Daily Archive: August 7, 2018

கருத்துரிமையும் கேரளமும்

  பஷீரும் ராமாயணமும் மீறலும் ஓங்குதலும் அன்புள்ள ஜெ   பெருமாள் முருகன் விவகாரம் போலவே கேரளத்தில் ஓர் மதவாத எதிர்ப்பு வெடித்துள்ளதே? மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் மாத்ருபூமி இதழில் எழுதிக்கொண்டிருந்த மீசை என்னும் தொடர் இந்துத்துவர்களின் கடுமையான எதிர்ப்பால் நின்றுவிட்டது. கேரளம் முற்போக்காளர்களின் நாடு. அங்கே இத்தகைய மதவாதம் எப்படி உருவானது? ஆச்சரியமாக உள்ளது. உங்கள் எதிர்வினை என்ன?   செல்வக்குமார்   அன்புள்ள செல்வக்குமார்,   கேரளத்தில் முற்போக்குச் சிந்தனையே முதன்மையாக ஓங்கியிருக்கிறது என்பதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111722

கம்போடியா – ஒரு கடிதம், சுபஸ்ரீ

அன்புநிறை ஜெ, 21/07/18 – மேகங்கள் முற்றிலும் விலகாத காலை. கதிர் விழிபடாத சிங்கையின் முற்பகலை மென்மழை நனைத்துக்கொண்டிருந்தது. எதிர்வரும் வாரத்தின் உள்ளடக்கம் விமான நிலையம் நோக்கி விரையும் பயணத்தை மேலும் பரபரப்போடு அழகாக்கியிருந்தது. ஏழு நாட்கள் கம்போடியா பயணம், மனதுக்கு நெருக்கமானவர்களுடன். விமான நிலையத்தில் ஏற்கனவே வந்துவிட்ட உங்களையும், அருணா அக்கா, சைதன்யா, அஜிதன் அவர்களையும் பார்க்க விரைந்து கொண்டிருக்கிறேன், திட்டமிட்டிருந்ததை விட சற்றுத் தாமதமாகிவிட்டது. அஜியைத் தவிர அனைவரையும் ஏற்கனவே சந்தித்துப் பழகியிருக்கிறேன். எனினும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111947

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68

புலரி எழத்தொடங்கியபோது உத்தரன் தன் படைமுகப்பிலமைந்த சிறுமுற்றத்தில் வில்பயின்றுகொண்டிருந்தான். நூறு அகல்சுடர்கள் நிரையாக ஏற்றி வைக்கப்பட்டிருக்க அவன் அம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுடர்களை அணைத்தன. எட்டாவது அம்பு குறிபிழைத்ததும் வில்லை தரையில் ஊன்றி சலிப்புடன் தலையை ஆட்டியபடி திரும்பியபோது அங்கு நின்றிருந்த தன் ஒற்றனும் அணுக்கனுமாகிய கஜனை பார்த்தான். ஏவலன் அளித்த பன்னிரு அம்புகளை எடுத்து மேலும் எய்தான். அவற்றில் ஒன்பதாவது அம்பு பிழைத்தபோது வில்லை திரும்ப அளித்துவிட்டு கஜன் நின்றிருக்கும் இடத்தை பார்த்தான். அவன் நோக்குபட்டதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111726