தம்பி [சிறுகதை] அன்புடன் ஆசிரியருக்கு பேய்க்கதைகள் தேவதைக்கதைகள் நூலில் என்னை அதிகமாக அச்சுறுத்திய கதை தம்பி. அக்கதையை மீண்டும் இன்று வாசித்தேன். அக்கதையில் இருக்கும் தர்க்கப்பூர்வமான ஒரு தளம் தான் கதை முடியும் போது அத்தகைய பயத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என்று நினைக்கிறேன். சரவணன் பியூட்டிஃபுல் மைண்ட் படம் பார்த்து வருகிற அன்றிரவில் இருந்து தான் செந்தில் அவனுக்குள் நுழைவதற்கான விருப்பம் உருவாகிறது. அடக்கமான ஜான் நாஷுடன் கட்டற்ற ஒரு குடிகாரனும் அழகான சிறுமியும் …
Daily Archive: August 2, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/111148
சிலுவைப்பாடு – காளிப்பிரசாத்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெ, ராஜ்கெளதமன் அவர்களைப் பற்றி இலக்கிய முன்னோடிகளிலும் நமது தளத்திலும் படித்திருந்தாலும் அவரை முழுவதுமாக படித்து அறிய ஒரு நல்வாய்ப்பு இந்த விருது நிகழ்வு. முதலில் சிலுவைராஜிடமிருந்துதான் துவங்கினேன். சிலுவையும் மற்ற குழந்தைகளைப்போல பிறந்தவுடன் குவா குவா என்றுதான் அழுதான் என்ற அறிமுகத்துடன் நாவல் துவங்குகிறது. இது ஆரம்பத்தில் சிரிப்பை வரவழைத்தாலும் நாவலை முடித்தவுடன் மீண்டும் இந்த வரியைப் படிக்கவேண்டும். அது அளிக்கும் உணர்வுகளே வேறு. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111548
தளம் -கடிதம்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு சனிக்கிழமை இரவு உணவின்போது என் பதின்வயது மகளுடன் பள்ளி நிகழ்வுகளைப் பேசிக்கொண்டிருந்தேன். ஆர்வமுடன் பல்வேறு விஷயங்களை அவள் விளக்கிக்கொண்டிருந்தபோது கடவுள், வழிபாடு சார்ந்த சில கேள்விகள் எழுந்தன. ‘இந்து மதம் எப்படி ஆரம்பித்தது’? என்று கேட்ட அவளின் கேள்விக்கு கிட்டத்தட்ட ஒருமணிநேரம் வேதத்திலிருந்து தொடங்கி, தரிசனங்கள், தெய்வங்கள், வழிபாடுகள் என ஒருவகையாக தொகுத்து ( சொல்லச் சொல்ல எனக்கே ஆச்சரியமாக இருந்தது!) விளக்கினேன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111643
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 63
அரவானும் ஸ்வேதனும் பாண்டவப் படைப்பெருக்கினூடாக ஒழுகிச்சென்றனர். படையின் பொதுவிரைவை உடலால் கற்றுக்கொண்ட புரவிகள் சீரடி எடுத்துவைத்து சென்றன. விழிசரித்து பல்லாயிரம் குளம்புகளை பார்க்கையில் அவை நன்கு வகுக்கப்பட்ட அசைவுகளால் அலைகள் என தெரிந்தன. உடல் மிக எளிதாக கற்றுக்கொள்கிறது, விலங்குகளின் உடல் மேலும் எளிதாக என்று ஸ்வேதன் எண்ணினான். அவ்விலங்குகளின் உடல்களிலிருந்து அதை ஊர்பவர்கள் படையின் ஒத்திசைவை பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் உடலிலிருந்து உள்ளத்திற்கு அவ்வொத்திசைவு சென்றது. ஒவ்வொரு எண்ணத்திலும் திகழ்ந்த அந்தத் தாளம் அவர்களை சொல்லெடுக்க முடியாதவர்களாக்கியது. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111632