Daily Archive: August 5, 2018

பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் ஜெ,   பெண் எழுத்து பற்றிய அந்த விவாதம் பெண்ணியமும் பெண்களின் எழுத்தும் போகன் எழுதிய ஒரு பகடிக்குறிப்பில் இருந்து ஆரம்பமானது. அதற்கு பெருந்தேவி எழுதிய எதிர்வினை முக்கியமானது என நினைக்கிறேன்   ஆர் செக்சிஸ்ட் ‘நகைச்சுவை’: சிரிக்காதிருப்பதன் அரசியல் பெருந்தேவி   “Sexist humor does not just incidentally incorporate sexist beliefs-it depends upon those beliefs for the fun” (Merrie Bergmann)   முதலில் இக்கட்டுரையை சில கருத்தியல், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111864

வாசிப்பின் நிலை- கடிதம்

அன்புள்ள சார்,   தமிழில் எழுதுவது சற்று கடினமாகவேதான் உள்ளது அதுவும் அலைபேசியில் முயற்சிப்பது இன்னும் கடினம் தான். ஆனாலும் விடுவதாக இல்லை. முதல் கடிதம் ஆற்றாமையில் எழுதியது பல வருடங்களாக தினமும் என்னுடன் பேசி கொண்டு இருந்த நீங்கள் திடீரென பேச்சை முறித்து கொண்டது போல ஒரு உணர்வு. ஆனால் அது ஒரு நல்ல தொடக்கத்தை அமைத்து விட்டது இல்லையென்றால் நானெல்லாம் எழுதியிருக்கவே மாட்டேன் அலுவலகத்திற்கு வெளியே செயலின்மையின் இனிய வெறியில் திளைப்பவன் நான். நானும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110837

விளையாட்டு- கடிதங்கள்

  விளையாட்டு பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,   வணக்கம்.   தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி பற்றிய வாசகரின் கேள்வியொன்றிற்கு உங்களின் பதிலை படித்து ஏமாற்றமடைந்தேன்.ஏனெனில் கடந்த வாரம் மலைநாட்டு வைணவ திருப்பதிகளை சேவிப்பதற்காக கேரளா வந்தபோது சிறிய கிராமங்களில் கூட பெரிய பெரிய பிளக்ஸ் பேனர் வைத்து சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களின் (பிரேசில்,அர்ஜன்டைனா போன்ற )முழுஉருவ படங்களுடன் கொண்டாடி கொண்டிருந்தது பார்ப்பதற்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.தமிழகம் முழுவதும் ஒன்றுக்கும் உதவாத அரசியவாதிகள் மற்றும் திரைப்பட பிரபலங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111177

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 66

கௌரவப் படையின் முகப்பு அஸ்வத்தாமனால் ஆளப்பட்டது. தொலைவிலேயே அவனும் இரு படைத்தலைவர்களும் படை முன்னணிக்கு வந்து கைகூப்பியபடி நிற்பதை பார்க்கமுடிந்தது. யுதிஷ்டிரரும் இளையோரும் ஏறிய தேர்கள் செருகளத்தின் செம்மண் பூழியில் சகடத்தடம் பதித்தபடி சென்று கௌரவப் படைகளின் விளிம்பை அடைந்தன. அரசரை வரவேற்பதற்குரிய முழவுகளும் கொம்புகளும் ஏழுமுறை எழுந்தமைந்து ஓய்ந்தன. யுதிஷ்டிரர் கைகளைக் கூப்பியபடி தேரிலிருந்து இறங்கி நடந்தார். கையில் மலர்க்குடலையுடன் அவருக்கு வலப்பக்கம் அர்ஜுனனும் இடப்பக்கம் பீமனும் சென்றனர். தொடர்ந்து வந்த தேரிலிருந்து நகுலனும் சகதேவனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111675