Daily Archive: July 25, 2018

தலைப்புகள்

  பொதுவாக நல்ல படைப்பாளிகளின் தலைப்புகள் சோடை போவதில்லை என்று ஒரு கூற்று உண்டு. பலசமயம் படைப்பை மீறி அவை நினைவில் நிற்கும். படைப்பை விடவும் ஆழமான மன அதிர்வுகளை உருவாக்கும். இதற்கு முக்கியமான உதாரணம் ஜெயகாந்தனின் தலைப்புகள். ‘யுகசந்தி’ ,’புதிய வார்ப்புகள்’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற தலைப்புகள் அவற்றை சூட்டிக் கொண்ட படைப்புகளின் துணை இல்லாமலேயே தமிழில் நீடித்திருக்கின்றன. அவை பல தளங்களில் இன்று மொழியில் பயன்படுத்தவும் படுகின்றன படைப்பில் பிற அனைத்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/441

சிரபுஞ்சியின் மாமழை-கடிதங்கள் 2

சிராப்புஞ்சியின் மாமழை பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,   வணக்கம்.     தங்களின் சிராப்புஞ்சியின் மழைப்பொழிவு  மற்றும் மேகாலயா  மாநிலத்தின் தற்போதைய  வளர்ச்சியும் மக்களின்வாழ்வாதார முன்னேற்றம்  பற்றிய பயண கட்டுரை ஒரு பெரிய திறப்பை அளித்தது.அதில் சாலைகள்  அமைப்பது எப்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற உண்மையை அனுபவபூர்வமாக அறிந்து எழுதியிருந்தீர்கள்(இது நம்மவர்களுக்கு இன்னும் புரியவில்லை).     மேலும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு – மதுரை கல்லூரி பேராசிரியர் திரு வாசுதேவன் அவர்களின் தொழில் நுட்ப முறை -சாலைகள் அமைக்கப்பட்டு அவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111466

சூஃபிதர் -கடிதம்

  சூஃபிதர் அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு வணக்கம்.   சென்னை திருவல்லிக்கேணியின் பெரிய பள்ளிவாசலை அன்றைய ஆற்காடு நவாபுகள் 1765-ஆம் ஆண்டில் கட்டிக் கொடுத்துள்ளனர். எங்கள் வேலூர் மாவட்டத்து முஸ்லிம்களில் இன்றைக்கும் திருமணம், பெருநாள் போன்ற விழாக்காலங்களில் புதுத்துணி எடுக்க சென்னையின் இந்த பகுதிக்கு வருவது வழக்கம். அப்படியானதொரு சந்தர்ப்பத்தில் 90-களுடைய பிற்பாதியின் ரம்ஜான் மாதமொன்றில் இங்கு நுழைந்தேன். நோன்பு முறிக்க அமர்ந்திருந்த முஸ்லிம்களுக்கு  கஞ்சி, வடை, தண்ணீர், வாழைப்பழம் என ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்தோம்பலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111510

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5

  ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெ ராஜ் கௌதமனைப்பற்றிய குறிப்பில் ஒருவர் அயோத்திதாச பண்டிதரும் பகுத்தறிவுவாதிதான் என்று சொல்லியிருந்தார். முதல் விஷயம் அயோத்திதாசர் மரபான முறையில் தொடுவர்மம், மந்திரவாதக்கலை போன்றவற்றைச் செய்துவந்தவர். அவரிடம் மந்திரவாதச் சிகிச்சைக்குப்போனதைப்பற்றி திருவிக எழுதியிருக்கிறார். அதோடு அயோத்திதாசர் அவருடைய நூல்களில் சொல்லு புராணங்களை எல்லாம் உண்மையான நம்பிக்கையுடன் மட்டுமே சொல்லியிருக்கிறார். அவற்றை தொன்மங்களாக வாசிப்பது நம் வசதி. அயோத்திதாசர் நவீனத்துவம் உருவாக்கிய பகுத்தறிவு மரபைச் சேர்ந்தவர் அல்ல. அவர் அதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111542

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55

ஸ்வேதனும் சங்கனும் புரவியிலமர்ந்து இருபுறமும் சென்றுகொண்டிருந்த பாண்டவர்களின் படை அணிகளை நோக்கியபடி நடுவே ஓடிய பாதையினூடாக முன்னால் சென்றனர். அவர்களுடன் திருஷ்டத்யும்னன் அனுப்பிய துணைப்படைத்தலைவன் வஜ்ரகுண்டலன் வந்தான். குலாடப் படைகள் திருஷ்டத்யும்னனின் படைகளுடன் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இணைந்துகொண்டன. படை கிளம்பிய பின்னரே அவர்களுக்கு வழிச்செல்லும் ஒப்புதல் கிடைத்தது. படை மிக மெல்லத்தான் கிளம்பியது. “படுத்த யானை எழுவதைப்போல” என்றான் சங்கன். அவர்கள் கிளம்பியபோது இளவெயில் சரிந்திருந்தது. படைக்கலன்களும் இரும்புக் கவசங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அனைவரும் இரும்பு அடிகொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111288