Daily Archive: August 10, 2018

அச்சிதழ்கள், தடம்

அன்புள்ள ஜெ., நலமா? நான் கடந்த முப்பத்தைந்து வருட காலமாக விகடன் வாசகன். பொழுதுபோக்குப் பத்திரிகை, வெகு ஜனப் பத்திரிகை என்ற வரையறையிலே கூட இலக்கியத்திற்கு மற்றும் சமூகத்திற்கு அதன் பங்களிப்பு மறுக்கக்கூடியதல்ல. “சங்க சித்திரங்கள்” தொடர் மூலம் தான் என்னைப்போன்ற பல்லாயிரம் வாசகர்களுக்கு உங்கள் அறிமுகம் கிடைத்தது. இப்போது காத்திரமான தீவிர இலக்கியப் படைப்புகளோடு “தடம் விகடன்” வந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கும் விகடனுக்கும் ஏற்பட்ட முரண்பாடுமற்றும் அதன் மூலம் நீங்கள் அடைந்த அவதிகள் துரதிருஷ்டவசமானது. பலருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111704

அண்ணன்களின் பாடகன் -கடிதம்

சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “ சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “ – ஒரு கடிதம் அருமையான பதிவு . மலேசியா வாசுதேவன் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளார் .தமிழில் சரியான உச்சரிப்பு ,குரலில் ஏற்ற இறக்கங்கள் யாவும் மலேசியா வாசுதேவன் பாடல்களில் காணலாம் .அந்தவகையில் இந்த பதிவில் அவர் பாடியதில் மிக அரிதாக கேட்கக்கூடிய பாடல்களை சுட்டிக்காட்டியதற்கு நன்றிகள் . இசை ஒன்றே மனிதனை கவலை ,மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்கும் அமுது . அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111717

அசோகமித்திரன் என்னும் அளவுகோல்- கடிதங்கள்

  அசோகமித்திரன் என்னும் அளவுகோல்   அன்புள்ள ஜெ   அசோகமித்திரன் கதைகளை ஓர் அளவுகோலாகக் கொள்வது பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அவர் யதார்த்தவாத எழுத்தில் ஒரு மாஸ்டர். ஆகவே அவ்வகையான கதைகளுக்கு அவரை ஓர் அளவுகோலாகக் கொள்ளமுடியும். ஆனால் யதார்த்தவாதம் இலக்கியத்தின் ஒரு சின்ன வகைப்பாடு மட்டும்தான்  இன்றைய புனைவுக்குத்தேவையாக உள்ள பலவகையான எழுத்துக்களை யதார்த்தவாதத்திற்குள் அடக்கிவிட முடியாது   அதோடு இன்றைக்குள்ள ஆவணப்படுத்தல்களின் துல்லியம் மேலும் மேலும் யதார்த்தவாதத்தின் இடத்தை இல்லாமலாக்கிக்கொண்டிருக்கிறது என்பதும் ஓர் உண்மை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111097

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71

உத்தரன் அர்ஜுனனின் முகத்தை மட்டுமே நோக்கினான். அருகே இருந்த மேற்கு நிஷாதஅரசின் ஹிரண்யநாபன் உத்தரனிடம் “என்ன சொல்கிறான் நாகன்?” என்றான். “படைகளை தூண்டும்பொருட்டு அவன் தற்கொடை அளிக்கவிருக்கிறான்” என்றான் உத்தரன். அவன் வாய் திறந்திருக்க உளமழிந்து வெறுமனே நோக்கினான். அர்ஜுனன் அரவானிடம் “உன்னை எவர் இங்கே அழைத்தது? உனக்கு பேச உரிமையளித்தவர் எவர்?” என்று திரும்பி சுரேசரை நோக்கி “அமைச்சரே, அரசர் அமர்ந்திருக்கும் இந்த அவையில் நேற்று வந்த இளையோன் எப்படி நுழைந்தான்?” என்றான். “நான் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111692