Daily Archive: July 20, 2018

பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்

I எப்போதும் எதிர்ப்படக் கூடிய சாத்தானை எதிர்பார்த்து சட்டைப்பைக்குள் சிலுவையை சுமந்தலையும் விசுவாசியைப் போல கவிதைத் தொகுதிகளை பையில் வைத்துக் கொண்டு அலைந்த நாட்கள் 2002 லிருந்து 2008 வரையிலான என் சென்னை வாசத்தின் நாட்கள். ஷங்கரின் கவிதைத் தொகுதிகள் இரண்டும் அவற்றில் உண்டு. கல்லூரியில் நான் உலவிக்கொண்டிருந்த கலை இலக்கிய உலகம் அனைத்தையும் விட்டுவிட்டு, கனிணிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளையும் வென்றடக்க வேண்டிய நிர்ப்பந்தங்களோடு சென்னைக்கு அனுப்பப்பட்டேன். கும்பகோணத்தில் படித்த காலங்களிலிருந்து சிற்றிதழை சேர்ந்தவர்களோடு இருந்த நட்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111195/

கல்பற்றா நாராயணன், நான், தொலைக்காட்சி

  தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை என்பது என் கொள்கைகளில் ஒன்று. ஆனால் கூடுமானவரை என்று சேர்த்துக்கொள்ளவேண்டும். வெவ்வேறு கட்டாயங்களால், நண்பர்களுக்காக ஓரிருமுறை தொலைக்காட்சியில் தோன்றியதுண்டு. தொலைக்காட்சிநிலையம் சென்றது இரண்டே முறைதான். தொலைக்காட்சியில் தோன்றுவதன் வழியாக ஒருவாசகனைக்கூட அடைய முடியாது என்பது என் எண்ணம்.   அச்சுநூல்களில் எவ்வளவு வேண்டுமென்றாலும் நம் முகம் தோன்றலாம். எப்படியோ அச்சில் ஒன்றை படிப்பவர் நம் சமூகத்தில் ஒரு சிறிய வட்டத்தைச் சேர்ந்தவர். தினத்தந்தி மாலைமுரசு படிப்பவரே கூட மிகச்சிறுபான்மையானவர்தான்.இங்குள்ள அத்தனை அச்சு ஊடகமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111431/

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   அன்புள்ள சார்,   மிக்க மகிழ்ச்சி!   எங்க ஊருக்காரர் விருது வாங்குகிறார். தளத்தில் ‘விருதுநகர் அருகே புதுப்பட்டி’ என்பதற்கு பதிலாக ‘ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்றாப் புதுப்பட்டி’ என்று போடலாமா சார்? :-)   நன்றி, முத்துக்கிருஷ்ணன் லண்டன்   அன்புள்ள ஜெயமோகன்     வணக்கம். நலம்தானே?     சற்று முன்புதான் விருது அறிவிப்புச் செய்தியைப் படித்தேன். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். போன வாரம் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111339/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 50

புஷ்பகோஷ்டத்தின் மூன்றாவது மாடத்தில் சற்று வெளியே நீட்டியிருந்த சிறிய மரஉப்பரிகையில் பானுமதி அசலையுடன் அமர்ந்திருந்தாள். வெளியே இருந்து நோக்குபவர்களுக்கு உள்ளிருப்பவர்கள் தெரியாதபடி மென்மரத்தாலான மான்கண் சாளரம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நெடுநேரம் அமர்ந்திருப்பது கடினம். பீடங்கள் குறுகலானவை. மூன்று பேர் இயல்பாக அமர்ந்திருக்கும் அளவுக்கே அதன் அமைப்பிருந்தது. ஆனால் அங்கிருந்து கீழிருக்கும் முற்றத்தையும் அப்பால் இருக்கும் கோட்டைச்சுவர் வரை விரிந்த காவலர்வெளிகளையும் அரண்மனையின் இடைநாழியையும் தெளிவாக பார்க்க முடிந்தது. முன்பு அரசியர் வந்தமர்ந்து கீழே நிகழும் காவலர்படைகளின் அணிவகுப்புகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111232/