Daily Archive: August 6, 2018

பெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்

  பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் அன்பு ஜெ ,   எழுத்தாளர்களில் ஆண்பெண் பேதமின்மையைப் பற்றிய சில கருத்துக்களைத் தங்களது தளத்தினில் கண்டேன். இருபாலார்கும் உள்ள அனுபவங்கள் , புரிதல்களின் நிலைப்பாடுகள் வேறுபடும் போது  , அவர்களின் சொல்லாக்கங்களும் வேறுபடுகின்றனவே.   பெரிய எழுத்தாளர்களைப் பற்றின பேச்சில்லை இவை. சாதாரண குடும்பபெண்ணின் நிலைப்பாடுகள் பற்றியன.  பெண்னென்பவள் மாறுபடுகிறாள்.அவள் சராசரி பெண்களைப் போல நல்ல குடும்பதலைவி என்ற பட்டத்துடன் , குழந்தைகளைத் திறன் பட வளர்த்தல் , வீட்டை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111904

மாத்து

நகைச்சுவை   கொஞ்சம் முதுகுவலி இருப்பது உண்மைதான். அதைச் சொல்லியிருக்கக் கூடாது.நண்பர் ஆதுரத்துடன் “எங்க வலீன்னு சொன்னீங்க?”என்றார். “முதுகிலேங்க” என்றேன். “சொன்னா தப்பா ந்னைக்கப்பிடாது. வேற எங்கவேணுமானாலும் வலி வரலாம். முதுகிலே மட்டும் வலி வரப்பிடாதுங்க. நாமள்லாம் மிடில்கிளாஸ். முதுகுதானுங்களே எல்லாமே?” நான் மையமாகத் தலையசைத்தேன். வேறு எங்கெல்லாம் வலி வந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டியதில்லை என்று சிந்தனை ஓடியது ”இந்த அலோபதி வேஸ்டு. போய் விளுந்திராதீக. ஆயிரம் டெஸ்டு வைப்பான். அப்றம் ஒண்ணுமே இல்லேம்பான்” என்றார் அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72144

துன்பக்கேணி

அன்புள்ள ஜெ., புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான “கண்மணி கமலாவுக்கு..” என்றொரு  மாபெரும் சோகச் சித்திரம் படித்தேன். பல கடிதங்களை கண்டசாலாவின் சோகப்பாடல்கள் பின்னணியில் ஒலிக்கத்தான் படிக்க முடிகிறது.ஒவ்வொரு கடிதமும் ஒரு இருபதாம் நூற்றாண்டு முழுநேர எழுத்தாளனின் நிலையில்லாமையை பதிவு செய்யும் ஆவணம். 1938 முதல் 1948 வரையில் வெவ்வேறு ஊர்களிலிருந்து எழுதப்பட்டவை. நிறையக் கடிதங்கள் “நம் 1, சாலே மேன்ஷன், டக்கர்ஸ் லேன், ஜி டி” யிலிருந்து(சென்னை ஜார்ஜ் டவுன் தான்)  மனைவி கேரளாவில் இருக்கிறார். ஊர் குறிப்பிடவில்லை. ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111513

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67

பீஷ்மரின் குடில் முற்றத்துக்கு வந்ததும் சகதேவன் “நாம் மாதுலர் சல்யரை சந்திக்கவேண்டும். பிதாமகர் பால்ஹிகரையும் இன்னும் சந்திக்கவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “ஆம், அவர்களிடம் நம் எண்ணத்தை நாம் முழுமையாக சொல்லவில்லையா?” என்றார். சகதேவன் திரும்புவதற்குள் அஸ்வத்தாமன் அருகே வந்து “மத்ரநாட்டரசர் சல்யர் தங்களுக்காக இன்னொரு குடிலில் காத்திருக்கிறார், அரசே. பிறருடன் சேர்ந்து தங்களை சந்திக்க அவர் விரும்பவில்லை. அந்நிரையில் தான் இல்லை என்று மறுத்துவிட்டார்” என்றான். “ஆம், அதுவே முறை” என்றார் யுதிஷ்டிரர். அஸ்வத்தாமன் அவர்களை யானைத்தோல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111684