Daily Archive: July 26, 2018

வெண்முரசு சென்னை விமர்சனக்கூட்டம், ஜூலை2018

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்  வருகிற ஜூலை 29, ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது இந்த கலந்துரையாடலில் மாமலர் குறித்து நமது குழும நணபர் மாரிராஜ் அவர்கள் உரையாற்றுவார் வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:-  வரும் ஜூலை ஞாயிறு (29/07/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை இடம் சத்யானந்த யோகா மையம் 11, தெற்கு பெருமாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111575/

’தீட்டு ’

    கனிமொழி கருணாநிதியின் ‘தீண்டாமை’ கவிதையிலிருக்கும் இந்த வரிகளைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? “எந்நாடு போனாலும் தென்னாடு உடைய சிவனுக்கு மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை”. இது பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் போன்ற (புளித்துப்போன) தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்வியல்ல, முற்றிலும் வேறுதளம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். மதம் என்பது ஆன்மிகமான தேடலால் உருவாக்கப்பட்ட விடைகளை ஒட்டி உருவான நிறுவனம். ஆழ்ந்த முழுமைத்தேடலால், மெய்மைநோக்கிய பயணத்தால் அவ்விடைகள் கண்டடையப்படுகின்றன. அவ்வாறு கண்டடைபவர்களைத் தொடர்பவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127/

கணினியில் எழுதுவது…

  அன்புள்ள ஜெ.. என் கணினி பழுதடைந்தால் பேப்பரில் ஒரு கட்டுரை எழுதினேன்…  வடிவம் , சொற்றொடர் என எதுவும் சரியாக வரவில்லை.. அதன்பின் கணினியில் எழுதும்போதுதான் சரியாக எழுத முடிந்தது… உங்களுக்கு முந்தைய தலைமுறையினர் கணினி யுகத்தை அறிந்ததில்லை…  அடுத்து வர இருக்கும் தலைமுறை கம்ப்யூட்டர் தட்டச்சில் மட்டுமே எழுத தெரிந்தவரகள் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு அனுபவம் கொண்ட தலைமுறையை சேர்ந்த எழுத்தாளர் என்பதால் இது குறித்த உங்கள் பார்வை பதிவு செய்யப்படுவது அவசியம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111215/

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   அன்புள்ள ஜெ   விருதுச் செய்தி என்னைப் பத்தாண்டுகளுக்குப் பின்னே அழைத்துச் சென்றுவிட்டது. தமிழினி பதிப்பித்த இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களை வாங்கியபோது புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி வேதசகாயகுமார், பொதியவெற்பன், ராஜ் கௌதமன் எழுதிய நூல்களையும் வாங்கினேன்.   விருது பெறுபவர் குறித்து முன்னரே அறிவித்தமைக்கு நன்றி. டிசம்பருக்குள் அவருடைய எல்லாப் படைப்புகளையும் வாசித்துவிட விழைகிறேன்.   ஆண்டுதோறும் விழா வளர்ந்துகொண்டே போகிறது. இம்முறையும் மேலும் பலபடிகள் வளரும் என்பதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111563/

காப்பீடு- கடிதங்கள்

காப்பீடு, இரண்டு முட்டாள்கள் அன்புள்ள ஜெயமோகன், குறைக்கப்பட்ட பிரீமியம் ஐம்பத்தெட்டாயிரம் என நிர்ணயம் செய்தது கஸ்டமரை கோபப்படுத்துவதற்காகவே; அதன் மூலம் அந்நிறுவனத்துடனான உங்கள் உறவினை கச்சிதமாக கத்தரித்துவிட முடியம் – சமீப காலத்தில் அது ஒரு தொழில் தந்திரமாக பின்பற்றப்படுகிறது. முகவர் தன்னுடைய பணியை சரியாக செய்துவிட்ட திருப்தியில் இருப்பதால் நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் ஜென் நிலையில் நிதானமாகவே இருந்திருப்பார்.   காப்பீட்டு துறை மட்டுமல்ல, வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள், டாக்ஸி – ஆட்டோ நெட்ஒர்க் போன்றவை தனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111292/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56

மீண்டும் படைகளின் நடுவே செல்லத் தொடங்கியபோது ஸ்வேதன் சற்று விரைவு குறைத்தே புரவியை செலுத்தினான். வஜ்ரகுண்டலன் அவர்களை நோக்கியபடி சற்று விலகி வந்தான். ஆணிலியுடன் செல்வதை அவன் இழிவெனக் கருதுவதை காணமுடிந்தது. பந்தங்களின் ஒளி செந்நிறமாக வழியெங்கும் சிந்திக் கிடந்தது. வழியில் யானைகளை அவிழ்த்து இரட்டைக் கந்துகளில் இருபக்கமும் சங்கிலி நீட்டி கட்டியிருந்தார்கள். அவை செவியாட்டியபடி உப்புநீரில் நனைக்கப்பட்ட உலர்புல்லைச் சுருட்டி மண்போக காலில் அறைந்து தின்றுகொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான மணிகளின் ஓசை இணைந்து முழக்கமாக சூழ்ந்தது. “நீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111290/