Daily Archive: July 23, 2018

வெண்முரசு புதுவை கூடுகை – ஜூலை 2018

  அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான  “வெண்முரசின்  17  வது  கலந்துரையாடல்  ” ஜூலை  மாதம்   26-07-2018  வியாழக்கிழமை அன்று  நடைபெற  இருக்கிறது .  அதில் பங்குகொள்ள  வெண்முரசுவாசகர்களையும்,  வெண்முரசு குறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன்புடன்  அழைக்கிறோம்..   இம்மாதக்  கூடுகையின் பேசுப்பகுதி   வெண்முரசு  நூல்  2 மழைப்பாடல் பகுதி 12:   விதைநிலம் மற்றும் பகுதி 13 :   தனிப்புரவி   60 முதல்  68  வரையுள்ள  பகுதிகளைக்  குறித்து நண்பர்  திரு.இரா.விஜயன்  அவர்கள்  உரையாற்றுவார்.   நாள்:  26-07-2018 வியாழக்கிழமை  மாலை 6 மணி முதல் 8.30 வரை. இடம்: ருபாநிதி அரிகிருஷ்ணன், “ஸ்ரீ நாராயணபரம்”, முதல்மாடி, எண் 27, வெள்ளாழர் வீதி, புதுச்சேரி 605001 தொடர்புக்கு : 9943951908 ; 9843010306.    

Permanent link to this article: https://www.jeyamohan.in/111480/

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

  ஓர் எழுத்தாளனை மதிப்பிடுவதற்குரிய மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்று அவனுடைய மிகச் சிறந்த கதாபாத்திரத்தில் அவனைக் கண்டடைவதாகும். நெஹ்ல்யுடோவில் தல்ஸ்தோயை (உயிர்த் தெழுதல்) ராஸ்கால் நிகாஃபில் தஸ்தயேவ்ஸ்கியை (குற்றமும் தண்டனையும்) ஜீவன் மொஷயில் தாராசங்கர் பானர்ஜியை (ஆரோக்ய நிகேதனம்) கண்டடையலாம். இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. இக்கதாபாத்திரங்களுக்கு நேர் எதிராக உள்ள அல்லது மாற்றாக உள்ள கதாபாத்திரம் ஒன்றிலும் அதே ஆசிரியனைக் கண்டடையலாம். தல்ஸ்தோயின் பியரியல் (போரும் அமைதியும்) தஸ்தயேவ்ஸ்கியின் திமித்ரியில் (கரமஸோவ் சகோதரர்கள்) தாராசங்கர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/391/

இணையதளச் சிக்கல்

இணையதளச் சிக்கல்   அன்புள்ள ஜெ.,   “இணையதளச் சிக்கல்” படித்தேன். எங்கள் அறிவுப்பசிக்கு நீங்கள் போடுகிற பெருந்தீனிக்கு குரு தட்சிணையாக குறைந்தபட்சம் இந்த தளம் நடத்துகிற செலவு மற்றும் விஷ்ணுபுரம் விருது மற்றும் விழாச் செலவுகளை நீங்கள் ஏன் வாசகர்களிடமிருந்தே அன்பளிப்பாகப் பெறக்கூடாது? எங்களுக்கும் பைசாச் செலவில்லாமல் படிக்கிற குற்றஉணர்ச்சி குறையுமில்லையா?   அன்புள்ள,   கிருஷ்ணன் சங்கரன்   அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன் இன்றைய நிலையில் இந்தத்தளத்தை கட்டணத்தளமாக ஆக்க முடியாது. ஏனென்றால் அதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111507/

ராஜ் கௌதமன் – விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-3

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெ   இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுக்கு ராஜ் கௌதமன் தேர்வுசெய்யப்பட்டுள்ளது மிகவும் எதிர்பாராதது. பொதுவாக விஷ்ணுபுரம் விருதுகள் கதை எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன. கட்டுரைநூல் எழுத்தாளர்களை விஷ்ணுபுரம் கருத்தில்கொள்வது மிகச்சிறந்த விஷயம். அவர்களுக்கு பொதுவாக எங்கேயுமே ஏற்பு கிடையாது. அவர்களின் ஏதேனும் ஒரு கருத்துடன் கடுமையாக முரண்பட்டு அவர்களை அப்படியே தவிர்த்துவிடுவார்கள். ஆனால் கதை கவிதை எழுதுபவர்களுடன் முரண்பட்டாலும் சில அம்சங்களில் அவர்களின் படைப்புக்களை ஏற்றுக்கொள்வார்கள். தமிழில் முக்கியமான பங்களிப்பாற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111379/

சிரபுஞ்சி -கடிதங்கள்

    சிராப்புஞ்சியின் மாமழை அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்கள் சிரபுஞ்சி மாமழை பயண அனுபவ கட்டுரை அலாதியாக இருந்தது. பெருமழைப் பொழிவின் விவரிப்பு  காட்சி அனுபவமாக அபாரமான  மன எழுச்சி தந்தது.   மேகமில்லா வானத்து நிலவின் காட்சியில் மயங்கியிருக்கும் குழந்தைக்கு அன்னை ஊட்டமழிப்பது போல மேகாலாயாவின் வரலாற்று சித்திரத்தின் விவரிப்பு இருந்தது. பழங்குடி மனநிலை, வடகிழக்கின் அரசியல் வரலாறு,  மேலைநாட்டில் கற்ற முற்போக்கு அரசியலாளர்களின் பொதுத்தன்மை என அறிதலும் புரிதலும் ஆங்காங்கே.   // அதுவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111464/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53

ஸ்வேதனும் சங்கனும் தலைமைகொண்டு நடத்திய குலாடகுடிப் படை பதின்மூன்று நாட்கள் பயணம் செய்து பீதசிலை என்னும் சிற்றூரில் பாண்டவப் படைப்பெருக்குடன் இணைந்துகொண்டது. நெடுந்தொலைவிலேயே பாண்டவப் படை அங்கு சென்றுகொண்டிருப்பதை ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். “இப்பகுதியினூடாக பாண்டவர்கள் படை நிரந்து சென்ற செய்தியைத்தான் ஒவ்வொருவரும் சொல்லிக்கொள்கிறார்கள். இளைய யாதவரையும் அர்ஜுனனையும் பீமனையும் தங்கள் விழிகளால் பார்த்ததாக ஒவ்வொருவரும் சொல்கிறார்கள்” என்றான் ஒற்றன். உதடுகளில் புன்னகையை காட்டாமல் “அத்தனை பேரும் பார்த்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் பலநாட்கள் இங்கே தங்கிச் சென்றிருக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111251/