நவீன இலக்கியத்தின் முக்கியமான ஒரு பொதுக்கூறாக குறிப்பிடப்படுவது தனிமனிதனுக்கு அதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலேயே அப்பண்பினை காண முடியும். அவருடைய புத்துயிர்ப்பு நாவலில் அரசமைப்பின் உச்சப் பதவிகளில் இருப்பவர்களின் மீது நெஹ்லூதவ் கொள்ளும் எரிச்சலை இப்பண்பிற்கு உதாரணமெனச் சுட்டலாம். அமைப்புகளால் கைவிடப்பட்ட அல்லது கண்டுகொள்ளப்படாதவர்களால் ஆனது அசோகமித்திரனின் படைப்புலகம். தற்கொலை செய்து கொள்ளுதல் எனும் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிப்பவள் அடுத்த வீடு கிடைக்குமா என நடைமுறைச் சிக்கலுக்குத் தள்ளப்படுவது (தண்ணீர்), தேசப்பிரிவினை …
Daily Archive: July 14, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/110961
கொற்றவை தொன்மமும் கவிதையும்
கொற்றவை வாங்க அன்புடன் ஆசிரியருக்கு நேற்று தற்செயலாக கொற்றவையை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். முதல் பகுதியான நீர் மட்டும் வாசித்து முடித்தேன். கொற்றவையை நண்பர்களிடம் வாசிக்கச் சொல்லும் போது இப்பகுதியை மட்டும் சற்று கவனத்துடன் பொறுமையாக வாசிக்கச் சொல்வேன். நீங்கள் ஒரு உரையில் உங்களது நாவல்களில் தொடக்கத்தை கடினமானதாக அமைப்பதாகச் சொல்லி இருப்பீர்கள். விஷ்ணுபுரம் கொற்றவை ரப்பர் இந்த மூன்று நாவல்களிலும் நான் அதை உணர்ந்திருக்கிறேன். அத்தகைய சவாலை அளிப்பதாலேயே ஒரு தேர்ந்த …
Permanent link to this article: https://www.jeyamohan.in/110902
இலக்கியத்தில் மாற்றங்கள் -கடிதங்கள்
மரியாதைக்கு உரிய ஜெயமோகன், உங்களுடைய ‘இலக்கியத்தில் மாற்றங்கள்’ உரையை யு டியூபில் கண்டடேன். உங்கள் இலக்கியப்பணிகள் குறித்துப் பெருமிதம் அடையும் தமிழன் என்று அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். ரப்பர், விஷ்ணுபுரம், வெள்ளையானை, அறம் இன்னும் சில நூல்களை வாசித்திருக்கிறேன். உங்களுடைய பல உரைகளை யூ டியூபில் பார்த்திருக்கிறேன். இன்னும் பார்ப்பேன். நூல்களைப் படிப்பேன். இலக்கியத்தில் மாற்றங்கள் உரையில் பதிவு செய்த பெரும்பாலான கருத்துக்கள் விவாத வெளியில் நான் வாசித்த கேட்ட …
Permanent link to this article: https://www.jeyamohan.in/110887
‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 44
பானுமதி தாழ்வான சாய்ந்த பீடத்தில் தலைசரித்து கால்நீட்டி அமர்ந்து மார்பில் கைகளைக் கட்டியபடி விழிமூடி கேட்டுக்கொண்டிருக்க அவளுக்கு இருபுறமும் அமர்ந்த கற்றுச்சொல்லிப் பெண்டிர் ஓலைகளை படித்துக்காட்டிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கற்றுச்சொல்லிக்கும் இரு எடுத்தளிப்புச் சேடியர் வலமும் இடமுமென அமர்ந்து ஒருத்தி சுவடியை கொடுக்க பிறிதொரு சேடி வாங்கி மீண்டும் பேழையில் அடுக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கற்றுச்சொல்லி ஓர் ஓலையை படித்து முடித்ததுமே பானுமதி ஒற்றைச் சொல்லால் ஆமென்றோ அல்லவென்றோ ஆணையிட்டாள். அரிதாக தன் எண்ணத்தை உரைத்து ஆவன செய்யவேண்டியவற்றை கூறியதுமே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/111052