Daily Archive: July 27, 2018

நாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   நலமா?   ஊட்டி வந்திருந்த போது கவிதைகள் குறித்து நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் நான் எடுத்த குறிப்புகளின் துணையுடன் நினைவில் இருந்து மீட்டி எழுதி பார்த்தேன். கவிதைகள் குறித்த ஒரு தெளிவு கிடைத்தது. அதன் துணை கொண்டே தற்போது கவிதையை பலவாறு வாசிக்கிறேன். வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நாவல் குறித்த உரையாடல் மற்றும் அதன் எதிர்வினைகள்.   மொழிபெயர்ப்பில் தங்களுக்கு ஈடுபாடு இல்லை என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110807

விஷ்ணுபுரம் விருதுகள் இதுவரை

  விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல்  ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை ஒருங்கிணைப்பதும் எங்கள் நோக்கமாக இருந்தது. தொடக்கத்திலேயே ஓர் உறுதியை மேற்கொண்டோம். எந்நிலையிலும் இது உளக்கசப்புகளுக்கான வெளியாக அமையக்கூடாது. இலக்கியம் முக்கியம்தான், நட்பு அதைவிட முக்கியம். கொள்கைகள் கோட்பாடுகள் என்று பேசுபவர்கள் இறுதியில் காழ்ப்புநிறைந்தவர்களாக, தனியர்களாக மாறிவிடுகிறார்கள். அது நிகழக்கூடாது   விஷ்ணுபுரம் அமைப்பின் உறுதியான நடத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111472

அழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018

  தமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.   கடந்த சில ஆண்டுகளாக தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பதிப்புச் செயல்பாட்டினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிண்டில் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தங்கள் நூலினை நேரடியாகவே கிண்டிலில் வெளியிடுகின்றனர். கிண்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வாசகப் பரப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111580

சிரபுஞ்சி, அதிகாரிகள் -கடிதங்கள்

சிராப்புஞ்சியின் மாமழை அன்புள்ள ஜெ   உங்கள் சிரபுஞ்சியின் மாமழைக் கட்டுரையில் மிகமுக்கியமான விஷயம் ஐஏஎஸ் அதிகாரிகளைப் பற்றி நீங்கள் சொன்னது. நான் கானிலாகாவில் இதைப்பார்க்கிறேன். ஒரு 20 ஆண்டுகளில் பணிக்குவந்த அதிகாரிகளில் முக்கால்வாசிப்பேர் இலட்சியவாதிகள், நேர்மையானவர்கள். அவர்களை அரசியல்வாதிகள் அஞ்சுகிறார்கள்.   நம்மூர்க்காரர்கள் பொதுவாக இடதுசாரித்தனத்தை பாவனை செய்பவர்கள். ஆகவே இந்த இளம் அதிகாரிகளின் கடுமையான உழைப்பையும் அவர்களின் பங்களிப்பையும் பற்றி நாம் அதிகமாகப்பேசுவதில்லை. நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்   ஸ்ரீனிவாசன்   அன்புள்ள ஜெ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111468

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 57

இருபுறமும் பெருகிப் பரந்திருந்த படைவெளிக்கு நடுவே மிகத் தொலைவில் வானில் சிறகசையாது நின்றிருக்கும் செம்பருந்துபோல தெரிந்த பொன்னிறக் கொடியில் குரங்கு முத்திரையை ஸ்வேதன் கண்டான். முதற்கணத்தில் அதை எப்படி அடையாளம் காண முடிந்ததென்று அவன் உள்ளம் உடனே வியந்து கொண்டது. அது ஒவ்வொரு கணமுமென தன் சித்தத்தில் இருந்துகொண்டிருந்தது என்றும் உள்ளிருக்கும் அந்த நோக்கே எழுந்து வெளியே அதை அடையாளம் கண்டது என்றும் எண்ணினான். அருகே வந்துகொண்டிருந்த ரோகிணியிடம் “அதுதான்” என்று சுட்டிக்காட்டினான். அவள் அந்தக் கொடியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111334