Daily Archive: July 29, 2018

மாத்ருபூமி பேட்டி

  இன்றைய மாத்ருபூமி நாளிதழில் வெளிவந்துள்ளது இந்த வாழ்வுவிவரிப்பு. எனக்கும் அருண்மொழிக்குமான காதல், எங்கள் மணவாழ்க்கை, அத்துடன் என் இலக்கியம் ஆகியவற்றை தொட்டுச்செல்லும் விரிவான பேட்டி. பேட்டியாளர் அருண் கோபி என்மொழியே  

Permanent link to this article: https://www.jeyamohan.in/111670/

வாசிப்பும் அ.முத்துலிங்கமும்

கணினியில் எழுதுவது… அன்புள்ள ஜெ   கணினியில் எழுதுவது பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன் வாசகர் தேவை ஜெயராமன்   அன்புள்ள ஜெயராமன்,   அ.முத்துலிங்கம் அவருக்குரிய நையாண்டியுடன் இன்றைய எழுத்து வாசிப்புச் சூழலைச் சொல்கிறார்  அவர் சொல்வது ஒருவகையில் உண்மை. தமிழில் எண்பதுகளில் ஆண்டுக்கு சராசரியாக நாநூறு நூல்கள் வெளிவந்தன இன்றைக்கு சராசரியாக முப்பதாயிரம் நூல்கள். இவற்றில் எவ்வளவு நூல்கள் படிக்கப்படுகின்றன என்பது முக்கியமான கேள்வி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111588/

படிமங்களாகும் தொன்மங்களே காலத்தின் நீட்சி

  மதிப்புகுரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம்.  நலம்.  தாங்கள் குடும்பத்தினர்களும்  நலம்  என்றறிய  ஆவல்.   பாதி வருடம்  கடந்துவிட்டது  ஊட்டி முகாம் வரமுடிந்தது  போல விஷ்ணுபுரம் விழாவிலும்  கலந்துகொள்ள  வாய்ப்பு  அமையவேண்டும்.   தேவதேவன்  அவர்கள் கவிதை வரிகளை  இரசித்த இரசனையாளரின்  கை வண்ணத்தில் அருமையான  தோற்றத்தோடு   100 படங்களாக  கிடைத்ததும் தினம் தினம்  அவரது வரிகள் தான்  என் கணினியை  அலங்கரிக்கின்றது.  தினமும் கவிதை வரிகளைப் படிப்பதென்பது  தனிச் சுவைதான்!   ஊட்டியில்,  பேரன்புடன் இருகைகளையும்  விரித்து வந்து விடு  என்று அழைத்து  ஆரதழுவுவது  போல  இருந்த   ஓசாமா கவிதை  பற்றியஅரங்கு முடிந்ததும்,  தேவதேவன்  அவர்களுடன்  தேநீர் விவாத்தின்  போது  ஓசாமா  கவிதை பற்றி ஏதோ  கடைசியாக  பேசப்பட்டது என்ன என்று  கேட்டார்,  அதற்கு நான் , ஒரு  நண்பரின்   கருத்து  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111336/

நூலகம்- கடிதங்கள்

  நூலகம் எனும் அன்னை அன்புள்ள ஜெ   பதிவு 2007 ஐ சார்ந்தது என்றாலும், தங்கள் கருத்து என்றும் உண்மையானதே, நானும் தங்களை 2015ல் தான் அறியத்தொடங்கினேன். திருவரம்பு, திருவட்டாறு பெருமாளை பார்க்க வேண்டுமென்று எண்ணியது அதனால் தான். விஷ்ணுபுரம் இன்னும் முதல் அத்தியாயம் தாண்டவில்லை, ஆனால் பிற நூல்களை படுத்துவிட்டேன்.   தங்கள் உரையில் நுஉஷா மொழி பற்றிய தகவல் புதியது. பெண்களுக்கு மட்டும் ஒரு பாஷை என்றால் ஆச்சர்யம்தான்.   தங்களின் வார்த்தைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111294/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 59

யுதிஷ்டிரரின் அரசவை இருக்கும் படைமுன்னணி நோக்கி அரவானும் ஸ்வேதனும் சென்றனர். அரவான் புரவியில் ஏற மறுத்துவிட்டான். “என்னை கண்டாலே புரவிகள் மிரளும்…” என்றான். “ஏன்?” என்றான் ஸ்வேதன். “புரவிகள் நாகங்களை அஞ்சுகின்றன.” அவன் அருகே சென்றதும் புரவி விழிகளை உருட்டி மெய்ப்புகொண்டு மெல்ல கனைத்தபடி பின்னடி வைத்தது. மூக்கை விடைத்து வாய்திறந்து தலையை ஆட்டியது. “நீ எப்படி வருவாய்?” என்றான் ஸ்வேதன். அரவான் “நான் புரவியைவிட விரைவாக நடப்பேன். நீங்கள் ஏறிக்கொள்ளுங்கள். நான் உடன் வருகிறேன்” என்றான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111359/