Monthly Archive: July 2018

தணியாத தாகம்  

  தன்னை தனியனாகவும் உணர்வுகளால் நிறைந்தவனாகவும் உணரும் ஒருவன் முன்பு தான் கண்ட ஒரு பெண்ணை நினைத்துக்கொள்கிறான். அவளை ஒரு குளக்கரையில்தான் முதலில் அவன் காண்கிறான். அரசமரப்படித்துறையில் அவள் துணிதுவைத்துக்கொண்டிருக்கிறாள். அருகே ஒரு குடியானவப்பெண் வரட்டி தட்டுகிறாள். அவள் துணிதுவைப்பதும் அவளைச்சூழ்ந்திருந்த ஆறும் அப்பால் தன் பிம்பம் நோக்கித்தவம் செய்யும் நாரைகளும் எல்லாம் தனக்காகவே என அவன் உணர்கிறான். அந்த வரட்டிகளும் தனகாகவே தட்டப்படுகின்றன என்று எண்ணுகிறான்.   அவள் இசையறிந்தவள். அவள் பாடிக்கேட்கையில் அவன் உணரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111641/

மாத்ருபூமி பேட்டி -கடிதங்கள்

    மாத்ருபூமி பேட்டி அன்புள்ள ஜெ அவர்களுக்கு   July 29 மாத்ருபூமி இதழில் வெளியான உங்களின் விரிவான பேட்டியை தமிழில் வாசிக்க காத்திருக்கிறேன் ஆவணம் செய்யவும்   பிரியமுடன் சக்தி (குவைத்)     அன்புள்ள சக்தி     அந்தப்பேட்டி வழக்கமானதுதான். அதில் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டிய புதிய செய்திகள் இருக்காதென்றே நினைக்கிறேன். மேலும் இப்போது நேரமில்லை. வெண்முரசு ‘செந்நாவேங்கை’ முடியப்போகும் தருணம். காற்றில் பறக்கின்றன கணங்கள்   ஜெ   பெருமதிப்பிற்குரிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111741/

ஊர்வன்களின் உலகம்!

அன்புள்ள ஜெ https://youtu.be/Tt8ONu-slSM இந்த காணெளிக்காட்சியை  கண்டவுடன்  ஏற்பட்ட சிரிப்பை அடக்க முடியாமல் தங்களுக்கு இதை அனுப்புகிறேன்.  கூடிய விரைவில் கீழ்காணும் கடிதம் போன்றதை யாரேனும் ஒருவர் உங்களுக்கு அனுப்புவார்.அதனால் பதிலை இப்போதே பதிவுசெய்து வைத்திருக்கவும். …………………………………………………. அன்புள்ள ஜெ. சதி கோட்பாடுகளின் அடிப்படையில் உலகை ஆளும் இலுமினாட்டிகளில் நீங்களும் ஒருவர்  என்பதை பல்வேறு ஆதாரங்கள் மூலமாக  https://www.jeyamohan.in/110474#.W03Fj67hXqA நிருபித்தாலும் தாங்கள் ஏற்கவில்லை.இதோ மேலும் ஒரு புதிய ஆதாரம். இலுமினாட்டி களையே ஆளும்  ஊர்தன் (reptiliansஊர்வனவிலிருந்து தோன்றிய மனிதன் என்பதால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111345/

வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61

யுதிஷ்டிரரின் அவைமாளிகையை அங்கிருந்து நோக்க முடிந்தது. அவர்கள் அமர்ந்திருந்த கூடமும் ஒழுகியமையால் அது அசைவிலாது நிற்பதுபோலவும் அப்பாலுள்ள வான்புலத்தை நோக்கியபோது ஒழுகுவதுபோலவும் விழிகளுடன் விளையாடியது அது. அதன் பேருருவே அது அசையாது என்னும் எண்ணத்தை உள்ளத்துக்கு அளிப்பதை ஸ்வேதன் உணர்ந்தான். சின்னஞ்சிறுபொருட்கள் அசைவிலாதிருந்தாலும் உள்ளம் அதே துணுக்குறலை அடைகிறது. மரத்தரைகளில் அறையப்பட்டுள்ள ஆணிகளில் கால்கள் முட்டிக்கொண்டு புண்ணாவதை அவன் பலமுறை நோக்கியதுண்டு. பதினெட்டு காளைகளால் இழுக்கப்பட்டு நாற்பத்தெட்டு சகடங்களின் மேல் மெல்லிய அதிர்வுடன் ஒழுகிக்கொண்டிருந்த அம்மாளிகையை பார்த்தபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111615/

எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது

  யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில் தலைப்பு உட்பட பக்கத்துக்கு இருபது சொற்கள் நேரடியாக ஆங்கிலத்திலேயே இருந்தன) பைரப்பாவின் மரபு சார்ந்த மனம் சில அடிப்படைத் தரிசனங்களை ஏற்க மறுக்கும் பழமைசார்பு உடையது என்பது அனந்த மூர்த்தியின் பதில். 1990 ல் அனந்தமூர்த்தி சாகித்ய அகாதமிக்கு தலைவர் பதவிக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/189/

