Monthly Archive: July 2018

விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை

  விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல்  ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது   விஷ்ணுபுரம் அமைப்பின் உறுதியான நடத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111472/

அழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018

  தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.   கடந்த சில ஆண்டுகளாக தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பதிப்புச் செயல்பாட்டினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிண்டில் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தங்கள் நூலினை நேரடியாகவே கிண்டிலில் வெளியிடுகின்றனர். கிண்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வாசகப் பரப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111580/

சிரபுஞ்சி, அதிகாரிகள் -கடிதங்கள்

சிராப்புஞ்சியின் மாமழை அன்புள்ள ஜெ   உங்கள் சிரபுஞ்சியின் மாமழைக் கட்டுரையில் மிகமுக்கியமான விஷயம் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பற்றி நீங்கள் சொன்னது. நான் கானிலாகாவில் இதைப்பார்க்கிறேன். ஒரு 20 ஆண்டுகளில் பணிக்குவந்த அதிகாரிகளில் முக்கால்வாசிப்பேர் இலட்சியவாதிகள், நேர்மையானவர்கள். அவர்களை அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள்.   நம்மூர்க்காரர்கள் பொதுவாக இடதுசாரித்தனத்தை பாவனை செய்பவர்கள். ஆகவே இந்த இளம் அதிகாரிகளின் கடுமையான உழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் பற்றி நாம் அதிகமாகப்பேசுவதில்லை. நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்   ஸ்ரீனிவாசன்   அன்புள்ள ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111468/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57

இருபுறமும் பெருகிப் பரந்திருந்த படைவெளிக்கு நடுவே மிகத் தொலைவில் வானில் சிறகசையாது நின்றிருக்கும் செம்பருந்துபோல தெரிந்த பொன்னிறக் கொடியில் குரங்கு முத்திரையை ஸ்வேதன் கண்டான். முதற்கணத்தில் அதை எப்படி அடையாளம் காண முடிந்ததென்று அவன் உள்ளம் உடனே வியந்து கொண்டது. அது ஒவ்வொரு கணமுமென தன் சித்தத்தில் இருந்துகொண்டிருந்தது என்றும் உள்ளிருக்கும் அந்த நோக்கே எழுந்து வெளியே அதை அடையாளம் கண்டது என்றும் எண்ணினான். அருகே வந்துகொண்டிருந்த ரோகிணியிடம் “அதுதான்” என்று சுட்டிக்காட்டினான். அவள் அந்தக் கொடியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111334/

வெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்  வருகிற ஜூலை 29, ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது இந்த கலந்துரையாடலில் மாமலர் குறித்து நமது குழும நணபர் மாரிராஜ் அவர்கள் உரையாற்றுவார் வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:-  வரும் ஜூலை ஞாயிறு (29/07/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை இடம் சத்யானந்த யோகா மையம் 11, தெற்கு பெருமாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111575/

’தீட்டு ’

    கனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை”. இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். ஆழ்ந்த முழுமைத்தேடலால், மெய்மைநோக்கிய பயணத்தால் அவ்விடைகள் கண்டடையப்படுகின்றன. அவ்வாறு கண்டடைபவர்களைத் தொடர்பவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127/

கணினியில் எழுதுவது…

  அன்புள்ள ஜெ.. என் கணினி பழுதடைந்தால் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதினேன்…  வடிவம் , சொற்றொடர் என எதுவும் சரியாக வரவில்லை.. அதன்பின் கணினியில் எழுதும்போதுதான் சரியாக எழுத முடிந்தது… உங்களுக்கு முந்தைய தலைமுறையினர் கணினி யுகத்தை அறிந்ததில்லை…  அடுத்து வர இருக்கும் தலைமுறை கம்ப்யூட்டர் தட்டச்சில் மட்டுமே எழுத தெரிந்தவரகள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு அனுபவம் கொண்ட தலைமுறையை சேர்ந்த எழுத்தாளர் என்பதால் இது குறித்த உங்கள் பார்வை பதிவு செய்யப்படுவது அவசியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111215/

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   அன்புள்ள ஜெ   விருதுச் செய்தி என்னைப் பத்தாண்டுகளுக்குப் பின்னே அழைத்துச் சென்றுவிட்டது. தமிழினி பதிப்பித்த இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களை வாங்கியபோது புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி வேதசகாயகுமார், பொதியவெற்பன், ராஜ் கௌதமன் எழுதிய நூல்களையும் வாங்கினேன்.   விருது பெறுபவர் குறித்து முன்னரே அறிவித்தமைக்கு நன்றி. டிசம்பருக்குள் அவருடைய எல்லாப் படைப்புகளையும் வாசித்துவிட விழைகிறேன்.   ஆண்டுதோறும் விழா வளர்ந்துகொண்டே போகிறது. இம்முறையும் மேலும் பலபடிகள் வளரும் என்பதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111563/

காப்பீடு- கடிதங்கள்

காப்பீடு, இரண்டு முட்டாள்கள் அன்புள்ள ஜெயமோகன், குறைக்கப்பட்ட பிரீமியம் ஐம்பத்தெட்டாயிரம் என நிர்ணயம் செய்தது கஸ்டமரை கோபப்படுத்துவதற்காகவே; அதன் மூலம் அந்நிறுவனத்துடனான உங்கள் உறவினை கச்சிதமாக கத்தரித்துவிட முடியம் – சமீப காலத்தில் அது ஒரு தொழில் தந்திரமாக பின்பற்றப்படுகிறது. முகவர் தன்னுடைய பணியை சரியாக செய்துவிட்ட திருப்தியில் இருப்பதால் நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் ஜென் நிலையில் நிதானமாகவே இருந்திருப்பார்.   காப்பீட்டு துறை மட்டுமல்ல, வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள், டாக்ஸி – ஆட்டோ நெட்ஒர்க் போன்றவை தனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111292/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56

மீண்டும் படைகளின் நடுவே செல்லத் தொடங்கியபோது ஸ்வேதன் சற்று விரைவு குறைத்தே புரவியை செலுத்தினான். வஜ்ரகுண்டலன் அவர்களை நோக்கியபடி சற்று விலகி வந்தான். ஆணிலியுடன் செல்வதை அவன் இழிவெனக் கருதுவதை காணமுடிந்தது. பந்தங்களின் ஒளி செந்நிறமாக வழியெங்கும் சிந்திக் கிடந்தது. வழியில் யானைகளை அவிழ்த்து இரட்டைக் கந்துகளில் இருபக்கமும் சங்கிலி நீட்டி கட்டியிருந்தார்கள். அவை செவியாட்டியபடி உப்புநீரில் நனைக்கப்பட்ட உலர்புல்லைச் சுருட்டி மண்போக காலில் அறைந்து தின்றுகொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான மணிகளின் ஓசை இணைந்து முழக்கமாக சூழ்ந்தது. “நீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111290/

Older posts «

» Newer posts