Daily Archive: June 18, 2018

பக்தி,அறிவு,அப்பால்

அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? அன்புளள ஜெ.. ஓஷோவை முழுமையான வழிகாட்டியாக நினைப்பவர்கள் முழுமையான இருளையே அடைவார்கள் என்ற உங்கள் கருத்து எத்தனைபேருக்கு சரியான பொருளில் போய் சேர்ந்திருக்கும் என தெரியவில்லை…காந்தியை இந்திய தன்மைகளை கடுமையாக கேலி செய்தவர் அவர்.. இதைப்படித்துவிட்டு அதனடிப்படையில் காந்திக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்துக் கொண்டவர்கள் பலர்.. ஆனால் அந்த பேச்செல்லாம் ஒரு கவன ஈர்ப்புதான் ஒரு விளம்பர யுக்திதான் என அவரே பிற்பாடு எழுதியிருக்கிறார்அவரை முழுமையாக படித்தவர்களுக்கு அவர் ஒரு ஆன்மிக சுப்ரமண்ய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109998

பாண்டவதூதப் பெருமாள்

காஞ்சி முதல் ஊட்டிவரை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு இன்று மகன்களுடன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபாண்டவத்தூது பெருமாளை தரிசனம் செய்தேன். உங்களின் காஞ்சி –ஊட்டி பதிவு வாசித்தபின்னர் இங்கு வரவேண்டும் என விரும்பினேன். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திங்கட்கிழமை மீண்டும் திறப்பதால், இப்போது வராவிட்டால் இனி அடுத்தது நவம்பரில் தான் முடியும் என்பதால் சரண் அப்பாவை ராணிப்பேட்டைக்கு டிக்கட் போடச்சொல்லி நேற்று புறப்பட்டு வந்தேன். இத்தனை வருடத்தில் அவர் ஃபவுண்டரி இருக்குமிடத்திற்கு நானாக வருவதாகச்சொன்னது இதுவே முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110190

நோயின் ஊற்று

அன்புள்ள திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு, கடந்த இரு வாரங்களாக மீண்டும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு, அலுவல் நிமித்தமாக சென்று வந்தேன். கோடைச் சூரியனின் மிக நீண்ட நேர பகற் பயணம், ஐரோப்பிய மண்ணை சொர்க்கமாகவும் அதன் மக்களை வண்ணமயமாகவும் மாற்றும் காலமிது. இன்னும் எப்படிச் சொல்வதென்றால், பொற் சிகைக் காற்றில் தவழ, இடது மணிக்கட்டில் கறுப்பும் வெண்முத்தும் கலந்த நெகிழ்வளை பிரள, பருத்தி வெள்ளையில் நீலச்சிறு பூக்கள் பதித்த சிறிய ஸ்கர்ட் அணிந்த மடந்தைப் பெண்ணொருத்தி, கண்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110187

குருவாயூரின் மேகம்

இன்று கிருஷ்ணன் இல்லாமல் ஒரு பாட்டு கேட்கமுடியாத உளநிலை. பழைய பாட்டு ஒன்றை கேட்டேன். ஏறத்தாழ எல்லாருமே தெரிந்தவர்கள்.     எழுதியவர் எஸ்.ரமேசன் நாயர். குமரிமாவட்டத்தில் குமாரபுரத்தைச் சேர்ந்தவர். நண்பர் கே.பி.வினோதின் தாய்மாமன். மலையாளத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். சிலப்பதிகாரம், திருக்குறள், மற்றும் சங்கப்பாடல்களை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இசையமைத்தவர் ஜயவிஜயன். இரட்டையர். செம்பை வைத்யநாத பாகவதரின் மாணவர்கள். ஜேசுதாஸுக்கு அவ்வகையில் இளையவர்கள். ஜயனின் மைந்தர்தான் மலையாள நடிகர் மனோஜ் கே ஜயன். நான் ஜயவிஜயனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110286

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 18

க்ஷீரவதியை கடந்தபோது இந்திரமாயக்காரன் தன் கோலை வீசியதுபோல் பூரிசிரவஸின் உள்ளம் நிலைமாறியது. அதுவரை ஒவ்வொரு புரவிக்குளம்படிக்கும் உள்ளம் ஓரடி பின்னெடுத்து வைத்துக்கொண்டிருந்தது. அதன்பின் புரவிக்கு மிக முன்னால் சென்று வருக வருக என்று அது தவித்தது. அழைத்தது. மேலும் மேலுமென அதை குதிமுள்ளால் குத்தி ஊக்கினான். ஆனால் புழுதியும் உருளைக்கற்களும் பரவிய, சுழன்று சுழன்றேறும் சிறிய பாதையில் விரைவிலேயே புரவி வாயிலிருந்து நுரைவலை தொங்க தலைதாழ்த்தி உடலதிர்ந்து நின்றுவிட்டது. அவன் கீழிறங்கி அதன் கழுத்தைத் தடவி ஆறுதல்படுத்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110197