கல் அழகுறுதல்

கம்போடியா பயணம்   அன்புள்ள ஜெயமோகன் சார்,   “கம்பொடியாவில் நல்ல மழை. நனைந்தபடித்தான் ஆலயவளாகத்தைப் பார்க்கவேண்டும் என்றனர். மழை கல்லுக்கு மிகவும் பிடித்தமானது. கல் அழகுகொள்வது நனையும்போதுதான்”.   அப்படித்தான் இருந்தது சில நாட்கள் முன்பு தஞ்சாவூர் கோவிலில் மழை பெய்தபோது. நான் அப்போது எடுத்த நிழற்படங்கள் இவை. கடந்த ஆறு வருடங்களாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன் நான். என்னுடைய படங்களை உங்களிடம் காட்ட வேண்டும் என்ற ஆசை வெகுநாளாக இருந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111677/

பிழை -கடிதம்

பிழையின் படைப்பூக்கம் வணக்கம் திரு ஜெயமோகன்  தளத்தில் தொடர்ந்து வந்த கடிதங்கள் மூலம் பிழை சிறுகதையை அடைந்தேன். படிக்கையில் ஸ்டீபன் ஸ்வெய்க் எழுதும் கதைகளை படிக்கும் ஒரு அனுபவம் ஏற்பட்டது. ஸ்வெய்கின் பெரும்பாலான கதைகள் இருவருக்குள் நடக்கும் உரையாடல் மூலமே சொல்ல பட்டிருக்கும். நம்மிடம் கதை சொல்பவர் மற்றொருவருடன் அமர்ந்திருப்பார். அவர் அங்கிருந்து தன் கதையை சொல்ல துவங்குவார். அது நமக்கு உரையாடலாக தரப்பட்டிருக்கும். இவ்வாறு உரையாடல்கள் மூலம் கதை சொல்கயில் வாசகனை இன்னும் சற்று சுலபமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111461/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 60

காலையில் முதற்புலரியில் கரிச்சான் குரலெழுப்பும்போதே விழித்துக்கொண்ட ஸ்வேதன் தன்னைச் சுற்றி நிழல்கள்போல பாண்டவர்களின் படை அசைந்துகொண்டிருப்பதை கண்டான். எழுந்தமர்ந்தபோது பல்லாயிரக்கணக்கான பந்தங்களின் ஒளியில் உருவங்களும் நிழல்களும் இணைந்து பலமடங்காக பெருகிய படை பறவைமுழக்கம்போல் ஓசையெழுப்பி காலைச் செயல்களை ஆற்றிக்கொண்டிருந்தனர். அவன் எழுந்து உடலில் படிந்திருந்த புழுதியை தட்டினான். புலரிக்குளிரில் புழுதியை அள்ளியபடி தெற்கிலிருந்து மலைக்காற்று வீசியிருக்கக்கூடுமென்று உணர்ந்தான். குழலை அவிழ்த்து கைகளால் உதறி மீண்டும் சுழற்றிக் கட்டியபோதுதான் அரவானின் நினைவு வந்தது. குடிலுக்குள் நுழைந்து ஒருகணம் கழித்தே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111438/

மாத்ருபூமி பேட்டி

  இன்றைய மாத்ருபூமி நாளிதழில் வெளிவந்துள்ளது இந்த வாழ்வுவிவரிப்பு. எனக்கும் அருண்மொழிக்குமான காதல், எங்கள் மணவாழ்க்கை, அத்துடன் என் இலக்கியம் ஆகியவற்றை தொட்டுச்செல்லும் விரிவான பேட்டி. பேட்டியாளர் அருண் கோபி என்மொழியே  

Permanent link to this article: https://www.jeyamohan.in/111670/

வாசிப்பும் அ.முத்துலிங்கமும்

கணினியில் எழுதுவது… அன்புள்ள ஜெ   கணினியில் எழுதுவது பற்றி நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அ. முத்துலிங்கம் எழுதிய இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன் வாசகர் தேவை ஜெயராமன்   அன்புள்ள ஜெயராமன்,   அ.முத்துலிங்கம் அவருக்குரிய நையாண்டியுடன் இன்றைய எழுத்து வாசிப்புச் சூழலைச் சொல்கிறார்  அவர் சொல்வது ஒருவகையில் உண்மை. தமிழில் எண்பதுகளில் ஆண்டுக்கு சராசரியாக நாநூறு நூல்கள் வெளிவந்தன இன்றைக்கு சராசரியாக முப்பதாயிரம் நூல்கள். இவற்றில் எவ்வளவு நூல்கள் படிக்கப்படுகின்றன என்பது முக்கியமான கேள்வி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/111588/

Older posts «