Daily Archive: July 24, 2018

கிளியின் அழகியல்

கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு   அன்புடன் ஆசிரியருக்கு   நலமா?   இயல்புவாதம் யதார்த்தவாதம் குறித்து தொடங்கிய விவாதம் இலக்கிய வாசகர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும்.   கே.என்.செந்திலின் சகோதரிகள் மற்றும் அது குறித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தை முன்னிட்டு ஒரு விவாதம் நடந்தது. அதிலும் மெலோடிராமா “கண்ணீர்க்காவியம்” போன்ற நக்கலான வார்த்தைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. சகோதரிகள் குறித்த உங்களது கட்டுரை இயல்புவாதம் குறித்த ஒரு விவாதத்தை தொடங்கியிருக்கிறது. என்னளவில் இயல்புவாதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111167

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது ஜெ   ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தது. நான் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கோபமாக ‘ராஜ் கௌதமன் அயோத்திதாசரின் ஸ்கூல் ஆஃப் தாட்டைச் சேர்ந்தவர். எப்படி சுந்தர ராமசாமியின் ஸ்கூல் ஆஃப் தாட்டைச் சேர்ந்தவர் என்று சொல்லலாம்?” என்றார்.   நான் கேட்டேன். அயோத்திதாசர் சிந்தனைகள் பொதுவாக தலித் சிந்தனையாளர்களுக்கே தெரியாத காலம் இருந்தது தெரியுமா? ஞான அலாய்ஸியஸ் அவற்றை புத்தகமாகத் தொகுத்தபிறகுதான் தலித் அறிவுஜீவிகளுக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111470

யானைடாக்டர்,ஹிண்டு- ஒரு கடிதம்

  யானை டாக்டர்,தி ஹிண்டு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   யானைடாக்டர் கதை பற்றி மீனா பிள்ளை அவர்கள் எழுதிய குறிப்பையும் அதற்கு நீங்கள் எழுதிய எதிர்வினையையும் வாசித்தேன். நல்ல கதை, அதை மிகச்சரியாக வகுத்து எழுதியிருக்கிறார்   உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது. அதை நான் மறுக்கமாட்டேன். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் எல்லா பத்திரிகைகளிலும் இலக்கியத்தைப்பற்றிய உதாசீனமான பார்வையே உள்ளது. பத்திரிக்கையாளர்கள் தங்களை கருணையான தெய்வங்களாக நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களை கும்பிடும் எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111520

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 54

திருஷ்டத்யும்னனின் பாடிவீடு மென்மரப்பட்டைகளாலும் தேன்மெழுகும் அரக்கும் பூசப்பட்ட தட்டிகளாலும் ஆன சிறு மாளிகை. அதன் முகப்பில் பாஞ்சாலத்தின் விற்கொடி மையத்தில் பறந்தது. பாஞ்சாலத்தின் ஐந்து தொல்குடிகளான கேசினிகள், துர்வாசர்கள், கிருவிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள் ஆகியோரின் கொடிகள் தாழ்வாக பறந்தன. கேசினிகள் மருதமரத்தின் இலையையும் கிருவிகள் எட்டிமரத்தின் இலையையும் சோமகர்கள் ஆலிலையையும் துர்வாசர்கள் வேம்பிலையையும் சிருஞ்சயர்கள் மந்தார மரத்தின் இலையையும் அடையாளமாக கொண்டிருந்தனர். அந்த அடையாளங்கள் அனைத்தையும் ஸ்வேதன் பயின்றிருந்தான். விற்கொடிக்கு நிகராக எழுந்த வெண்ணிறக் கொடியில் மந்தார …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111284