Daily Archive: July 6, 2018

போகனுக்கு ஆத்மாநாம் விருது

2018 ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது கவிஞர் போகனுக்கு வழங்கப்படுகிறது. போகன் கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் தொடர்ச்சியாகப் பங்களிப்பாற்றி வருபவர். போகனுக்கு வாழ்த்துக்கள். கவிஞர் ஆத்மாநாம் விருது – 2018- அறிவிக்கை தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம். தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110939

எம்.எஸ். அலையும் நினைவுகள்-3

3. அன்னைப்பெருந்தெய்வம் இளமைப்பருவம் கடக்கவிருக்கும் தருவாயில் உருவாகும் வெறுமை ஒன்றுண்டு. அதுவரை ஆட்கொண்டிருந்த மோகினிகள் நம்மைக் கைவிடுகின்றன. அவை இளைஞர்களை மட்டுமே நாடிச்செல்பவை, இளமை அகன்றதும் தாங்களும் அகல்பவை. அதன்பின் உருவாகும் வெறுமை அச்சமூட்டுவது. அந்தக் காலகட்டத்தில்தான் பெரும்பாலானவர்களை இருளுலக தெய்வங்கள் பிடித்துக்கொள்கின்றன. அவர்களை தங்கள் இடையில் தூக்கி வைத்துக்கொள்கின்றன. இறப்பின்போது இறுதிமூச்சைக் கண்டபின் விட்டுச்செல்கின்றன   அந்தப்பருவத்தில் அடுத்த தெய்வம் வந்து ஆட்கொள்ளநேர்வது ஒரு நல்லூழ். அது விட்டுச்செல்லாது. நம்மை இறுதிவரை பேணி ஊட்டி ஊக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110751

காட்டில் அலைதல்

காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஐயா தள்ளிப் போட்டுக்கொண்டே வந்து, கடைசியில் காடு வாசித்து விட்டேன். காட்டிற்குள் முழுவதும் போகமுடியவில்லை. ஒரு கோணம். ஒரு பார்வை. ஒரு ஒளிக்கோடு மட்டுமே ஒரு வாசிப்பில் சாத்தியமாகியது. காட்சி விவரங்கள் என் மனதில் காட்டை உருவாக்கவில்லை.ஆனால் உணர்வு காட்டைக் கண்டுகொண்டிருந்த்து. அந்த அயினி மரம், ஒரே தடியாக இருந்தும் வெட்டப் படவில்லை. சலனமில்லாமல் சிறுத்தைக்கு உணவான தேவாங்கு, அந்த்த் தேவாங்கு போலவே சாதுவாக இருந்த ரெசாலம், தேவாங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110801

இமையத்தில் ஒருவன்

இமையத் தனிமை – 3 இமையத் தனிமை – 2 இமையத் தனிமை -1   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தனிமைப் பயணங்கள் தரும் ஆழ்ந்த புத்துணர்வும் அமைதியும் ஒரு ஆசிரம அமைப்பில் இருக்கும் போது மட்டுமே பெற முடியும்… இமய மலையில் கங்கை நதிக்கு மிக அருகில் நதியின் ஆர்ப்பரிக்கும் ஒலியுடன் அதனை பார்த்தவாறு இருக்கிறேன்… மிக எளிய மனம் கொண்ட மலைக்கிராம மக்கள்.. பெரும்பாலான நேரங்களில் மின்சாரம் கிடையாது ஆனால் அது இந்த குளுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110770

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36

அஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் குருதிகொள் கொற்றவையின் சிற்றாலயம் அமைந்திருந்தது. படைப்புறப்பாட்டிற்கு பலிபூசனை செய்வதற்கு மட்டுமே உரிய அவ்வாலயம் மாமன்னர் ஹஸ்தியினால் அந்நகரம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்தது. புராணகங்கையின் சிற்றோடைகள் பரந்தோடியமையால் பசுமை கொழித்த அந்த அரைச்சதுப்பில் அந்த இடம் மட்டும் வட்டமான வெற்றிடமாக கிடந்தது. அங்கே கன்றோட்ட வந்தவர்கள் அவ்வெற்றிடத்தை விந்தையாக கண்டனர். எங்கும் ஈரம் பரவியிருந்த அப்பகுதியில் உலர்ந்திருந்த அந்நிலம் அமர்வதற்குரியதென்றாலும் அதன் விந்தைத்தன்மையாலேயே அவர்கள் அங்கே அமரவில்லை. அமர முற்பட்ட இளையோரை முதியோர் தடுத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110862