Daily Archive: July 8, 2018

அழகியல் அறிதல் தேவையா?

இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’ அன்புள்ள ஜெ நீங்கள் சகோதரிகள் கதையைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நான் ஓர் எளிய வாசகன். விமர்சகன் அல்ல. நான் இந்தக்கதை இந்தவகையான அழகியல்கொண்டது  என்று தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் உண்டா? இந்த விமர்சன முறைகளைத் தெரிந்துகொள்ளாமல்  வாசித்தால் இலக்கியம் புரியாதா? இவை ஏன் எனக்கும் இலக்கியத்திற்கும் நடுவே வரவேண்டும்? எஸ்.ராஜ்குமார் *** அன்புள்ள ராஜ்குமார், இந்தவகையான பேச்சுக்கள் பொதுவாக முன்பெல்லாம் வெட்டி அரட்டைகளில்தான் இருந்தன. அரட்டைகள் அப்படியே அச்சாகும் முகநூல்சூழலில் இவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110983/

காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்

காப்பீட்டில் மோசடிகள் காப்பீடு -கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, காப்பீடு மோசடி குறித்த தங்கள் பதிவு வாசித்தேன். நண்பர்கள் சொன்னது என்றே அனைத்து கருத்துகளும் வந்திருக்கின்றன. நம்வழக்கறிஞர்களிடம் சாதக பலன்களை கேட்டுப் பெற முயற்சித்த உங்கள் திட சித்தத்துக்கு என் பாராட்டுகள். நீங்கள் ஐயப்பட எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் இப்படி முழுக்க மோசடி என்றும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு  கப்பர் சிங்குகள் மட்டுமே தலைமை அதிகாரிகளாக வர முடியும் என்பது போலவும் ஒரே அடியாகப் போட்டு  தள்ளியிருக்கியிருக்கிறீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110986/

சுகாவின் “அண்ணன்களின் பாடகன் “

அன்புள்ள ஜெ., சுகாவின் “அண்ணன்களின் பாடகன் ” என்ற சொல்வனப் பதிவை படித்து ஒவ்வொரு பாடலாக மீள் கேட்பு  செய்து கொண்டிருந்தபோது கிடைத்த பாடல் இது. பேரின்பப் பெருவிழாக்களில் கேட்கும் ஜெபத்தோட்ட கீதங்களை நினைவுபடுத்தியது முதலில் கேட்டபொழுது (இதுபோலவே என்னை ஏமாற்றிய மற்றொரு பாடல் “ஊமை விழிகள்” படத்தில் ஒலித்த ராத்திரி நேரத்து பூஜையில்ல்..”டோலக்” சத்தம் பெருமாள் கோயில் பஜனையை நினைவு படுத்தியது.கூர்ந்து கேட்ட பிறகுதான் வேறு பஜனை என்று தெரிந்தது) படத்தின் பெயர் வாசுகி. ஊர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110820/

சோனா

வணக்கம் விஷ்ணுபுரம் நாவலை நான் முதலில் கண்டது, 12 வருடங்களுக்கு முன், என் நண்பன் ஒருவன் வீட்டில். பாலைவனத்தில் ஸ்ரீ சக்கரத்தை வரைந்து முடிப்பது வரை மட்டுமே படிக்க முடிந்தது.  ஸ்ரீ சக்கரம் என்றால் என்னவென்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை என்றாலும் அந்த ப்ரம்மாண்டத்தினை உணர முடிந்தது. 2 மாதங்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் நாவலை கிண்டிலில் வாங்கி படித்து முடித்தேன். இந்த நாவலை நீங்கள் சுமார் 25 வருடத்துக்கு முன்னால் எழுதியிருக்கிறீர்கள் என்பது என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111560/

உயிர்த்தேன் -கடிதங்கள்

. உயிர்த்தேன் பற்றி,,,   ஜெ     இலக்கியத்தின் சுவைகள் பிரத்தியேகமானவை உணவுச் சுவைகள் போலவே. புடலங்காய் கூட்டை நான் சுவைத்துச் சாப்பிடுவது பலருக்கும் ஆச்சரியமாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று எட்டு மெய்ப்பாடுகளைக் குறிப்பிடுகிறது தொல்காப்பியம். இதில் பெருமிதத்தின் கீழ் வரும் நெகிழ்ச்சி மிக அதிகமாகத் தொழிற்பட்ட நாவல்களில் ஒன்றாக உயிர்த்தேனைப் பார்க்கிறேன். ஒப்புநோக்க அவருடைய முதல் நாவலான “அமிர்தம்”(நேற்றுதான் படித்து முடித்தேன்) சிறப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111299/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38

யுயுத்ஸுவுடன் இடைநாழியில் நடந்தபோது குண்டாசி ஒவ்வொரு கணமும் இறுகியபடியே சென்றான். தன் தசைகள் அனைத்தும் இழுபட்டு விரல்கள் இறுக மடிந்திருப்பதை சற்று நேரம் கழித்து உணர்ந்து நின்று ஒவ்வொரு விரலாக தளர்த்தி உடலை எளிதாக்கிக்கொண்டான். இரண்டடி முன்னால் சென்று நின்று திரும்பி நோக்கிய யுயுத்ஸு “தங்கள் உடலில் வலி தெரிகிறது, மூத்தவரே” என்றான். அப்பேச்சை தவிர்க்கும்படி கைவீசி காட்டிய பின் ஆழ்ந்த இருமலொன்றுள் சிக்கி உடலதிர்ந்து இரு கைகளையும் தொடையிலூன்றி குனிந்து நின்று மூச்சிளைத்தான் குண்டாசி. அவனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110923/