Daily Archive: July 16, 2018

சேற்றில் மலர்தல்

இரு நண்பர்கள் பாண்டிச்சேரிக்குச் செல்கிறார்கள் அன்று தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. பாண்டிச்சேரிக்குச் செல்வதென்றாலே குடி கேளிக்கை என்று தான் அன்று பொருள். இருவரில் ஒருவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவர் செல்வந்தர். சொந்தமாக கார் வைத்திருக்கிறார். ஜாலியாக இருப்போம் வா என்று மற்ற நண்பரை அழைத்திருந்தார். இருவருக்குமிடையே வாழ்க்கைப்பார்வையில் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பணத்தை எண்ணி சிக்கனமாகச் செலவழிக்கும் மனநிலை ஒருவருக்கென்றால் பணம் என்பது அன்றையன்றைய தேவைக்காக செலவழிக்கவேண்டியது என்ற எண்ணம் இன்னொருவருக்கு. அவர்கள் பாண்டிச்சேரியில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111230/

எம்.எஸ். கடிதங்கள்-2

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1 எம்.எஸ். அலையும் நினைவுகள்-2 எம்.எஸ். அலையும் நினைவுகள்-3   அன்புள்ள ஜெயமோகன் சார், நலமாக இருக்கிறீர்களா? இன்று காலை எம். எஸ் பற்றிய பதிவை வாசித்து விட்டு எழுதுகிறேன். நானும் நிறைய சினிமா பார்த்து விட்டுத்தான் தான் இலக்கியம் வாசிக்க வந்தேன். ஆங்கில சாகச நாவல்கள் படிக்கும் போது படங்களில் பார்த்த காட்சிகள் தான் தோன்றும். ஒரு வேளை அதையெல்லாம் பார்க்காமல் இருந்திருந்தால் இந்த கதையை நாம் எப்படி கற்பனை செய்வோம் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110996/

சொல்லரசி

அன்புள்ள அண்ணா, வணக்கம் , கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக காவிய முகாம்களை கவனித்து வருகிறேன். தொடர்ச்சியாக நீங்கள் அழகுணர்வையும், வாழ்வை பற்றிய பெரு நோக்கையும், மதிப்புமிகுந்த தருணங்களையும் உற்றுப்பார்த்து உள்ளுக்குள் சேமிக்க சொல்லிக்கொடுத்துக்கொண்டே வருகிறீர்கள். கலையின் வழியாக தத்துவத்தை, அறிதலை, புரிந்து கொள்ளுமாறு வழி காட்டுகிறீர்கள். கலையின் மேன்மை, அழகு இவை எல்லாமே ஒட்டு மொத்த மானுட சமூகத்திற்குமான விளக்கம் என்றும், மாறாத உண்மையின், அறிதலின் பல முகங்களையும் தரிசிக்க வழி என்று ஒவ்வொருவரும் உணரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110814/

காப்பீடு, இரண்டு முட்டாள்கள்

காப்பீட்டில் மோசடிகள் காப்பீடு -கடிதங்கள் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம் வாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப் ஸ்டார் காப்பீட்டு நிறுவனத்தில் 25 லட்சம் ரூபாய்க்குக் காப்பீடு போட்டிருந்தேன். ஆண்டுக்கு 60 ஆயிரம். இரண்டு ஆண்டு கட்டிவிட்டேன். இம்முறை மீண்டும் அதைப்புதுப்பிக்கவேண்டும். நான் தெளிவாகவே சொல்லிவிட்டேன். நான் அறிந்த செய்திகளின்படி இந்தப்பெரிய தொகைக்கு மருத்துவக் காப்பீடு என்பது மிகப்பெரிய மோசடி. கட்டிய காசு திரும்பக் கிடைக்கப்போவதில்லை- எந்நிலையிலும். முகவர் பணிவாக “சரிசார், பாதியா குறைச்சிடலாம்” என்றார். “அதே சீனியாரிட்டி சார். பிரீமியத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111236/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46

விதுரரின் மாளிகை முற்றத்தில் அரசியர் மூவரும் அமர்ந்த அணித்தேர் சென்று நின்றது. முன்னரே அங்கு அணிவகுத்திருந்த காவலர்கள் வாள் தாழ்த்தி வாழ்த்துரை முழக்கினர். மாளிகையின் உள்ளிருந்து மூன்று சேடியர் கையில் மலர்த்தாலமும் சிற்றகல்சுடரும் மஞ்சள்நீருமாக வெளியே வந்து அரசியரை வரவேற்றனர். தாரையும் அசலையும் இறங்கி நின்றபின் பானுமதி கைகூப்பியபடி இறங்கினாள். தாலத்தில் இருந்த நீரை சேடி அவள் காலில் விட்டு கழுவ மலர் எடுத்து குழலில் சூடி, சுடர் தொட்டு கண்ணில் ஒற்றி அவள் மாளிகைக்குள் நுழைந்தாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111146/