Daily Archive: June 16, 2018

ஜெயகாந்தன் வைரமுத்து உரை

அன்புள்ள ஜெ.. ஜெயகாந்தன் குறித்து வைரமுத்துவின் கட்டுரை வாசிபபு நிகழ்வு இன்று நடந்தது    திரளான கூட்டம்.. ஆழமான கருத்துகளை முன் வைப்பதைவிட வசீகரமான வாக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாணியிலான உரை.   செவ்வாயை தவிர்த்துவிட்டு புதன் இல்லை..  ஜெயகாந்தனை தவிர்த்துவிட்டு சிறுகதை உலகம் இல்லை என்பது போன்ற பரபரப்பான பஞ்ச்கள்… சு.ரா , ந பிச்சமூர்ததி , மௌனி போன்றோரைப் பற்றிய ஒன்லைனர்கள்  இலக்கிய ரீதியாக பொருளற்றவை என்றாலும் இவர்கள் பெயர்கள் எல்லாம் வெகுஜன பயன்பாட்டுக்கு வருவதை பார்க்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110154

நவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை

நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை நவீன நாவல் எனும் கலைவடிவம் இங்கே தமிழில் நிலைபெறுவதற்கு பின்புலமாக செயல்பட்ட உலக வரலாற்று சூழல், அதில் திரண்டு வந்த தத்துவம், ஆகியவற்றை தொடர்த்து தமிழில் நிகழ்ந்த நவீத்துவ அடிப்படைககள் கொண்ட நாவல்கள் சிலவற்றை குறிப்பிட்டு எழுத்தாளர் விஷால்ராஜா அவர்கள் ஒரு வரையறையை தனது உரையின் முதல் பகுதியில் முன்வைத்தார். அது ஒரு பொதுவான வரையறை. அங்கிருந்து துவங்கி எனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110225

செய்தி -கடிதங்கள் 3

செய்திதுறத்தல் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு அன்புடன், ‘செய்தி துறத்தல்” படித்தேன்.  முன்பொருமுறையும் ஒரு பதிவில்  ஊடகமும் செய்தித்தாள்களும்  அதீத உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஒரு சராசரி மனிதனை தினமும் உட்படுத்துவதைக் கூறியிருந்தீர்கள்.  அதன் மூலம் ‘பொங்காமல்’ செய்தி படிப்பது எப்படி என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துவருகிறேன்.  தொலைக்காட்சி செய்திகளையும் கூக்குரல் சண்டைகளையும் பார்ப்பதை நிறுத்தி ஒரு வருடங்களுக்கு மேலாகிறது.  அந்த நேரம் வீணாவதைத் தடுத்து மனதை ஆற்றுப்படுத்தியதற்கு நன்றி.   இப்போதெல்லாம் செய்தித் தாளும் காலையில் ஒரு டம்ளர் காஃபி குடிக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109540

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16

பால்ஹிகநகரியின் தெருக்கள் மிகக் குறுகியவையாக இருந்தன. ஒரு தேர் ஒரு திசைக்கு செல்லத்தக்கவை. அந்நகரை பூரிசிரவஸ் புதுப்பித்து அமைக்கும்போது கிழக்குக்கோட்டையிலிருந்து அரண்மனை வரைக்கும் நேராகச் செல்லும் நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை அமைத்தான். அஸ்தினபுரியில்கூட அத்தனை பெரிய அரசப்பாதை இல்லை என்று அவன் அறிந்திருந்தான். அவன் தந்தை “என்ன எண்ணுகிறாய் நீ? இங்கே என்ன சாலையிலேயே அங்காடிகளும் ஆட்டக்களங்களும் அமையவிருக்கின்றனவா?” என்றார். அவன் மறுமொழி சொல்லவில்லை. அவன் உள்ளத்தில் இருப்பது  இந்திரப்பிரஸ்தம் என்று அறிந்திருக்கவில்லை. அந்தப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110158