Daily Archive: August 15, 2018

நெருக்கடிநிலையும் நவீன இலக்கியமும்

  அன்புள்ள ஜெ   என் நண்பர்களின் குழுவில் ஒரு விவாதம் நிகழ்ந்தது. நவீன இலக்கியவாதிகள் எவருமே நெருக்கடிநிலைக் காலம் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நண்பர் ஒருவர் வாதிட்டார். நெருக்கடிநிலை பற்றிய நல்ல கதைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளனவா? அவை யாவை?   அருண் அன்புள்ள அருண்,   நெருக்கடிநிலை போன்ற அரசியல் நிகழ்ச்சிகளை ‘ஆவணப்படுத்துவது’ இலக்கியத்தின் வேலை அல்ல. அது அரசியல்வாதிகள், இதழாளர்களின் பணி. பொதுவாக இலக்கியத்தில் இத்தகைய புறச்சூழல்கள் இரண்டு வகையிலேயே வெளிப்படுவது வழக்கம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112115

கரடி- ஒலிவடிவில்

உச்சவழு வாங்க அன்பின் ஜெமோ, வணக்கம். நலமா ?. சமீபத்தில் உங்களது உச்சவழு சிறுகதை தொகுப்பினைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது .  வெற்றி, கெய்ஷா, ஒரு கணத்துக்கு அப்பால் , பெரியம்மாவின்  சொற்கள் என்று ஒவ்வொரு கதையும் விரிவாக பேச, ஆழ்ந்து யோசிக்க வைக்கும் கதைகளாவே எனக்கு தோன்றின . இத்தொகுப்பில் எனக்கு மிகவும் விருப்பமான கரடி கதையை “கதையாக” சொல்ல முயற்சித்து பதிவேற்றம் செய்திருக்கிறேன் . இவ்வாறான களை சொல்வதென்பது அக்கதைகளுக்கு செய்யும் அநீதி தான்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111498

தமிழரின் அறிவியல் – கடிதம்

தமிழனின் அறிவியல் ஜெ   வதந்திகளும் உலரல்களும் தமிழர்களின் சாதனையாக அறிவியலாக முன்வைக்கப்படுவது ஆழ்ந்த தாழ்வு உணர்ச்சியால் தான்.   வெண்முரசில் ஒரு வரி வரும் ஒருவன் தன்னுடைய உயரங்களையும் எல்லைகளையும் தெரிந்து கொள்வதே வாழ்வின் அறிதலின் தொடக்கம் என்று.   இதோ தமிழனின் மற்றும் ஓர் அறிவியல் சாதனை   https://www.vikatan.com/news/spirituality/132691-hindu-shrines-that-can-cure-diabetes-exclusive-deal.html     கதிர் முருகன்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/112083

இலக்கியத்திற்காக ஒரு தொலைக்காட்சி

    அன்புள்ள ஜெ.,   இலக்கியத்திற்காக தனி தொலைக்காட்சி “சானல்” சாத்தியமா? எந்த நாட்டிலாவது பார்த்திருக்கிறீர்களா?   அன்புள்ள,   கிருஷ்ணன் சங்கரன்     அன்புள்ள கிருஷ்ணன்   இலக்கியத்துக்கான தொலைக்காட்சிச் சானல் சாத்தியமே – யூ டியூபில். மற்ற சானல்கள்  பெரும்பாலானவை இன்று நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன,, சினிமாவுக்காகவே நடத்தப்படுவன உட்பட.  ஏனென்றால் அவற்றுக்குத்தேவையான அலுவலகம், ஊழியர்கள், பிற தொழில்நுட்ப அமைப்புகள் செலவேறியவை. மறுபக்கம் தொலைக்காட்சிகளுக்கான விளம்பர வருவாய் குறைந்தபடியே செல்கிறது. இணையம் வழியான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112119

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76

கரிச்சான் குரலெழுப்பிய முற்புலரியிலேயே சங்கன் விழித்துக்கொண்டான். முந்தையநாள் முன்னிரவிலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அன்று ஒளியறா மாலையிலேயே உணவு பரிமாறப்பட்டுவிட்டிருந்தது. பன்றியிறைச்சித் துண்டுகள் இட்டு சமைக்கப்பட்ட ஊனுணவை தொட்டியில் இருந்து பெரிய உருளைகளாக அள்ளி உண்டபடி இடக்கையில் இருந்த ஆட்டுத் தொடையையும் கடித்துத் தின்றான். வயிறு நிறைந்த உணர்வை அடைந்தபின் எழுந்து குடில் வாயிலுக்கு வந்து மெழுக்கு படிந்த கையை மண்ணில் துடைத்தபின் அங்கேயே படுத்து விண்மீன்களை பார்த்துக்கொண்டிருந்தான். பெரும்பாலும் திறந்த வானின் கீழ் வெறுந்தரையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111744