Daily Archive: July 5, 2018

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்

  கோவை புத்தகக் கண்காட்சியை நடத்தும் கொடிஷியா அமைப்பு இவ்வாண்டு வாழ்நாள் சாதனைக்கான விருதை எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கவிருக்கிறது.இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது.விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில்  ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/110897

எம்.எஸ். அலையும் நினைவுகள்-2

எம்.எஸ். அலையும் நினைவுகள்-1 2. பூனையின் வழிகள் எம்.எஸ் பூனையைப்போன்றவர் என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. பூனை நம் வீட்டிலேயே வளர்ந்தாலும் கூட அதன் வழிகள் நமக்கு தெரிந்திருப்பதில்லை. முற்றிலும் எதிர்பாராத இடத்தில் நம் வீட்டுப்பூனையை நம்மால் பார்க்க முடியும். அது அளிக்கும் துணுக்குறல் நம் உடனிருக்கும் அந்த எளிய அழகிய இனிய விலங்கு நாமறியாத பல ஆழத்து அடுக்குகள் கொண்டது என்ற எண்ணத்தை உருவாக்கும். எம்.எஸ்.குறித்து நாம் சொல்வதெல்லாம் நமக்கு அவர் மிகக் கவனமாக அளந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110748

பலூன் கோடாரி -விஷால் ராஜா

“நான் பேசுவதற்கு விரும்புபவன். என் கவிதைகள் என்னைப் பேசாத இடத்திற்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” -ஷங்கர்ராமசுப்ரமணியன் நோக்கம் (purpose) அவசியமில்லாத ஒரே இலக்கிய வடிவம் என்று கவிதையைக் குறிப்பிடுவார்கள். கவிதைக்கென்று தீர்மாணமான ஒரு கருத்தோ, தரப்போ, திட்டமோ இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அடிப்படையில் மொழி எனும் அமைப்பு மட்டுமே அதற்குப் போதுமானது. மொழியின் நிச்சயமின்மைகளுக்குள் குழந்தைப் போல் கவிதை சுதந்திரத்துடன் ஓடி அலைகிறது. பொம்மை பாகங்களை இணைத்து ரயில்வே தண்டவாளத்தை எழுப்புவது போல் அது மொழியுடன் விளையாடுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110880

மைக்பிடுங்கிகள், அலப்பரைகள்

  ஜெ   நேற்று திருச்சியில் பெருந்தேவியின் கவிதைகளைப்பற்றி ஒரு கூட்டம். அதில் ஒருவர் எழுந்து கலாட்டா செய்து கவன ஈர்ப்பு செய்து பெரும்பாலும் கூட்டத்தை பயனற்றதாக ஆக்கிவிட்டார் அதைப்பற்றி பெருந்தேவி எழுதியது இது   ஆனால் கூட்டம் ஒருவரால் ஹைஜாக் செய்யப்பட்டது. கட்டுரைகள் வாசிக்கப்படும்போதே நடுநடுவே தன்னைப் பேச விடவில்லை, தூயன் போன்றவர்கள் தன்னைப் போல மனதில் தோன்றியதைப் பேசாமல், கட்டுரை எல்லாம் எழுதிக்கொண்டு வந்து பேசுகிறார்கள் என்றெல்லாம் வருத்தம் வேறு அவருக்கு. “நான் அப்படித்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110911

காப்பீடு -கடிதங்கள்

காப்பீட்டில் மோசடிகள் ஜெ   எந்த விதமான நுகர்வோர் நலன் என்றாலும் அது இந்தியாவுக்கு வரும்போது அதற்கென்று ஒரு நரித்தனம் வந்து விடுகிறது. காப்பீடு என்பது இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை பேரை தொட்டதில்லை. மேலும் மருத்துவ காப்பீடு என்பது படித்த அறிவார்ந்த மக்களின் விசேஷ சலுகையாக இருந்தது.  மேலை நாடுகளில் மருந்துகளின் பெயரை ஜெனிரிக் பெயரை வைத்துதான் எழுதித்தரவேண்டும் என்பது  போல இங்கே நினைத்து பார்க்க கூட முடியாது. மக்கள் பிராண்டின் பெயரை சொல்லி வளர்க்கப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110890

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35

தீர்க்கன் அரண்மனையின் உள்ளிருந்து மெல்ல வெளிவந்து அனைவரும் சென்றுவிட்டதை உறுதிசெய்த பின் குண்டாசியை நோக்கி ஓடிவந்தான். அவன் தரையோடு தரையாக கிடந்தான். தீர்க்கன் அவனைத் தூக்கி அமரச்செய்தபோது வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் கோழையாக எச்சிலும் குருதியும் கலந்து வழிந்தது. கருகிய உதடுகள் அசைந்து எதையோ சொல்லிக்கொண்டிருந்தன. தீர்க்கன் “என்ன? என்ன, இளவரசே?” என்றான். “என் தலை… என் தலைக்குள்” என்றான் குண்டாசி. ஏவலர் உதவியுடன் தீர்க்கன் அவனைத் தூக்கி அரண்மனையருகே இடைநாழியில் அமரச்செய்தான். குண்டாசியின் கைகள் இறந்தவைபோல அருகே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110731