Daily Archive: June 26, 2018

அந்த கதாநாயகி

‘கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்றால் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வராது. சிவாஜியும் பத்மினியும் நடித்த மரகதம் என்னும் சினிமா என்றால் நினைவுவரக்கூடும். அந்த சினிமாவின் முழுத்தலைப்பு மரகதம் அல்லது கருங்குயில்குன்றத்துக் கொலைதான். அக்காலத்தில் மிகப்பிரபலமான நாவல் அது. டி.எஸ்.துரைசாமி அவர்களால் எழுதப்பட்டது. அதை ஒட்டி திரைக்கதை எழுதியவர் எஸ்.பாலசந்தர். ‘குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ பாடல் இந்தப்படத்திலுள்ளதுதான். ஒரு நாவலை எப்படி சுவாரசியமான திரைக்கதையாக ஆக்கவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டவேண்டிய சினிமா மரகதம். பக்‌ஷிராஜா ஸ்டுடியோ சார்பில் ஸ்ரீராமுலு நாயுடு இயக்கிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110551/

தற்கொலை -கடிதங்கள்

அபிராமானந்தரின் கங்கை அன்புள்ள ஜெ சுவாமி அபிராமனந்தரின் மரணம் பதிவு வாசித்தேன். கூடவே தற்கொலை, தூக்கு தொடர்பான தங்கள் பிற பதிவுகளையும் வாசித்தேன். “பின் தொடரும் நிழலின் குரல்” ஏசுவின் வரிகளையும் படித்தேன். வடக்கிருத்தல் போன்ற சில நம்பிக்கைகளை அவரவர் இனக்குழு, மத அடிப்படையில் அங்கீகரித்தால், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் தேசத்தின் எல்லா இனக்குழு பற்றியும் அவர்தம் நம்பிக்கை பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து இருந்தால் மட்டுமே தர்மத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியும். தற்கொலையில் இன்னொரு சிக்கல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110538/

தன்வழிகள்

அன்புள்ள ஜெயமோகன், ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பி வந்த பின்பு உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்து ஒத்தி போட்டுக்கொண்டே காலம் கடந்துவிட்டது. எழுதனுமென்று நினைக்கும் போதெல்லாம் ஒரு சோம்பல் மற்றும் தயக்கம் தானாக வந்து விடுகிறது. “பக்தி,அறிவு,அப்பால் ” பதிவை படிக்க படிக்க உங்களுக்கு கடிதம் எழுதவேண்டுமென்ற எண்ணம் மீண்டும் வந்தது.  எழுதலாமென்று முடிவு செய்து விட்டேன் இப்போதைய என்னுடைய பிரச்னை (பல சமயம் என்னையும் மீறி) நான் யார்? என்னுடைய வேலை என்ன என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110453/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26

பால்ஹிகபுரியைவிட்டு பயணம் தொடங்கி பதினாறு நாட்களுக்குப் பிறகு பால்ஹிகருடன் பூரிசிரவஸ் அஸ்தினபுரியை சென்றடைந்தான். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவன் விட்டுச்சென்ற நகரமாக அது இருக்கவில்லை. எறும்புப்புற்றுபோல இடைவெளியில்லாமல் மனிதத் தலைகளால் நிறைந்திருந்தது. தெருவெங்கும் புரவிகளும் தேர்களும் செறிந்து நெறித்தன. எவரும் எவரையும் விழிநோக்காமல், அறியாமல் ஆகிவிட்டிருந்தனர். ஒவ்வொருவரும் பிறரை நோக்கி கூச்சலிட்டனர். அக்கூச்சல் இணைந்து பெருமுழக்கமாக எழுந்தமையால் மேலும் கூச்சலிட்டே அவர்களால் பேச முடிந்தது. ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து நெடுந்தொலைவு விலகிச் சென்றுவிட்டவர்கள்போல் தோன்றியது. வெறித்த முகங்களும் திறந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110284/