Daily Archive: August 4, 2018

ஐரோப்பாவுக்கு மீண்டும்…

    சென்ற 2016 ஜூன் 10 அன்று ஐரோப்பாவுக்கு ஒரு சுற்றுப்பயணம் சென்றேன். லண்டன் சென்று சிலநாட்கள் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து காரில் பாரீஸ் சென்றோம். காரிலேயே  இத்தாலி ஆஸ்திரியா ஜெர்மனி பெல்ஜியம் பிரான்ஸ் வழியாக மீண்டும் லண்டன் வந்து ஊர்திரும்பினேன். அருண்மொழியும் உடனிருந்தாள் இப்போது மீண்டும் ஒரு ஐரோப்பா பயணம் சென்றமுறை விடுபட்ட இடங்கள். இன்று [4-8-2018]  சென்னையில் இருந்து அருண்மொழியுடன் கிளம்புகிறேன். நேராக ஃபிராங்பர்ட். அங்கே லண்டன் நண்பர்கள் வருவார்கள்.ஐரோப்பாவை காரில் சுற்றிவருகிறோம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/111927

அன்னைக்கு இரண்டு கவிதைகள் 

லக்ஷ்மி மணிவண்ணன் நாகர்கோயிலில் இருந்து நடத்திக்கொண்டிருந்த சிலேட் இதழில் 1992ல் நான் எழுதிய இரண்டு கவிதைகள் இவை. சமீபத்தில் இதை கவிஞர் கைலாஷ் சிவனின் இணையதளத்தில் கண்டடைந்தேன். நன்றி பிறவாத கவிதை கைலாஷ் சிவன் இணையதளம் 1. என் முகம் சகல அகங்காரங்களுடன் கூறுகிறேன் என் முகமே யாவும் இந்த மலை இந்த வெளி இந்நீல இரவு எங்கும் தொட்டெழும் பேரொளி என் முகமே அழகு என் முகமே நிஜம் துளித்துளியாக என் அன்னை உயிர்உறிஞ்சி உடலுறுஞ்சி உருவான வடிவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111646

தணியாத தாகம் -கடிதங்கள்

தணியாத தாகம்   அன்புள்ள ஜெ,     பெண்களைப்பற்றிய தொடரில் மௌனி எழுதிய கதைபற்றி வாசித்ததும் ஒரு எண்ணம் வந்த்து. பாரதி முதல் இலட்சியக்காதலி என்ற கருத்து எப்படியெல்லாம் உருவாகி இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வந்தீர்கள்.  அதில் உச்சகட்ட இலட்சியக்காதலி மௌனி முன்வைப்பதுதான். இலட்சியம் மட்டும்தான் இருக்கிறது காதலே இல்லை.   செல்வா     அன்புள்ள ஜெ     தமிழிலக்கியத்தின் பெண்கள் எப்படியெல்லாம் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விவாதிக்கும் இலக்கியத்தொடர் அவ்வப்போது என வெளிவந்துகொண்டிருந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111783

பெண் எழுத்தும் இலக்கியமும்

    பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்   ஜெ இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் பெண்கள் பலருக்குப் புரியாத விசயம் ஒன்றுதான். பெண்ணியம் என்பது ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்தமான புறப்பார்வையாக இருக்க முடியாது. அது ஒரு ஐடியாலஜி. அவ்வாறான எல்லா கொள்கைகளுக்கும் ஓர் எல்லை உள்ளது. அது பொதுவானது. புறம் சார்ந்தது. அதை எங்கிருந்து வேண்டுமென்றாலும் பெற முடியும். நேஷனலிசம், என்விரான்மெண்டலிட்ம், மார்க்ஸிசம் என்பவை போன்று ஒரு objective idea தான் பெண்ணியமும். அதற்குச் சிந்தனையில் பெரிய மதிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111860

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 65

துணைப்படைத்தலைவனாகிய கஜன் குனிந்து கூடாரத்திற்குள் நுழைந்து முழந்தாளிட்டு அமர்ந்து தலைவணங்கி “மாமன்னர் யுதிஷ்டிரரின் அவைக்கு தங்களுக்கு அழைப்பு வந்துள்ளது, இளவரசே” என்றான். தரையிலிட்ட மரவுரிக்கு மேல் அமர்ந்து சிறுபீடத்தில் ஓலைகளை வைத்து படித்துக்கொண்டிருந்த உத்தரன் நிமிர்ந்து உள்ளத்தில் எஞ்சிய சொற்கள் விழிகளில் நிற்க “எப்போது?” என்றான். “முடிந்த விரைவில்” என்று கஜன் சொன்னான். “புரவிகளை சீர்செய்க!” என்றபின் அருகே கிடந்த மேலாடையை எடுத்தபடி உத்தரன் எழுந்தான். யானைத்தோல் இழுத்துக் கட்டப்பட்ட அந்தச் சிறிய கூடாரத்திற்குள் தலைநிமிர்ந்து நிற்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111635