Daily Archive: August 11, 2018

சிலைத்திருட்டுக்கள்

உரிமைக்குரல் திரு ஜெ   சிற்பப் படுகொலைகள் என்றெல்லாம் ஆக்ரோஷமாக எழுதிய நீங்கள் தமிழகத்தில் ஏழாயிரம் சிற்பங்கள் திருடி விற்கப்பட்ட செய்தி வெளிவந்தபோது கொந்தளிப்பீர்கள் என ஒருமாசம் வரை எதிர்பார்த்து ஏமாந்தேன். திருடிவிற்றவர்கள் பார்ப்பனர்கள்தான் என்பதுதான் உங்கள் ஆழ்ந்த அமைதிக்கும் செய்தித்துறப்புக்கும் காரணம் என்று நினைக்கிறேன்.   ஜெயபாலன்   அன்புள்ள ஜெயபாலன்,   இச்செய்தி வெளிவந்தபோது இங்குள்ள திராவிட இயக்க ஆதரவாளர்கள் எழுதியதை அவ்வப்போது எவரேனும் எடுத்தனுப்பி கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். செய்தியை நான் துறந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111765

உலோகம் -கடிதங்கள்

அன்புள்ள￰ ஜெ ,   உலோகம் நாவலில் சார்லஸ் இயல்பான மனித உணர்வுக்குள்  ஆட்படும்  போதெல்லாம் அவனுள்  இருக்கும் உலோகம் ஞாபகத்திற்கு வருகிறது , உணர்வுகளில் இருந்து வெளிவந்து விடுகிறான்  . நாவல் சொல்லும் திசைக்கு எதிராகவும்  இதை பார்க்க முடியும் என்று தோன்றுகிறது . ஒருவருக்கு தனது அன்றாட வாழ்வும் ஆசைகளும்   தாண்டி ஒரு நோக்கம் இருக்குமானால் , அந்த நோக்கம் அவனை நகர்த்தும்  விசை நம்ப முடியாத அளவிற்கு  அபாரமானது . உங்களின் வெண்முரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111769

இரா முருகன், என்.எஸ்.மாதவன் -கடிதம்

இரா முருகன் மயில்மார்க் குடைகள் அன்பு ஜெயமோகன்   மயில் மார்க் குடைகள் என்ற என் கதை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை பத்து நிமிடம் முன்னால் தான் படித்தேன். ஏப்ரலில் நீங்கள் எழுதியதை எப்படி ஆகஸ்ட் முதல் வாரம் வரை படிக்க விட்டுப் போனதென்று தெரியவில்லை.  பத்ரி தளம் வழியாக உங்கள் தளத்து க்கு வந்து படிப்பது வழக்கம். எப்படியோ தவறியிருக்கிறது.   மிக்க நன்றி. உங்களின் பாராட்டு என்னைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது. நாவல் எழுதுவதோடு, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111996

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72

அவை மெல்ல தளர்ந்தமையத் தொடங்கியது. பெருமூச்சுகளும் மெல்லிய முணுமுணுப்புகளும் ஒலித்தன. அதுவரை அந்தச் சொல்லாடல் செல்லும் திசை எது என்பதே அவர்களை முன்னெடுத்துச் சென்ற விசையாக இருந்தது. அது கண்ணுக்குத் தெரிந்ததும் முதலில் மெல்லிய சலிப்பும் பின்னர் சோர்வும் அவர்களை ஆட்கொண்டது. அங்கிருந்து கிளம்பிச் செல்லவும் தங்கள் சிறிய பாடிவீடுகளுக்குள், அறிந்த சுற்றங்களுக்குள் ஒடுங்கிக்கொள்ளவும் அவர்கள் விழைந்தனர். உத்தரன் கண்களை மூடி குருதித்துளிகள் உடலுக்குள் உதிர்ந்து அமையும் ஓசையை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். அதுவரை எத்தனை உளவுச்சத்தில் இருந்திருக்கிறோம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111695