Daily Archive: June 21, 2018

காடும் நகரமும்

கதாநாயகன் ராஜா இளம்பொறியாளன்.  வாழ்க்கையை எதிர்கொள்ளும் துடிப்புடன் இருப்பவன். அழகன். பரம்பிக்குளம் ஆழியாறு நீர்மின் திட்டம் அப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தன் ஜீப்பை ஓட்டியபடி அவன் அந்த காட்டுப்பகுதிக்கு வேலையில் சேரும்பொருட்டு வந்து சேர்கிறான். காட்டில் மூன்று வகையான மக்கள் வாழ்கிறார்கள். மலைப்பழங்குடிகள். கட்டுமானப் பணிக்கென்று பல ஊர்களிலிருந்து வந்து தங்கியிருக்கும் கூலித்தொழிலாளர்கள். அவர்களுக்கு பொருட்களைக்கொண்டுவந்து விற்று மலைப்பொருட்களை வாங்கிச் செல்லும் வணிகர்கள்.  அந்த உலகில் கதாநாயகன் ஒரு அந்நியத்தன்மையை முதலில் உணர்கிறான். மிக மெல்ல அவனுக்கு அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109946/

என் உரைகள்-ஸ்ருதிடிவி இணைப்புக்கள்

நான்  ஆற்றிய உரைகளில் shruti.tv பதிவு செய்த உரைகளின் தனி playlistல் தொடர்ச்சியாக வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/playlist?list=PLPtYds6_0S7EPaM9Ou8Vknysy4JIBcaJS

Permanent link to this article: https://www.jeyamohan.in/110366/

நவீன நாவல் -எதிர்வினைகள்

நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை அன்பு ஜெ, எழுத ஆரம்பித்து முடிக்காத சிறுகதைகளும் கட்டுரைகளும் கடிதங்களும் கழற்றி நீக்க முடியாத குண்டலங்களைப்போல பலவடிவங்களில் என் உடலெங்கும் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன. வரும் மாதங்களில் சிலவற்றையாவது முடித்து விடுவேன் என நினக்கிறேன். இப்போதைக்கு முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் சுருக்கமாக எழுதலாம் என நினைக்கிறேன். கடலூர் சீனுவின் கடித்தில் உள்ள //வீழ்ச்சி ,கசாக்கின் இதிகாசம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110317/

ஓஷோ, ஒரு கடிதம்

பக்தி,அறிவு,அப்பால் அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ஓஷாவை அவரது ஹிந்தி சொற்பொழிவுகளையும் வாசித்து அறிவதால் மட்டுமே மேலதிகமாக புரிந்து கொள்ள முடியும்… சில நூல்களின் மொழியாக்கங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.   அவற்றில் மரபார்ந்த துறவறத்தின் நேர்மறைக் கூறுகள் குறித்து மிக விரிவாக பேசியுள்ளார். அவரது முதன்மை சீடர்களில் ஒருவரான மா தர்ம ஜோதி துறவறம் குறித்து அவரிடம் கேட்டதற்கு அனைத்தையும் துறப்பவன் மேலான அனைத்தையும் அடைகிறான் என கூறியிருப்பதை தன் பத்தாயிரம் புத்தர்கள் நூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110314/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21

பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது குடிலுக்குள் ஊன்கொழுப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நிழல்கள் அசைய பிரேமை நடந்தாள். அவன் எங்கிருக்கிறோம் என்று உணராது மலைத்த உள்ளத்துடன் நோக்கியபடி கிடந்தான். பிரேமை வந்து அவனைக் கண்டு “விழித்துக்கொண்டீர்களா?” என்றாள். அவள் கையில் சிறிய ஊன்நெய் விளக்கு இருந்தது. “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “எழுந்து முகம் கழுவுங்கள். உணவு சித்தமாக உள்ளது” என்றாள். “உணவா? இனி நாளை காலையில் மட்டுமே என்னால் உணவு உண்ண முடியும்” என்று அவன் சொன்னான். “முகம் கழுவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110234/