Monthly Archive: August 2018

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு

  ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு லண்டனில் மிக மையமான ஓர் இடத்தில் ராய் மாக்ஸம் வசிக்கிறார். அவர் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பிவந்து கையிலிருந்த பணத்துக்கு வாங்கிப்போட்ட இடம் அது. இன்று அது மிக மதிப்பு மிக்கது. கீழே கடைகள். மேலே அவருடைய இல்லம். அவர் மணம் செய்துகொள்ளாதவர். அவருடைய முன்னாள் தோழிகள் அன்றி இப்போது துணை எவருமில்லை. தானாகவே சமையல்செய்துகொள்கிறார். சன்னல்களில் வளர்ந்திருக்கும் செடிகளுக்கு நீரூற்றுகிறார். நாகரீகமான, பிரிட்டிஷ்த்தனமான, பிரம்மசாரி அறை. நிறைய ஒலிநாடாக்களைக் கண்டு நான் புன்னகைத்துக்கொண்டேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112499/

அலெக்ஸ்- நினைவுப்பிரார்த்தனை

அஞ்சலி வே.அலெக்ஸ்   நண்பர் அலெக்ஸ் மறைந்து ஓராண்டு ஆகிறது. வரும் செப் 3 அன்று பசுமலை சி.எஸ்.ஐ சர்ச் கம்யூனிட்டி ஹால் [Pasumali CSI Church Community Hall] லில் அவருக்கான சிறப்பு நினைவுகூரல் பிரார்த்தனை நிகழவிருக்கிறது. நான் கலந்துகொள்கிறேன். விருப்பமிருக்கும் நண்பர்கள் உடன் வரலாம்   ஜெ     அலெக்ஸ் நினைவுகளும் பசுமைக்காடுகளும் அலெக்ஸ் நினைவுகள் குறிப்புகள் அலெக்ஸ் கடிதம்   

Permanent link to this article: https://www.jeyamohan.in/112496/

தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ்

  அன்புள்ள ஜெயமோகன்,   கடந்த 2, 3 மாதங்களாக ஒரு பெரும் வாசிப்பு சுழலுக்குள் சிக்கி திளைத்துக் கொண்டிருக்கிறேன். எதேச்சையாக கால்பங்கு கரமசோவ் சகோதரர்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்து தொடரமுடியாமல் அதிலிருந்து விலகி கான்ஸ்டன்ஸ் கார்னெட் (Constance Garnett) ஆங்கிலமொழிபெயர்ப்புக்கு வந்து அது என்னை ஒரே வீச்சில் இழுத்துக்கொள்ள அதுகொடுத்த தெம்பில் அடுத்து அடுத்து உலக பேரிலக்கியங்களை ஆங்கிலத்தில் வாசித்து வருகிறேன்.   கரமசோவ் சகோதரர்களுக்கு அடுத்து நான் படித்த புத்தகம் தாமஸ் மண்ணின் “புடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112465/

காடு- கடிதங்கள்

  காடு அமேசானில் வாங்க காடு வாங்க     மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   சென்ற மாதம் காடு நாவல் வாசித்து முடித்தேன். சுமார் ஒரு வாரம் இதைப்பற்றி யாரிடமும் பேச பிடிக்கவில்லை. இந்த கடிதத்தை இப்போது ஏன் எழுதுகிறேன் என்றும் தெரியவில்லை. இதை நீங்கள் வாசிப்பீர்களா என்றும் உறுதி இல்லை. ஆனாலும் எழுதுகிறேன்.     பொதுவாக, என்னை பாதித்த விஷயங்களை என் மனைவியோடு உடனுக்குடன் பகிர்வதுண்டு. ஆனால் இந்த நாவல் எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112471/

ஐரோப்பா-6,மேற்குமலைமுடி

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஒருகாலகட்டத்தில் பள்ளிக்கல்வியின் தவிர்க்கமுடியாத பகுதியாக இருந்தது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் பெரும்பாலான பள்ளிநூலங்களில் இருக்கும். முதன்மையாக, பழந்தமிழ் இலக்கியங்களின் முறையாக பிழைநோக்கப்பட்ட எளிய பதிப்புகள். புலியூர் கேசிகன் உரையுடன் சங்கப்பாடல்களை நான் எட்டாம் வகுப்பு படித்த காலத்தில் வாசித்தது ஒரு மாபெரும் திறப்பு. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட வெளிநாட்டு இலக்கிய அறிமுக நூல்கள் ஒரு புத்துலகைத் திறந்துவைத்தவை. வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ, லிட்டன்பிரபுவின் பாம்பியின் கடைசிநாட்கள்  முதலிய செவ்வியலக்கியப் படைப்புகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112397/

