Daily Archive: August 3, 2018

பெண்ணியமும் பெண்களின் எழுத்தும்

  நாஞ்சில்நாடன் பட்டியல் பொதுவெளியில் பெண்கள்… பெண்களின் எழுத்து… பெண்ணிய வசை பெண்களின் அறிக்கை பெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம் அம்பை அம்பையின் ஊடக தந்திரம் ஜெ   இளங்கோ கிருஷ்ணன் முகநூலில் இவ்வாறு எழுதியிருந்தார்.   ஆண் எழுத்தாளர் பெண் எழுத்தாளர் என்று பாகுபடுத்துவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. எழுத்துதான் இருக்கிறது அதில் ஆண் பெண் பேதம் இல்லை.   நன்றாக எழுதுகிறார் என்று ஒருவர் இன்னொருவரை ஏற்பதுகூட ஒருவகை அந்தரங்கமான வாசிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111801

நான் எழுதலாமா? -கடிதங்கள்

நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,   நான் எழுதலாமாவெனும்  கேள்வியுடன் உங்களுக்கு அனுப்பப்பட்ட பத்தாண்டுகளுக்கு  முன்பான ஒரு வாசகரின் கடிதத்தையும் அதற்கான தங்களின் பதிலையும்  இன்று வாசித்தேன்.   நான் தமிழில் தட்டச்சி உங்களுக்கு எழுதி, நீங்கள் தளத்தில் பிரசுரித்த ஒரே ஒரு கடிதத்தின் பிறகு முற்றிலுமாய் மாறிப்போன என் வாழ்வைக் குறித்து   சொல்லிக் கொள்ளவே இதை எழுதுகிறேன்   பலவருடங்களுக்கு முன்பெல்லாம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மாய்ந்து மாய்ந்து கைவிரல் வலிக்க  கடிதங்கள் அதிகம் எழுதிக்கொண்டிருந்தேன்  கண்ணில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111188

சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்

    ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   புதுப்பட்டி ஆர்.சி தெருவிலிருந்து ஒரு சிறுவனாக தன்னை உணரும் கதைசொல்லி சிலுவைராஜ் தன்னையும் தன் சூழலையும் நிமித்தமாகக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறான். புதுப்பட்டியின் வறுமையும் அவ்வறுமை உப-விளைவாய் உருவாக்கியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் பாரபட்சமும் அக்கதையில் காலமாற்றத்துக்கு ஏற்ப வெவ்வேறு விதமாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.   புதுப்பட்டி ஆர்.சி தெரு சிறுவர்களின் வறுமையான சூழலிலிருந்து ஆறுதல் அளிப்பவையாக அச்சிறுவர்களின் ஓயாத விளையாட்டும்  திருவிழாக்களும் இருக்கின்றன. சிறுமலை தேவாலயத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111476

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 64

திருஷ்டத்யும்னனின் யானைத்தோல் கூடாரத்திற்குள் இருந்து வெளியே வந்தபோது ஸ்வேதனின் விழிகள் கூசின. கூடாரத்திற்குள் போதிய ஒளி இருந்தது. ஆனால் வெளியே பின்னுச்சிப்பொழுதின் வெயில் கண்களை நிறைத்து விழிநீர் பெருகச்செய்தது. நெடுநேரமாக தோல்பரப்பில் வரையப்பட்ட வரைபடங்களில் மெல்லிய கோடாக குறிக்கப்பட்டிருந்த வழிகளையும் செம்புள்ளிகளாகவும் நீலப்புள்ளிகளாகவும் தெரிந்த இடங்களையும் கூர்ந்து நோக்கியமையால் கண்கள் களைத்திருந்தன. வெளியே வந்தபோது முன்னுச்சிப் பொழுதில் இருந்து அங்கே கேட்டு அறிந்த அனைத்தையும் முற்றாக மறந்துவிட்டதாக உணர்ந்தான். நல்லவேளையாக அனைத்தையும் அவ்வப்போது ஓலையிலும் பொறித்துக்கொண்டோம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111240