Daily Archive: July 9, 2018

அசோகமித்திரன் என்னும் அளவுகோல்

இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’ அழகியல் அறிதல் தேவையா? ஜெ, இருநாட்களாகத் தொடர்ந்து நடந்துவரும் சிறுகதை விவாதத்தைக் கவனித்துவருகிறேன். கே.என்.செந்திலின் கதையையும் வாசித்தேன். நான் அசோகமித்ரனின் ரசிகன். அசோகமித்ரனின் கதைகளில் மிக எளிமையான அன்றாட நிகழ்ச்சிகள் மட்டுமே உள்ளன. நாம் எப்போதும் பார்க்கும் சாதாரணமான மனிதர்கள் காணக்கிடைக்கிறார்கள். மிதமான மொழியில் அவர் எழுதுகிறார்.எதையும் மிகைப்படுத்துவதில்லை. உணர்ச்சிகரமாக ஆக்குவதுமில்லை. அதுவே வாழ்க்கையின் சிறந்த காட்சியை அளிக்கிறது என்றுத் தோன்றுகிறது. அவற்றை வாசிக்கும்போது உருவாகும் கலையனுபவம் இந்தமாதிரியான கதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111014

புரட்சிப்பத்தினி -கடிதங்கள்

புரட்சிப்பத்தினி அன்புள்ள ஜெ., ஓஷோ ஒருமுறை, இந்திய பெண்கள் சீதையை அல்ல திரௌபதியையே தன் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் என்று சொல்லி இருப்பார்.. உங்கள் கட்டுரையைப் பார்க்கும் போதும், வெண்முரசு படிக்கும் போதும் அது மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.. என் மகளுக்கு யாரை அடையாளமாக முன்னிறுத்த வேண்டும் என்பதும் புலப்படுகிறது.. நன்றி ரத்தன் *** அன்புள்ள ஜெ புரட்சிப்பத்தினி கட்டுரை வாசித்தேன். நம் இலக்கியம் சினிமா ஆகியவற்றுக்கும் நிஜவாழ்க்கைக்கும் நிறையவே வேறுபாடுண்டு. இலக்கியத்தில் நாம் உருவாக்கும் பெண்கள் நடுத்தர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110832

திருமதி டென்,ஒன்றுமில்லை -கடிதங்கள்

ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க அன்புடன் ஆசிரியருக்கு இக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின் ஆதார இச்சை என்ன? தன்னில் எழுந்த உயிரை எந்த எல்லைக்கும் சென்று வாழவைக்க விழையும் துடிப்பு அது. அத்துடிப்பின் வளர்ச்சியாக மொத்த சமூக உருவாக்கத்தையும் பார்க்கிறவர்கள் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன் சிறுகதை சற்று செயற்கையாக இருந்தாலும் காந்தியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110826

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39

விதுரர் எழுந்து சஞ்சயனிடம் “நான் கிளம்புகிறேன். அரசரிடம் விடைபெற்றுவிட்டேன்” என்றபின் யுயுத்ஸுவையும் குண்டாசியையும் பார்த்து தலையசைத்துவிட்டு கிளம்பினார். குண்டாசி “அரசருக்கான அறவுரைகளை முடித்துவிட்டிருப்பீர்கள். தந்தையைப் பழித்த மைந்தனுக்கான அறவுரைகள் கூறலாமே?” என்றான். விதுரர் களைத்த புன்னகையுடன் “அறவுரைகள் சொல்வதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறேன். ஆகவே அஞ்சவேண்டியதில்லை” என்றார். சால்வையை எடுத்து தோளில் சுழற்றி அணிந்தபடி “தந்தையிடம் சொன்ன அச்சொற்களால் நீ நிறைவுறுவாய் என எண்ணுகிறாய், மைந்தா. ஆனால் அது வீண் என இங்கிருந்து குருக்ஷேத்திரத்திற்கு கிளம்பும்போதே உணர்வாய்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110928