வாசகர்களுடன் உரையாடல் -கடிதங்கள்

வாசகர்களின் உரையாடல் ஜெ அவர்களுக்கு   வணக்கம்..  நலமா.   வாசகர்களுடன் உரையாடல் பற்றிய பதிவைப் படித்தேன்.   உங்களுடைய சிந்தனை என் போன்றவர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. வீட்டின் மூலையில், தனிமையில் இணையத்தின் வழி மட்டுமே இலக்கிய உலகை, அறிவுசார் தேடலை அனுபவிக்கையில், நான் நேசிக்கும் பெரிதும் போற்றும் படைப்பாளிகளுடன் உரையாடுதல் என்பது பெருங்கனவே.   உங்களுக்கு என் முதல்  மின்னஞ்சலை அனுப்பிய தருணம் இன்றும் நினைவிருக்கிறது. அதை அனுப்புவதற்கு முன் எத்தனையோ தடவை தட்டச்சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112364/

ஹோம்ஸ்- கடிதங்கள்

ஐரோப்பா-4, நுண்ணோக்கிகள்   வணக்கம் திரு ஜெயமோகன்       ஷெர்லாக் ஹோம்ஸ் இன்றும்  இந்தியாவில் பள்ளிகளில் ஆங்கில பாடபகுதியாக உள்ளது, வுட்ஹவுஸும் அதுபோலதான். இங்கிலாந்திலேயே இவற்றை இன்று படிப்பவர்கள் குறைவு என்றபோதும் இந்தியாவில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.       நாம் ஆங்கிலேயர்களின் கீழிருந்த காலத்தில் நாமும் பிரிட்டிஷ் கனவான்கள போல் ஆக வேண்டும் என கருதி ஷெர்லாக் ஹோம்சும் வுட்ஹவுஸ் நூல்களும் படித்தோம் என எண்ணி கொள்ளலாம். அதை இன்றும் படிப்பவர் கடந்த காலத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112624/

ஐரோப்பா-5, அடித்தளத்தின் குருதி

    என் அம்மாவின் மலையாள நூல் சேகரிப்பில் இரு விந்தையான நூல்கள் இருந்தன. இரண்டுமே மொழியாக்கநூல்கள். ஒன்று கோட்டயத்த்தில் வாழ்ந்த ரிச்சர்ட் காலின்ஸ் என்னும் பாதிரியாரின் மனைவியான ஃப்ரான்ஸிஸ் வைட் காலின்ஸ் [Mrs Frances Wright Collins] 19 ஆம் நூற்றாண்டில் எழுதிய The Slayer Slain என்னும் ஆங்கில நாவலின் மலையாள மொழியாக்கமான காதக வதம். கோட்டயத்திலிருந்து அந்நாளில் வெளிவந்துகொண்டிருந்த கிறித்தவ இறையியல் இதழான வித்யா சம்கிரஹ் அதை வெளியிட்டது. வைட் அந்நாவலை முழுமையாக்கவில்லை.அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112369/

காந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா

  காந்திஜியுடன் தொண்டு செய்யத் தொடங்குமுன் நானும் இந்தியாவிலேயே நடந்த முதல் அரசியல் புரட்சிக்குழுவில் சேர்ந்திருந்தது பலருக்குத் தெரியாது. நீல கண்டப் பிரம்மச்சாரி (தற்காலம் ஸ்ரீ ஓம்கார்ஸ்வாமி), வாஞ்சி, சங்கரகிருஷ்ணன் முதலியோரோடு குழுவில் முக்கிய பங்கு கொண்டிருந்தேன். காந்திஜியையும் அவரது தென்னாப்ரிக்கா சத்தியாகிரகப் பணியையும் அறிந்ததும் புரட்சிக் குழுவிலிருந்து விலகி காந்திஜியைச் சந்தித்து அவருடனே பணியாற்ற வேண்டுமென்று உறுதிக் கொண்டேன்   காந்தி சில நினைவுகள் – ஹரிஹர சர்மா  

Permanent link to this article: https://www.jeyamohan.in/112351/

ஈரோட்டில் இருந்து…

  வெண்முரசின் அடுத்த நாவலுக்கான உளநிலையில் இருக்கிறேன். இதை ஒரு திகைப்பு என்று சொல்லலாம். எப்போதுமே தொடங்குவது வரை அடுத்து என்ன எழுதப்போகிறேன் என்ற பதற்றம்தான் இருக்கும். நாவலின் வடிவம் குறித்த எந்தத் திட்டமும் இருக்காது. முதல் அத்தியாயம்தான் மொத்த நாவலின் வடிவையும் முடிவுசெய்கிறது. அந்த முதல் அத்தியாயத்தை முதல் வரி, முதல் பத்தி முடிவுசெய்கிறது. முதல் அத்தியாயத்தை மையமாகக்கொண்டு தேடிக்கண்டடைந்துகொண்டே செல்வது என் பணி   இத்தகைய சூழலில் எப்போதும் ஐயங்கள் அலைக்கழிக்கின்றன. எழுதியவை சென்றடைகின்றனவா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112555/

Older posts «