , ஓரான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113075

அகம்

பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய -ராக் இசைக்குழு அகம் அமைத்த பாடல்கள். மிகச்சிறந்த மரபிசைக்குரல்கள் உருவாக்கும் அதே அகக்கொந்தளிப்பையும் அமைதியையும் இப்பாடல்கள் உருவாக்குவது ஆச்சரியமானதுதான். ஹரீஷ் சிவராமகிருஷ்ணனின் குரல் அற்புதமானது          

Permanent link to this article: https://www.jeyamohan.in/113353

Older posts «