Daily Archive: June 23, 2018

செம்பன் துரை

படுகை – சிறுகதை அன்புள்ள திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு , ஒவ்வொரு நாளும் உங்கள் இணையதள வாசிப்பிற்குப் பின், “படுகை” சிறுகதை படிக்காமல் வெளிவர முடிவதில்லை. என்னால் படித்துத் தீர்க்க முடியாத கதையது. வாசிப்பின் கணக்கு ஐம்பதைத் தாண்டியிருக்கும். சிங்கி எனும் கதைசொல்லி, கள்ளின் ஊக்கத்தில் அரைச் சன்னத நிலையில் தான் வியக்கும் இரு பெரும் வடிவங்களை விதந்தோதும் சித்திரம் இன்னும் என்னுள் உருவாகிக்கொண்டே இருக்கிறது.அந்த வைக்கோல் போரின் மீது நானும் படுத்துக்கொண்டு, கழுத்தும் காலும் கொள்ளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110390

அழியாச்சுடர்

அன்புள்ள ஜெயமோகன் முன்னர் உங்களிடம் குறிப்பிட்ட மஹாகவி ருத்ரமூர்த்தியின் பா நாடகமான புதியதொரு வீட்டை உருவாக்கி விட்டேன். அது இவ்வாரம் 19 ஆம் 17 ஆம் திகதிகளில் காலை மாலை இரு காட்சிகளாக மேடை காண இருக்கிறது எனது 75 ஆவது வயதை இம்மாதம் 9 ஆம் திகதிதான் கடந்தேன். 76 ஆம் வயதில் புதியதொரு வீடு. இதில் பல பாடசாலைகளையும் சேர்ந்த மாணவர்கள் நடிக்கிறார்கள் .14- வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டோர் 1960 களின் பிற் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110429

பாவண்ணன், பி.கே.சிவக்குமார் -சுட்டிகள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. வீட்டில் அனைவரும் நலம் தானே. தங்களால் பாவண்ணனைப் பாராட்டுவோம் நிகழ்வில் கலந்துகொள்ள இயலாததால், அந்நிகழ்வு பற்றிப் பாவண்ணனின் நெருங்கிய நண்பர் திருஞானசம்பந்தம் எழுதிய கட்டுரையின் சுட்டி ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன். பாவண்ணனைப் பாராட்டுவோம் விழாவைப் பற்றி நண்பர் திருஞானம் எழுதியுள்ள கட்டுரை மலைகள்.காமில் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் ஒரு நாள் முழுக்க பாவண்ணன் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. பாவண்ணனின் தமிழ் இலக்கியத்துக்கான பங்களிப்பைப் பாராட்டி “வாழ்நாள் சாதனையாளர் விருதும்”, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110451

தமிழ்கற்கும் வழி

அன்புள்ள ஜெ, அலுவலக நண்பர் ஒருவருக்கு பரிசளிப்பதற்காக இன்று அமேஸானில் கொற்றவை ஆர்டர் செய்தேன். அதற்கு ஒரு ரிவியூ தான் இருந்தது. அது மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. “Verified Purchase” என்றிருப்பதால் உண்மையில் வாங்கியவரின் ரிவியூ தான் இது. அன்புள்ள சுரேஷ் இதில் பிழை என்ன உள்ளது? கொற்றவை வழியாகவும் தமிழ் கற்கலாம். அதன்பின் தினத்தந்தியைப் படித்தால்தான் புதிர் போல இருக்கும். கேரளத்தில் ஆங்கிலப்பேராசிரியராகப் பணிபுரியும் மூத்த நண்பர் சில காலம் முன்பு லண்டன் சென்றார். அங்கே அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110421

சுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது

கேந்திர சாகித்ய அக்காதமி 2018 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது நண்பர் சுனில் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழின் முக்கியமான எழுத்தாளராக சுனில் உருவாகி வருகிறார். விமர்சனத்துறையிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். காரைக்குடியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன் காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடுள்ளவர். காந்தி டுடே என்ற இணையதளத்தையும் நடத்தி வருகிறார் சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் ***   சுனில் மின்னஞ்சல் [email protected] காந்தி டுடே இணையதளம் சுநீல் கிருஷ்ணன் சுனீல்கிருஷ்ணனின் அம்புப்படுக்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110462

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23

பூரிசிரவஸ் தன்னுடைய பெருந்தோலாடையை அணிந்து அதன் கயிறுகளை முடிச்சிட்டு நிறுத்தி கைகளைத் தூக்கி அதை சரியாக உடல் பொருந்த சுருக்கிக்கொண்டான். அருகில் நின்றிருந்த பிரேமையை நோக்கி திரும்பி அவள் தோள்களில் தன் இரு கைகளையும் வைத்து “நான் மீண்டும் வருவேன். இங்குதான் நான் வந்தணைய வேண்டியிருக்கிறது” என்றான். அவள் சுண்ணக்கூழாங்கற்கள் போன்ற பற்களைக் காட்டி சிரித்து “ஆம், நீங்கள் மீண்டு வருவீர்கள். எனக்கு தெரியும்” என்றாள். அவள் முகம் கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் சுருக்கங்கள் கொண்டிருப்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110250