Daily Archive: June 28, 2018

ஆமீர்கான் – “நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா

2012 ஆம் ஆண்டு, ஆமீர் கான், தூர்தர்ஷனில், தன் முதல் தொலைக்காட்சித் தொடரான, “சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)” வைத் துவங்கினார். இதில், சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் பலவற்றையும் அலசினார். பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்கள், அதைத் தீர்க்க முயலும் மனிதர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், அவற்றின் சமூகப் பரிமாணங்கள் எனப் பலதும் அலசப்பட்டன. சிறுவர் பாலியல் கொடுமை, பெண் சிசுக் கொலை, வறட்சி என பல தலைப்புகளில். இந்தத் தொலைக்காட்சித் தொடரின் முடிவில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110646

சிறுபான்மையினர் மலர்கள்

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு     தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2018 வாங்கினேன். தோப்பில் முஹம்மது மீரானின் கதை இருந்தது. ”சொர்க்க நீரூற்று” எங்கோ படித்த நினைவு வேறு. ஒருவேளை மீள்பிரசுரம் செய்தார்களோ என்னமோ தெரியவில்லை. அது மட்டுமே கிடைத்த ஒரே திருப்தி. ஒரு ஒப்பீட்டுக்காக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நாளிதழ், வார, மாத இதழ்கள் வெளியிட்டிருந்த தீபாவளி, பொங்கல் மலரை ஒரு பார்வை பார்த்தேன். பெரியதொரு வேறுபாட்டை உணர்கிறேன். இதை வேறெவரும் கவனித்தார்களா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110649

ரொறொன்ரோவில் தமிழ் இருக்கை

அன்புள்ள ஜெயமோகனுக்கு   வணக்கம். நலம்தானே.     இயல்விருது செய்தியை வெளியிட்டு படங்களையும் போட்டதற்கு மிக்க நன்றி. பல நாடுகளிலிருந்து விசாரித்தார்கள். உங்களுடைய இணையதளத்தின் பரப்பு ஆச்சரியமளிப்பது.   கனடாவில் வருடாவருடம் 6000 தமிழ் மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். இன்னும் பல மாணவர்கள் படிக்கிறார்கள் ஆனால் பரீட்சை எழுதுவதில்லை. ஆனால் சமீப காலங்களில் தமிழ் கற்கவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளதை என்னால் அவதானிக்க முடிகிறது. இங்கே 22 வயதான இளைஞனை சந்தித்தேன். தொல்காப்பியத்தில் அவர் நிபுணர் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110651

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28

பூரிசிரவஸ் அஸ்தினபுரியின் அரசவையிலிருந்து வெளியே வந்து இடைநாழியினூடாக விரைந்தபடி தன்னை நோக்கி ஓடிவந்த பால்ஹிகபுரியின் காவலர்தலைவன் நிகும்பனிடம் “என்ன செய்கிறார்?” என்றான். அவன் மூச்சிரைக்க அணுகிவந்து “அணி செய்துகொண்டிருக்கிறார்” என்றான். சென்றபடியே “ஒத்துழைத்தாரா?” என்றான் பூரிசிரவஸ். அவனுக்குப் பின்னால் குறடுகள் ஒலிக்க வந்த நிகும்பன் “இல்லை. அவருக்கு என்ன நிகழ்கிறது என்று புரியவில்லை. யானை மேல் ஏற்றி நகருலா கொண்டுசெல்லப் போகிறோம் என்று சொன்னதனால்தான் வந்தார். யானை மேல் அமரவேண்டுமென்றால் இவற்றை அணிக என்று சொன்னதனால் ஆடையணிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110612