Daily Archive: July 22, 2018

இணைகோட்டு ஓவியம்

  என் திரையுலக வாழ்க்கைக்கு தொடங்கி பதினான்கு ஆண்டுகளாகின்றன. திரையுலகில் பதினான்காண்டுகள் என்பது நீண்டகாலம். இத்தனை ஆண்டுகளில் வெவ்வேறு வகையான மனிதர்களை இங்கே சந்தித்திருக்கிறேன். எதிர்பார்ப்புகளே இல்லை என்பதனால் கசப்புகளும் இல்லை. இந்த நீண்ட ஆண்டுகளில் நான் சந்தித்த திரையுலக மனிதர்களில் வணக்கத்துடன் அன்றி எண்ணிக்கொள்ளாத தூய உள்ளம் கொண்ட சிலர் உண்டு, அதிலொருவர் திரைக்கதையாசிரியர் ஜான் பால்   சில ஆண்டுகளுக்கு முன்பு கோகுலம் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் திரைநிறுவனமாகிய கோகுலம் சினிமாஸ் மலையாளத்தில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110581

தொல்வெளி இசை

அன்பு ஜெயமோகன்,   வணக்கம். நலமா? தங்களை சென்னையில் சந்தித்த போது விரிவாகப் பேச முடியவில்லை. நான் வேறு ஒரு இடத்திற்கு செல்ல அவசரத்தில் இருந்தது ஒரு காரணம். தவிரவும் முன் பின் நேரடி அறிமுகம் இல்லாமல் பேசத் தயக்கம் இருந்தது. நான் சொல்வனத்தில் எழுதி வந்த தொடர் பற்றித் தங்களிடம் குறிப்பிட்டேன். அது தற்போது முடிந்து விட்டது. அதற்கான கண்ணிகளைக் கீழே சுட்டியுள்ளேன். தங்களுக்கு எப்போதாவது நேரம் இருந்தால் படித்துப் பார்க்கவும். இதை உங்களுக்கு அனுப்பக் காரணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110868

யானை டாக்டர்,தி ஹிண்டு

  தமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல் அன்புள்ள ஜெ   திருவனந்தபுரம் ஹிந்து நாளிதழில் இந்தக் கட்டுரையை வாசித்தேன். யானை டாக்டர் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த விமர்சனக்குறிப்பு. அந்தக்கதையின் அழகியல் வடிவம் மற்றும் உள்ளடக்கம் பற்றி மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார். அதாவது வாழ்க்கை வரலாற்றிலிருந்து எழுந்து மெல்ல ஒரு பேரபிள் ஆக மாறுகிறது என்று. மிக அழகான ஒரு குறிப்பு அது. ஏனென்றால் இங்கே அந்தக் கதையை  வாசித்தவர்கள் அந்த அழகியல்மயக்கத்தை புரிந்துகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். யானை அப்படியெல்லாம் தேடிவருமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111494

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெ   ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நான் காலச்சுவடு இதழ் வழியாக அவருடைய கட்டுரைகளை வாசித்து அறிமுகமானேன். அக்கட்டுரைகளில் தெரிந்த தெள்ளத்தெளிவான அணுகுமுறை எனக்கு மகிழ்ச்சி அளித்தது.   ராஜ் கௌதமனின் நூல்களை வாங்கி வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் எழுந்தபோது கிடைத்த நூல் வள்ளலாரைப் பற்றிய கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்ற நூல். அந்நூல் எனக்கு ஓர் அதிர்ச்சியை அளித்தது. வள்ளலாரை ஒரு ஏளனத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111371

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 52

சங்கன் போருக்கென படைக்கலங்களை ஒருக்கினான். குலாடத்தின் குன்றுக்குக் கீழே பலநூறு இடங்களில் இரவும்பகலும் அம்புகள் கூர்தீட்டப்பட்டன. வேல்கள் முனையொளி கொண்டன. விந்தையான பறவையொலி என அவ்வோசை கேட்டுக்கொண்டிருந்தது. அம்மக்களை அது கனவுகளுக்குள் வந்து எழுப்பியது. குருதி ஒளிகொண்ட பறக்கும் நாகங்கள் அவர்களை நோக்கி சீறின. குருதி குருதி என அவை சொல்லிக்கொண்டிருந்தன. “தீட்டப்படும் கூர் ஒருநாள் குருதியை அறியும் என்பார்கள், மூத்தவரே. அதன்பொருட்டே தீட்டுகிறேன். இவற்றில் குருதிநாடும் தெய்வங்கள் வந்தமைக! அவை நம்மை நடத்துக!” என்றான் சங்கன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111247