Daily Archive: July 21, 2018

இணையதளச் சிக்கல்

  நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எண்ணிக்கை பல மடங்கு. கொள்ளளவும் மிக அதிகம். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வரைச் செலவாகிறது. அதை பல சிறுபகுதிகளாகப் பிரித்து பணம் கொடுக்கிறோம். அவ்வாறு பணம் கட்ட விட்டுவிட்டதனால் இணையச்சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. மீண்டும் கட்டிவிட்டோம். மூன்றுமாதங்களுக்குப் பிரச்சினை இல்லை  

Permanent link to this article: https://www.jeyamohan.in/111491/

கம்போடியா பயணம்

  இன்று [20-7-2018] மாலை திருவனந்தபுரத்திலிருந்து கம்போடியாவுக்கு ஒரு பயணம் கிளம்புகிறோம். இம்முறை என்னுடன் முழுக் குடும்பமும் உண்டு. அருண்மொழி, அஜிதன், சைதன்யா. இந்தியாவிலிருந்து நண்பர்கள் கிருஷ்ணன், சிவராமன், விஜயகிருஷ்ணன். சிங்கப்பூரிலிருந்து சரவணன் விவேகானந்தன், சுபஸ்ரீ. மற்றும்  ‘லண்டன். முத்து, ‘”சிட்னி”  கார்த்திக், “டோக்கியோ”  செந்தில்   அஜிக்கும் சைதன்யாவுக்கும் இது முதல்வெளிநாட்டுப்பயணம். அதன் உரிய பதற்றங்கள்.ஐயங்கள் குழப்படிகள். வெண்முரசு ஒருவழியாக எழுதி 30 -7-2018 வரை சேமித்தாக்விட்டது. பதிவுகளும் 31 வரை தயாரிக்கப்பட்டுவிட்டன. ஆகவே எட்டுநாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111427/

ஆசிரியர்களின் வாழ்த்து

அன்புள்ள ஜெ.,   நான் ஒருகாலத்தில் பள்ளியில் சிறந்த மாணவர்களில் ஒருவன்(பிறகு கட்டமண்ணாகப் போனது வரலாறு). நான் ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு முன் வகுப்புகளில் பாடம் எடுத்த ஆசிரியைகள் இருவர் என்னுடைய நிலைமைக்கு தான்தான் காரணம் என்று சண்டை போட்டுக்கொண்டார்கள்(இப்போது என்னைப்பார்த்தால் வேறுமாதிரி சண்டை போடுவார்கள் என்பது நிச்சயம்) அதை அந்தப் பருவத்தில் வெகுவாகவே ரசித்தேன்.நான் சொல்வது என்னவென்றால், வேறு  எவர் பாராட்டையும்விட ஆசிரியரின் பாராட்டு நமக்களிக்கும் உந்து சக்தி மிக முக்கியமானது.நீங்கள் நூற்றுக்கணக்கான கட்டுரைகளும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111174/

ராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்…

  ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புக்குரிய ஜெ.மோ அவர்களுக்கு   வணக்கம் !     நான் சந்தோஷ் குமார். திருப்பூரில் வசிக்கிறேன். மெடிக்கல் டிரான்ஸ்க்ரிப்ஷன் பணியில் உள்ளேன். தமிழ் இலக்கியங்களில் நாவல் ,சிறுகதைகள், கவிதைகள் வாசிப்பதையும் ஒரு பகுதி நேர பணியாகவே செய்கிறேன்.     சென்னையில் வாசகசாலை எனும் இலக்கிய அமைப்பு வாசிப்பு எனும் செயல்பாட்டை  பொதுமக்களிடம் பரவலாக்க  நண்பர்களால் நடத்தப்படும் அமைப்பு. கார்த்திகேயன், அருண், பார்த்திபன்,மாரி செல்வம் போன்ற நண்பர்களால் தொடங்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111365/

சூஃபிதர்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் என்‌ சிந்தி நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. புனேகாரர். சென்னைக்கு மிக அரிதாக வருவார். வரும் போதெல்லாம் தவறாமல் மயிலாபூரிலுள்ள சூஃபிதர்(sufidar) என்னும் இடத்திற்கு போவார். சென்னையில் இருந்தாலும் இது நாள் வரை நான் அறியாமல் இருந்த இடமிது. சிந்திகாரர்களால் நடத்தப்படுவது. கோயில் என்றோ அல்லது மிகப் பெரிய பிரார்த்தனை கூடம் என்றோ சொல்லலாம். சிந்திக்கள் இந்துக்களாகவோ முஸ்ஸிம்களாகவோ இருந்த போதிலும் கூட சூஃபியிசம் அவர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110841/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51

தக்ஷிண விராடபுரி என்று அயலவரால் அழைக்கப்பட்ட குலாடபுரியில் இருந்து அதன் இளவரசனாகிய ஸ்வேதனும் அவன் இளையோனாகிய சங்கனும் ஆயிரம் புரவிவீரர்களும் ஈராயிரம் வில்லவர்களும் அவர்களுக்குரிய பொருட்களை சுமந்து வந்த ஆயிரத்து இருநூறு அத்திரிகளுமாக மலைப்பாதையினூடாக சதுப்புகளையும் ஆற்றுப்பெருக்குகளையும் கடந்து பாண்டவப் படையை சென்றடைந்தனர். குலாடநகரி அவர்களின் அன்னையான பிரதீதையால் முடிகொள்ளப்பட்டது. அவர்களின் வழக்கப்படி அன்னைசொல் கேட்டு மைந்தர் ஆட்சி செய்தனர். குலாடநகரி நெடுங்காலமாக பதினெட்டு குலாடர் குலங்களின் குலத்தலைவர்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடி குலஅமைப்பின் மாற்றங்களையும் ஆட்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111244/