Daily Archive: July 17, 2018

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது

  தமிழிலக்கிய ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறோம். விழா வழக்கம்போல டிசம்பர் இறுதிவாரம் கோவையில் நடைபெறும் ராஜ் கௌதமன் அவர்களை 1988ல் அவர் காலச்சுவடு இதழில் எழுதிய ”தண்டியலங்காரமும் அணுபௌதிகமும்‘ என்னும் கட்டுரை வாயிலாகவே நான் அறிவேன். அன்றுமுதல் தொடர்பு எப்போதுமிருந்தது. அவ்வப்போது அவரைப்பற்றி எழுதியும் வந்திருக்கிறேன். நான் எழுதிய நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களில் ஒன்று அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அவருடைய கருத்துக்களுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111265/

பனிமனிதன்

  அன்பின் ஜெ   நலமே விழைகிறேன். இரு வாரங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சைக்காக என் மகளை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். செல்வதற்கு முன் தயாரான போது மகாதர்சினி மறக்காமல் எடுத்துவைத்தது பாதிவரை படித்திருந்த பனிமனிதன் நாவலை. ஏழாம் வகுப்புக்கு செல்கிறாள் இவ்வருடம். மறுநாள் சிகிச்சை முடித்து மயக்கம் நன்றாக தெளிந்த பின் அன்று பகல் முழுக்க வலியும் வேதனையுமாக சென்றது. இரவு பதினோரு மணிவாக்கில் என்னை பனிமனிதனை வாசிக்க சொன்னாள். புனைவெழுத்தை வாசிக்கும் போது, குறிப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110810/

சங்க இலக்கியம் – கடிதங்கள்

  குருகு கைவிடு பசுங்கழை1 கைவிடு பசுங்கழை -2 அன்புநிறை ஜெ,     தங்களின் குருகு கட்டுரை வாசித்தேன். கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் எனும் தங்களின் காணொலியின் மூலம் இக்கட்டுரைக்கு வந்தடைந்தேன் மீண்டும் பல திறப்புகள். நான் குடிமையியல் தோ்வுகளுக்கான தோ்விற்கு பயிற்சி எடுத்துவருகிறேன். விருப்பப்பாடமாக தமிழ்தான் தேர்வு செய்துள்ளேன். யாரும் இல்லை தானே கள்வன் எனும் குறுந்தொகை பாடல் எங்களுக்கு பாடப்பகுதியில் உள்ளது. தாங்கள் தெரிவித்துள்ளபடி எங்கள் ஆசானும் அதை கொக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111060/

ராஜ் கௌதமன் படைப்புக்கள்

  ராஜ் கௌதமனின் நூல்களை நியூ செஞ்சுரி பதிப்பகம் மறுபதிப்புகளாக வெளியிட்டிருக்கிறது. மொத்தம் 12 நூல்கள். நாவல்கள், இலக்கியக் கோட்பாட்டு நூல்கள், வாழ்க்கை வரலாறுகள் என ஓர் எழுத்தாளரின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை அளிக்கும் நூல்கள் இவை   ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் ====================================================================================================== சிலுவைராஜ் சரித்திரத்தை மதிப்பிடுதல் ராஜ்கௌதமனின் இரு நூல்கள் ராஜ் கௌதமன் -கடிதங்கள் விளக்கு விருதுகள் ராஜ் கௌதமன், சமயவேல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/111180/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 47

விதுரரின் மாளிகையிலிருந்து அரண்மனை திரும்பும் வரை அரசியர் மூவரும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. தங்கள் எண்ணங்களில் மூழ்கி தேரின் ஒற்றைப் பீடத்தில் மூன்று வெவ்வேறு உலகங்களிலென அமர்ந்திருந்தனர். விதுரரின் நிலைகுலைவு அவர்களை வெவ்வேறு வகையில் உலுக்கிவிட்டிருந்தது. அவ்வரண்மனையில் ஒவ்வொன்றும் காற்றுகளால் அலையடிக்கும் ஆடைகள்போல கொந்தளித்துக்கொண்டிருக்கையில் விதுரர் அசையாத் தூண் என நின்றிருந்தார் என்னும் உளப்பதிவு பானுமதிக்கு இருந்தது. எப்போதோ ஒருமுறை “மைந்தரிடையே போர் என்பது முற்றழிவு என்று தெரியாதவரா அமைச்சர்? எவருக்கோ என விலக்கம் கொண்டிருக்க எப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111183/