Daily Archive: June 20, 2018

எழுதழல் – முன்பதிவு

எழுதழல் வெண்முரசு நாவல் வரிசையின் பதினைந்தாவது படைப்பு. மகாபாரதப் போருக்கு முந்தைய காலகட்டமே இதன் களம். அணிமாற்றங்கள், அணிசேரல்கள், வஞ்சங்கள் ஆகியவையே இந்நாவலின் பேசுபொருள். ஆனால் இந்த வஞ்சங்கள் பாண்டவர்களின் மைந்தர்கள் வழியாகச் சொல்லப்படுகின்றன. கௌரவர்களின் மைந்தர்களும் கர்ணனின் மைந்தர்களும் கிருஷ்ணனின் மைந்தர்களும் இந்நாவலில் கதைமாந்தர்களாக வளர்கிறார்கள். ஏனென்றால் எல்லாப் போரும் அடுத்த தலைமுறையினரையே பெரிதும் பாதிக்கின்றன. மகாபாரதப் போரின் பலிகள் இம்மைந்தர்கள்தான். அவர்கள் தங்களுக்குரியதல்லாத போருக்குள் ஊழால் கொண்டுசெல்லப்படுகிறார்கள். 848 பக்கங்கள் கொண்ட நாவல் இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110377

இலக்கியத்துறையில் மாற்றங்கள்- உரை

சென்னையில் நமதுநம்பிக்கை – கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மாறும் யுகங்கள்  என்னும் தலைப்பில் நிகழ்ந்துவரும் சொற்பொழிவுத்தொடரில் 19 – 6-2018 ஆற்றிய சிறப்புரையின் சுட்டி..   ‘இலக்கிய துறையில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய சிறப்புரை https://www.youtube.com/watch?v=8eNunE6w4Ns  

Permanent link to this article: https://www.jeyamohan.in/110362

ஆர்.கே.சேகர்

 மலையாள சினிமாவில் பணியாற்றும்போதெல்லாம் ஆர்.கே.சேகர் பற்றிய பேச்சு எப்படியோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். அவரைப்பற்றிய ஒரு பெருமிதமும் நெகிழ்ச்சியும் மலையாளச்சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் ஒரு மேதை என்ற எண்ணமும் அதை கேரளமே அடையாளம் கண்டது என்ற எண்ணமும் கேரளத்தில் உள்ளது. பலபாடல்கள் இன்றும் வாழ்வதே முதற் காரணம். அதேசமயம் பல காரணங்களால் முழுமையாக வெளிப்படாமல் போன கலைஞர் என்றும் சொல்கிறார்கள். முதல்விஷயம் நல்ல மனிதர் என்பது. கலைஞர்கள் அப்படி இருக்கமுடியாது. அவர்கள் ஒருவகையான மூர்க்கமான சுயநலவாதிகளாகவே இருக்கமுடியும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110117

மன்மதன் ஒரு வாசிப்பு

மன்மதன் [சிறுகதை] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். மன்மதன் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ரேமண்ட கார்வரின் கதீட்ரல் கதையுடன் ஒப்பிட்டு வாசித்ததும்,  நல்ல அறிதலின் அனுபவமாக எனக்கு இருந்தது. அதன் மீதான என் வாசிப்பனுபவம் உங்கள் பார்வைக்கு. https://rendering-endeavors.blogspot.com/2017/11/kamadevan-short-story.html என்றும் அன்புடன், உங்கள் வாசகன் சிவமணியன் ***  மன்மதன் ஒரு வாசிப்பு மன்மதன் – ஒரு கடிதம் மன்மதன் கடிதங்கள் மன்மதன் -கடிதங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/110102

விஷ்ணுபுரம் -வாழ்வும் பண்பாடும்

விஷ்ணுபுரம் இணையதளம் அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தை தினந்தோறும் வாசிப்பதே என்முன் நிற்கும் மிகப்பெரிய குறிக்கோள். நான் உங்களை பின்தொடர்பவன், பலவற்றில் உங்கள் கருத்துதான் எனது கருத்தும். என்னைப்பொறுத்தவரை உங்களைத் தொடர்ந்து, உங்களுடைய உணர்வுகளில் நின்று, உங்களது பார்வையில் உங்களது கருத்தைக் கொண்டிருப்பதே, என்வரையில், மிகப்பெரிய வளர்ச்சிதான்.அறிவுப்பூர்வமான உரையாடலிலிருந்த பொறுப்பான ஆசிரியர், கடவுள் நம்பிக்கை அற்றவர், தனது கடமையைக் கண்ணாகச் செய்பவர், என்னுடைய இளமையில் சொன்னார். “பெண்களைப் பற்றிய எண்ணங்களும் காமமும் ஒருநாற்பது வயது வரைதான்”. அதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109991

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20

பிரேமை “நம் மைந்தன் பெருவீரன். காட்டெருதுகளை தோளில் தூக்கி வருபவன். ஒருமுறை சேற்றில் சிக்கிய பொதிவண்டியையே தூக்கி அப்பாலிட்டான். எங்கள் குடியின் பேருடலன். உங்கள் பால்ஹிக மூதாதையை ஒருநாள் அவன் தூக்கி மண்ணில் அறைவான்” என்றாள். பூரிசிரவஸ் “நன்று, நான் விழைந்த வடிவம்” என்றான். கால்கள்மேல் தோல்போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். பிரேமை சிறுமணையை அவன்முன் இட அதன்மேல் சைலஜை ஊன்துண்டு இட்டு கொதிக்கவைத்த சோளக்கஞ்சியை மரக்கோப்பையில் கொண்டு வந்து வைத்தாள். மரக்குடைவுக் கரண்டியால் அவன் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110229