Daily Archive: July 13, 2018

‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம்

[பத்தாண்டுகளுக்கு முந்தைய கடிதம் இது. இதை எழுதியவர் இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளர்] ஒரு நண்பரின் கடிதம் …….எனது எழுத்துத் திறனை விட, எனக்குப் படிக்கும் ஆசை அதிகம். எனது வேலை, பல சமயங்களில், என்னை உயிருடன் தின்கிறது. எழுதுவதால் இளைப்பாறுதல் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். உங்கள் கருத்தை அறிந்து கொண்டு, மேலே செல்ல ஆசை…. அன்புள்ள நண்பருக்கு, உங்கள் கடிதம். *** நீங்கள் நினைப்பது சரிதான். நீங்கள் எழுதலாம் ஏதாவது ஒருதுறையில் சற்றே படைப்பூக்கத்துடன் செயல்படுவதை ‘ஹாபி’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/338/

குருதிக்குமிழிகள்

வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்துகொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும்  இணைத்துக்கொண்டு அதைநோக்கி செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும், விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் அன்னையர். விழுவன அனைத்தும் மண்ணையே வந்தடையவேண்டும் என்பதுபோல போரின் துயர்கள் இறுதியாக அவர்களுக்கே சேர்கின்றன. ஆகவே அவர்கள் தங்கள் மைந்தர்களைக் காக்கும்பொருட்டு போரைத் தவிர்க்க முயல்கிறார்கள். குருதிச்சாரலின் கதையின் பேரொழுக்கு இதுவே. அப்போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110998/

மௌனியும் ஜெயகாந்தனும்

அன்புள்ள ஜெ., ஜெயகாந்தன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு “தமிழ் ஹிந்து” வில் ஒரு பேட்டியில் தனக்குப்பிடித்த எழுத்தாளராக மௌனியைக் கூறியிருந்தார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியிலும் அதையே கூறியிருந்தார். இது எதைக்குறிக்கிறது? அவர் மிகக்குறைவாக படிப்பவர் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் இலக்கிய முன்னோடிகள் வரிசையிலும் மௌனியை “ஒளிவட்ட“ங்களை விலக்கி எழுதியிருப்பீர்கள். அசோகமித்திரன் கூட ஒரு எழுத்தாளரை விமர்சனம் செய்ய குறைந்தது ஐம்பது ஆண்டுகளாவது காத்திருக்கவேண்டும் (அப்படித்தான் நினைக்கிறேன்) என்பது போல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110781/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43

தீர்க்கனைத் தொடர்ந்து வந்த இரண்டு ஏவலர்கள் மதுக்குடுவைகளையும் வெள்ளிக்கோப்பைகளையும் கொண்டுவந்தனர். அவற்றை தாழ்வான பீடத்தில் வைத்து மதுவை ஊற்றி இருவருக்கும் அளித்தனர். விகர்ணன் பீதர் மதுவை கையிலெடுத்தபோதே குமட்டி உலுக்கிக்கொண்டான். குண்டாசி “தங்களுக்கு பழக்கமில்லை, மூத்தவரே. தாங்கள் யவன மதுவையே அருந்தலாம்” என்றதும் “இல்லை” என்றபின் வாயில் வைத்து ஒரே மூச்சாக உறிஞ்சி விழுங்கி குமட்டி வாயை கையால் பொத்திக்கொண்டு குனிந்தமர்ந்து உடல் உலுக்கிக்கொண்டான். இருமுறை எதிர்க்கெடுத்துவிட்டு சிறிய ஏப்பத்துடன் “நீ சொன்னது சரிதான். இது வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111031/