Daily Archive: July 11, 2018

நேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்

  மலேசியாவிலிருந்து எழுத்தாளரும் அரசியல் களப்பணியாளருமான மணிமொழியின் முன்னெடுப்பில் நேர்கோடு என்னும் இலக்கிய இருமாத இணைய இதழ் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திற்கும் உலக இலக்கிய மொழியாக்கத்திற்குமானது இவ்விதழ். பலதளங்களில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் செயல்படும் படைப்பாளிகள் இதில் எழுதியிருக்கிறார்கள்   நேர்கோடு வாசிப்புக்காக   ஆசிரியர் குழு என்று உள்ளதா? யாரெல்லாம் நேர்கோட்டின் உருவாக்கத்தில் உங்களுடன் இணைந்தது? மணிமொழி: நேர்கோடு எனது சொந்த வெளி. ஆதலால், அதன் வெளியைத் திடப் படுத்தும்வரை ஆசிரியர் குழுவென நான் நேர்கோட்டுக்காகத் தற்போதைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111086/

வாசகர்களுடன் உரையாடுதல்

வாசகர்களின் நிலை -கடிதங்கள் அன்புள்ள ஜெ,   அந்த “இல்லுமினாட்டிக்கு”(கம்னாட்டி போல ஒலிக்கவில்லை?) உங்கள் பதில் பிரமாதம். ஆனால், நீங்கள் கூறியதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டால் இன்னொரு புனைகதை எழுத்தாளன் தமிழில் கிடைக்க வாய்ப்பு அதிகமே. ஏனென்றால் அவருடைய உரைநடை சிறப்பாகவே இருந்தது. எப்படியோ, மிகச் சிறிய பதிலைப்பெற்ற மிகப்பெரிய பதிவு என்ற வகையிலே அவர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். ஆனாலும் இரண்டு வரி பதிலை எழுத இருபது பக்கக் கடிதம் படிக்க வேண்டிய(முழுதும் படித்தீர்களா என்ன?) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111010/

விளையாட்டு

  அன்புள்ள ஜெ, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளைப் பார்க்கிறீர்களா? உங்களுக்கு அதற்கு நேரம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒருவேளை பார்ப்பீர்களென்றால், espn மலையாள சேனலில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் இதைத் தற்செயலாகவே கண்டடைந்தேன். மலையாளம் தெரியாதது ஒன்றும் பிரச்சினை இல்லை. சற்று நேரம் கவனித்துக் கேட்டால் புரிந்து கொள்ள முடிகிறது. சைஜு தாமோதரன் என்ற வர்ணனையாளர் இதை ஒரு மறக்க முடியாத அனுபவமாக்குகிறார்.  மற்ற மொழி வர்ணனையாளர்கள் அழுது வடியும்போது இவரது வர்ணனை விறுவிறுப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் உள்ளது; நகைச்சுவையாகவும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111100/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41

துரியோதனன் “அஸ்தினபுரியிலிருந்து நீ விரும்பியதை கொண்டுசெல்லலாம், இளையோனே” என்றான். “இங்கு நீ கௌரவரில் ஒருவன். கருவூலத்தில் நூற்றொன்றில் ஒன்று உன்னுடையது. அஸ்தினபுரியின் படைகளிலும் நூற்றொன்றில் ஒன்று உனக்குரியது.” யுயுத்ஸு “இங்கிருந்து நான் எதையும் எடுத்துச் செல்லலாகாதென்று உறுதிகொண்டிருக்கிறேன். ஆகவே இந்நகரின் எல்லையில் இவ்வாடைகளையும் களைந்து மரவுரி அணிந்தபடி இளைய யாதவரை நோக்கி செல்லவிருக்கிறேன்” என்றான். “நன்று! அது உன் விருப்பம். இங்கிருந்து நினைவுகளையும் உணர்வுகளையும்கூட எடுத்துச் செல்லவேண்டியதில்லை, இளையோனே” என்றான் துரியோதனன். குண்டாசி “அதாவது அஸ்தினபுரியின் படைசூழ்கைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110948/