Daily Archive: July 15, 2018

நூலகம் எனும் அன்னை

  அருமனை அரசு நூலகத்தின் வருடவிழாவில் சிறப்புரையாற்ற வாய்ப்புக்கிடைத்தமை எனக்கு மிகவும் மனநிறைவூட்டும் அனுபவமாக உள்ளது. அத்துடன் ஆழமான ஒரு ஏக்கமும் இப்போது என்னில் நிறைகிறது. காரணம் இது என் சொந்த ஊர்; இந்த நூலகத்தில்தான் நான் என் இளமைப்பருவத்தை செலவழித்தேன். என் அப்பா பாகுலேயன்பிள்ளை இங்கே உதவி பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கிட்டத்தட்ட முப்பது வருடம் பணியாற்றினார். நாங்கள் இங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ள முழுக்கோடு என்ற ஊரில் தங்கியிருந்தோம். அதன்பின் மறுபக்கம் ஐந்து கி.மீ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77/

கணிப்பொறியில் எழுதுவது -கடிதங்கள்

கணினியில் எழுதுவது… வாசிப்பும் அ.முத்துலிங்கமும்   அன்புள்ள ஜெ,     பள்ளிக்கூடங்கள் எழுதுமுறையை விட்டுவிடக்கூடாது என்பதே என் விருப்பம். நான் 12ம் வகுப்புவரை தமிழ் மீடியமும் இளங்கலையில் முதல் இரண்டு ஆண்டுகள் தமிழ் பாடமும் படித்தேன், எழுத தயங்கியதே இல்லை. என் மனைவி ஆங்கில வழி படித்தவள் தமிழ் எழுதுவார் என்றாலும் சரளமாக எழுத மாட்டார்.     மகள் தற்போது தான் எழுத படிக்கிறாள், ஆங்கிலம் வேகமாக எழுதவும், தமிழ் வேகமாக படிக்கவும் வருகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111776/

வாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப்

  காப்பீட்டில் மோசடிகள் காப்பீடு -கடிதங்கள் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111107/

உயிர்த்தேன் பற்றி,,,

உயித்ட்   அன்புள்ள ஆசிரியருக்கு, உங்கள் தளத்தில் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் மற்றும் மோகமுள் தாவல்களைப் பற்றிய விமரசனமும் கருத்துக்களும் தொடர்ந்து காணக்கிடைக்கிறது… ஆனால் அவரின் உயிர்த்தேன் நாவலை, அப்படி ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றுகூட தாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடாமல் தவிர்த்ததுபோல தெரிகிறது.தங்களின் இலக்கிய முன்னோடிகள் நூலில் கூட அவரின் பிற நாவல்களையெல்லாம் குறிப்பிட்டிருந்தாலும் இதன் பெயரைக்கூட குறிப்பிடவில்லை.   வண்ணதாசன் தனது கடிங்களின் தொகுப்பு நூலான எல்லோர்க்கும் அன்புடன் நூலின் ஒரு கடிதத்தில் தி.ஜானகிராமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110803/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45

பானுமதி ஆடிமுன் அமர்ந்திருக்க சேடியர் அவள் ஆடைகளையும் குழலையும் சீர்படுத்தினர். கைகளைக் கட்டியபடி அவளுக்கு முன்னால் நின்று நோக்கிக்கொண்டிருந்தாள் தாரை. பின்னால் சுவர்சாய்ந்து அசலை நின்றிருந்தாள். பழக்கமற்ற இளம்சேடி சிறு பொற்பேழையிலிருந்து ஒரு கணையாழியை எடுக்க அசலை அதை பார்த்து “அது பாஞ்சாலத்து அரசி அளித்தது அல்லவா?” என்றாள். “எது?” என்றாள் தாரை ஆவலுடன் குனிந்து நோக்கி. “இந்தக் கணையாழியை பாஞ்சாலத்து அரசி எனக்காக சாத்யகியிடம் கொடுத்தனுப்பினாள். நான் அதை எப்போதும் அணிந்திருந்தேன். பின்னர் அகற்றிவிட்டேன்” என்றாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111117/