Daily Archive: July 1, 2018

சுனில் கிருஷ்ணன் பாராட்டுவிழா உரைகள்

30-6-2018 அன்று சென்னையில் நிகழ்ந்த சுனில் கிருஷ்ணனுக்கான பாராட்டு விழாவில் நிகழ்ந்த உரைகள்          

Permanent link to this article: https://www.jeyamohan.in/110795/

காப்பீட்டில் மோசடிகள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள்  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது காப்பீடுகள் பற்றிப் பேச்சுவந்தது. குறிப்பாக தனிநபர் செய்துகொள்ளும் மருத்துவக் காப்பீடுகள் பற்றி. நான் சற்று பெரிய தொகைக்கே காப்பீடு செய்திருக்கிறேன். அது நண்பர்களை அதிர்ச்சியடையச் செய்தது. “என்ன நாலுபேர்ட்ட கேட்டு செய்யவேண்டாமா?” என்றார்கள். “பணத்த தூக்கி சும்மா குடுத்திருக்கீங்க. நல்லா ஏமாத்திட்டான் எவனோ” வழக்கறிஞரான நண்பர் சொன்னார், இந்தியச் சூழலில் பெரியதொகைக்கு காப்பீடு செய்வது என்பது மாபெரும் வீணடிப்பு. தொழில்துறைக்கு வெளியே தனியார் செய்யும் காப்பீடுகளில் காப்பீட்டுப் பணத்தைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110708/

கோவை பயணம் ரத்து

தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று நிகழவிருக்கும் கோவை நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை.   ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/110793/

ஆமிர்,நீர் -கடிதங்கள்

  ஆமீர்கான் -”நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா அன்புள்ள ஜெ   முதலில் என் காலை வணக்கங்கள்.   நான் காலையில் எழுந்தவுடன் ஒரு நல்ல செய்தியை வாசித்து விட்டுதான் அன்றைய நாளை தொடங்க வேண்டும் என்று நினைப்பவள்.   இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் போதே என் தொண்டை அடைத்து கொண்டது.   இந்த விழயத்தை படித்து நான் அறிந்து கொண்டது:   நல்ல மனிதர்கள் நம்முடன் இன்னும் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110681/

அம்மா வருகை – கடிதம்

அன்புள்ள ஜெமோ சார் அவர்களுக்கு வணக்கம்.     நேற்றிரவு நெடு நேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தேன்.காரணம் ’அம்மா வந்தாள்’.முப்பது ஆண்டுகளுக்கு முன் என் முப்பதாவது வயதில் தி.ஜாவை வாசிக்கத்தொடங்கியிருப்பேன்.அவரது அனைத்து நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்தேன்.ஆனால் அப்போதெல்லாம்  நாவல் வாசிப்பென்பது வெறுமனே கதையோட்டத்திற்கான ரசனையோடு மட்டுமே நின்று விட்டதற்காகவும் வாசிப்பைக் கூர்மைப் படுத்திக்கொள்ள தற்போதைய காலகட்டத்திலுள்ளதைப் போன்ற வசதிகளும் வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டதே என்கிற ஒரு அங்கலாய்ப்பும்,சிறுமையுணர்வும் ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110721/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31

அரசப்பேரவை போரின்பொருட்டு கூடத்தொடங்கிய பின்னர் ஒருபோதும் திருதராஷ்டிரர் ஒரு சொல்லேனும் அவையில் சொன்னதில்லை என்பதை அவையினர் உணர்ந்திருந்தனர். அவர் அங்கிருப்பதையே பல தருணங்களில் மறந்தும்விட்டிருந்தனர். சஞ்சயனின் அறிவிப்பு அவை முழுக்க திகைப்பையும் பின் முழக்கத்தையும் உருவாக்கியது. கனகர் கைகாட்ட கொம்பின் பிளிறலோசை எழுந்து அடங்க அவை அமைதிகொண்டது. திருதராஷ்டிரர் பீடத்தின் இரு பிடிகளிலும் கைகளை ஊன்றி உடலை உந்தி எழுந்து நின்றார். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி அவர் வணங்கியபோது அவருடைய பேருடலின் தசைகள் அசைந்தன. அப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110625/